Thursday, June 15, 2023

பொருளாதாரம் பத்தி எழுத நான் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை.

  பணம் எவ்வளவு ஒரு அரசாங்கம் அச்சடிக்கலாம்..? அதோட மதி்ப்பு எப்படி நி்ணயிக்கப்படுகிறது...? இந்திய பணம் எழுபது ரூபாய்க்கு அமெரிக்க பணம் ஒரு டாலர் சமமாக இருப்பது ஏன்....?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்றதுக்கு முன்னாடி ஒரு கதைக்கு போகலாம்.
-----------------
ரூபாய், காசு, பைசா... இதெல்லாம் இல்லாத ஒரு பெரிய தீவை கற்பனை பன்னிக் கொள்ளுங்கள். பணத்தை பற்றியோ... பணம் என்கிற ஒன்று பற்றியோ தெரியாத மக்கள் அவர்கள். எல்லாமே பண்ட மாற்றாக நடக்கிற தீவு அது. உதாரணமாக....
முடி வெட்டற கடைக்கு போறவன் முடி வெட்டிக்கிட்டு கூலியாக வெட்டிக்கிட்டவன் வெட்டியவனுக்கு அவனோட தோட்டத்தில் விளைஞ்ச ரெண்டு கிலோ தக்காளியை கொடுப்பான்.
மளிகை கடையில் ரெண்டு கிலோ புளி வாங்கின இன்னொருத்தன் புளிக்கு பதிலாக அவன் வளர்த்த கோழியை கொடுத்து வாங்கிட்டு போறான்.
பணமே இல்லாத அந்த தீவில் எல்லாமே இப்படி பண்ட மாற்று முறை தான்.
--------------------
இங்கத்தான் ராமலிங்கம் அப்படிங்கற விவசாயி ஒருத்தர் ரொம்ப யோசனை பன்றார். அவருக்கு இருபது ஏக்கர் விவசாய நிலம் இருக்கு. வருசத்திற்கு இருபது டன் அரிசியை அவர் உற்பத்தி பன்றார். அவரும் பண்ட மாற்று முறையில் தான் வாழ்க்கையை நடத்தறார்.
விவசாய தேவைக்கு பொருள் வாங்க... அதாவது உரம், பூச்சி மருந்து வாங்க, அவர் வயலில் வேலை செய்யற கூலி தொழிலாளிகளுக்கு சம்பளம் கொடுக்க எல்லாத்திற்குமே அவர் வயலில் விளையற அரிசியைத்தான் பயன்படுத்தறார். ஏதாவது ஒரு பொருள் வாங்க போனால் கூட அரிசியை மூட்டை கட்டி எடுத்துக்கிட்டு போக வேண்டிய நிலை.
இதை தவிர்க்க ராமலிங்கம் ஒரு ஐடியா பன்றார்.
தன் விவசாய நிலத்தில் உற்பத்தியாகற அரிசி இருபது டன்னை கணக்கு பன்னி இரண்டு லட்சம் பத்திரங்களை தயார் பன்றார். பத்திரம்னா ராமலிங்கத்தோட பெயர் விலாசம் எல்லாம் போட்டு கீழே அவர் கையெழுத்தும் போடறார்.
இருபது டன் அரிசியை நூறு நூறு கிராமாக பிரிச்சி இரண்டு லட்சம் பத்திரங்களை தயார் பன்றார். இதோட அர்த்தம் என்னன்னா அவர் நிலத்தில் விளையற அரிசியை இரண்டு லட்சமா பிரிச்சி அதை பத்திரமாக்கிடறார்.
டீ குடிக்க போனால் இரண்டு பத்திரம், முட்டைக்கு ஒரு பத்திரம்னு பொருட்களை வாங்கிட்டு கொடுக்கிறார். அவங்களும் அந்த பத்திரத்தை வாங்கிக்கிட்டு அவங்களுக்கு அரிசி தேவைப்படறப்ப ராமலிங்கத்துக்கிட்ட திரும்ப கொடுத்து அரிசியை வாங்கிக்கறாங்க.
---------------------
இப்ப கதையோட அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.
ராமலிங்கத்திற்கு ஒரு தம்பி உண்டு அவர் பேர் சுந்தர லிங்கம். கொஞ்சமா கூட பொறுப்பு கிடையாது ... ஒரு தறுதலை அவர்.
சுந்தரலிங்கத்துக்கிட்ட சொத்தை பிரிச்சி வாங்கிட்டு தனியா போயிடறார். இப்ப அண்ணன் தம்பிகளுக்கு ஆளுக்கு பத்து ஏக்கர் நிலம் இருக்கு. அதாவது ராம லிங்கம், சுந்தர லிங்கம் இரண்டு பேருமே ஆளுக்கு பத்து டன் அரிசியை உற்பத்தி பன்ற தகுதியில் இருக்காங்க. ரெண்டு பேருமே இப்ப பத்து டன் அரிசிக்கான ஒரு லட்சம் பத்திரங்களை தனித்தனியா தயார் பன்னி உபயோகம் பன்றாங்க.
தம்பி தனியா போனால் கூட தறுதலையா இருக்கறதால சரியான உழைப்பு இல்லாம மற்றும் நிர்வாகத்தை கவனிக்கலை. இதில் தம்பி ஷோக்கு பேர்வழியும் கூட.
வேலை வெட்டி பார்க்காம செலவுக்கு அவர் பாட்டிற்கு பத்திரங்களை அடிச்சி தள்ளுறார். மக்களும் விவரம் தெரியாம வாங்கறாங்க.
ராமலிங்கம் ஒழுக்கமான முறையில் விவசாயம் பன்னி அவர் கிட்ட திரும்ப வரும் பத்திரங்கள் ஒவ்வொண்ணுக்கும் நூறு கிராம் அரிசியை கொடுக்கிறார்.
தம்பி சுந்தரலிங்கம் வகைதொகையில்லாம பத்திரங்களை அடிச்சி கொடுத்ததால் வெளியே ஐந்து லட்சம் பத்திரங்கள் வினியோகமாயிருக்கு. அவங்க பத்திரங்களை கொடுத்து அரிசி கேட்டதும் ஒரு பத்திரத்திற்கு வெறும் இருபது கிராம் அரிசியை கொடுக்கிறார்.
பத்திரம் வாங்கின மக்கள் சுந்தர லிங்கத்திடம் சண்டை போட்டதும் அட்டகாசமான ஒரு பதிலை சொல்றார்.
" என் வயலில் விளையறது மொத்தம் பத்து டன் அரிசி. அந்த பத்து டன்னிற்கு எத்தனை பத்திரங்கள் அடிக்கனும்கிறது என் உரிமை. விளைஞ்ச பத்து டன் அரிசியை நான் கொடுத்த ஐந்து லட்சம் பத்திரங்களுக்கு பங்கு பிரிச்சா இருபது கிராம் தான் வரும். அதை கொடுத்தாச்சி. விளையறதில் நான் கொடுத்த பத்திரங்களில் உள்ளபடி பிரிச்சி கொடுத்திட்டேன். பத்திரத்தில் ஒரு பத்திரத்திற்கு நூறு கிராம் அரிசின்னு நான் எந்த இடத்திலும் எழுதி கையெழுத்து போடலை. விளைச்சலில் பங்கு கொடுக்கறேன்னு தான் எழுதியிருக்கேன். "
..... அப்படி போட்டு தாக்கினதும் மக்கள் வேற வழியில்லாம ஒரு பத்திரத்திற்கு இருபது கிராம் தான்... சுந்தரலிங்கத்தின் கணக்கு சரி தான்னு கிளம்பிட்டாங்க.
---------------
இப்ப அண்ணன் ராமலிங்கத்தின் பத்திர மதிப்பு நூறு கிராம் அரிசின்னும் தம்பி சுந்தரலிங்கத்தின் பத்திர மதிப்பு இருபது கிராம் அரிசின்னும் முடிவு பன்னிட்டாங்க.
அடுத்த வருசம் வருது. அண்ணன் வழக்கம் போல வேலை பார்க்க, தம்பியும் வழக்கம் போல ஊதாரித்தனமா திரிஞ்சிக்கிட்டு பத்திரங்களை அள்ளி விட.....
இந்த வருசம் தம்பியோட ஒரு பத்திரத்தின் மதிப்பு வெறும் ஐந்து கிராமிற்கு வந்து விட அண்ணன் ராமலிங்கத்தின் பத்திர மதிப்பு நூறு கிராம் அரிசியிலேயே ஸ்டிராங்கா நிற்கிறது.
அடுத்தடுத்த வருடங்களில் இருக்கும் விவசாய நிலத்திலேயே விளைச்சல் மற்றும் வருமானத்தை அதிகப்படுத்த திட்டமிடுகிறார் ராமலிங்கம்.
ஒரு போக நெல் விவசாயத்தை போர் செட் போட்டு இரு போகமாக மாற்றுகிறார். ஆக விளைச்சல் இருமடங்கானதும் அவரின் பத்திரத்திற்கு இருநூறு கிராம் அரிசிக்கான மதிப்பு கிடைக்கிறது.
அதுமட்டுமல்லாமல் அந்த நிலத்திலேயே ஒரு பால் பண்ணையை சிறிதாக ஆரம்பித்து நூறு மாடுகளாக பெருகி தினம் ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
ராமலிங்கத்தின் பத்திரத்தில் உள்ளது படி அந்த பாலிலும் பத்திரம் வாங்கியவர்களுக்கு பங்கு வந்து விடுகிறது.
இப்போது கணக்கிட்டு பாருங்கள் புரியும். நூறு கிராம் அரிசிக்கு அதாவது ஒரு டீக்கு இரண்டு என மதிப்பிடப்பட்ட ராமலிங்கத்தின் பத்திரம் இப்போதும் அப்படியேவாகவா இருக்கும்...,?
இரண்டு போகம் விளைச்சல் என்றானதும் அதன் மதிப்பு இரட்டிப்பாகி ஒரு டீ க்கு ஒரு பத்திரம் என உயர்ந்து பால் உற்பத்தியானதும் நான்கு டீ க்கு ஒரு பத்திரம் என்று தானாகவே உயர்ந்து விடும்.
------------------
ஒரு நாட்டின் பண மதிப்பை எளிதாக புரிந்து கொள்ள இது போதும் என நினைக்கிறேன்.
வலுவான பொருளாதாரம் என்பது ஒரு தேசத்தின் உள் நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி யில் தான் உள்ளது.
தனது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மக்கள் எளிதான முறையில் பரிமாற்றம் செய்து கொள்ள வசதியாகத்தான் அரசாங்கத்தால் பணம் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்படுகின்றது.
மொத்த உள் நாட்டு உற்பத்தியை பொறுத்து அது மக்களிடம் எளிதாக பரிமாற்றம் அடைய எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என அந்தந்த அரசாங்கங்கள் தான் முடிவு செய்யும்.
அரசாங்கம் அச்சடித்து புழக்கத்தில் விடும் பணத்திற்கு ஏற்ப பணத்தின் மதிப்பு இருக்கும்.
இந்தியா சுதந்திரம் அடைந்த போது பிரிட்டிஷ் பவுண்ட்டிற்கு இணையாக பணத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டு அதாவது ஒரு ரூபாய்க்கு ஒரு பிரிட்டிஷ் பவுண்ட் என்று அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டதாக எனக்கு எங்கோ படித்த ஞாபகம் உள்ளது.
சுதந்திரம் அடைந்த பின் எழுபது வருடங்களாக ஆண்ட காங்கிரஸ் அரசு உள்நாட்டு உற்பத்தியை பெருக்காமல் அடித்து தள்ளியதின் விளைவு இன்று பிரிட்டிஷ் பவுண்ட் ஒன்றிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு 88.12 என்ற அளவிற்கு உள்ளது.
---------------
முதலில் ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு எதிராகத்தான் நமது அரசு அச்சடித்து வெளியிடும் பணத்தின் மதிப்பு தானாகவே மதிப்பிடப்படுகிறது. இதை எந்த வெளிநாட்டுக்காரனும் வந்து செய்வதில்லை.
நமது இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது அதாவது விலைவாசி உயர்கின்றது எனில் நாம் அரசிடம் வாங்கும் இலவச பொருட்களுக்காக அரசு அச்சடித்து வெளியிடும் பணமும் ஒரு முக்கிய காரணம். மக்களின், தேசத்தின் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இலவசமாக பொருட்களை கொடுத்து ஓட்டு வாங்க அரசு செய்யும் தறுதலைத்தனம் தான் விலைவாசி உயர்வு. மேலே உள்ள கதையில் சுந்தரலிங்கம் சொகுசு வாழ்க்கைக்காக பத்திரங்களை அடித்து தள்ளிய கதை தான். கடைசியில் பத்திரங்களை வாங்கியவனுக்கும் ஏமாற்றம் தான் மிஞ்சும். அதைப்போலத்தான் இலவசங்களை வாங்கியவனுக்கும் அவன் கையில் உள்ள பணமும் மதிப்பிழந்து விடும்.
-------------
ரூபாய் மதிப்பு பிற நாட்டு பணத்திற்கு எதிராக சமமாக இல்லை.... அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு என்பது பற்றி......
இன்றைய ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 69.50
பிற நாட்டு பணத்திற்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்பது பிரச்சனையே அல்ல... அது மேலும் மதிப்பு குறையாமல் நிலையாக இருக்க வேண்டும் என்பது தான் மேட்டர்.
இன்று ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ஜப்பான் யென் மதிப்பு 108.45
இந்த வகையில் பார்த்தால் இந்திய பொருளாதாரத்தை விட ஜப்பான் பொருளாதாரம் குறைந்தது என்றால் அது சுத்த முட்டாள் தனம்.
அந்தந்த தேசத்திற்கு உள்நாட்டு உற்பத்தியின் அளவிற்கு ஏற்ப முடிவு செய்து பணத்தை புழக்கத்தில் விடுகின்றன. ஜப்பான் தேசமும் தனது மக்களுக்காக புழக்கத்தில் விட்ட பணத்தின் அடிப்படையில் அமெரிக்க டாலருக்கு நிகரான யெண் 108.45 என வருகிறது.
----------------
பணமதிப்பு குறைகிறது... பணவீக்கம்....்புரியும்படி சொன்னால் விலைவாசி ஏற்றத்திற்கு முக்கிய காரணம் உள்நாட்டு மொத்த உற்பத்தியை பெருக்குவதற்கு எந்த முயற்ச்சியும் எடுக்காமல் வகை தொகையில்லாமல் பணத்தை அடித்து வெளியிடுவது தான்.
பட்ஜெட்டில் துண்டு என்று ஒரு தொகையை ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கடைசி வரியில் ஒரு தொகையை குறிப்பிட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அதென்ன துண்டு...?
வரவிற்கு மேலான செலவு .,.. அதாவது அரசிற்கு வரும் அனைத்து விதமான வருமானத்துற்கும், செலவிற்கும் இடைப்பட்ட பற்றாக் குறை தொகை தான் அது.
அதை சரிக்கட்ட என்ன செய்வார்கள்...? வேறு என்ன.... பணம் அச்சடிப்பார்கள். அதற்கும் ஒரு வரைமுறை உள்ளது.
அரசு பட்ஜெட்டில் உள்ள மொத்த வருமானத்தில் 4% வரை ஒரு ஆரோக்கியமான பற்றாக்குறை என பொருளாதார வல்லுனர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
வளர்ந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறைக்காக புதிதாக அச்சடிக்கப்படும் பணம் புழங்குவதற்கான இடத்தை நிரப்பி விடும். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உயர்வு 7% ற்கு மேல் உள்ளதை கவனத்தில் கொள்ளவும்.
----------------
சரி அந்த கதையை மீண்டும் தொடரலாம்.
புரிதலுக்காக.....
1. ராமலிங்கம். - இந்தியா
2. சுந்தர லிங்கம் - பாகிஸ்தான்
3. பத்திரம் - பணம்
சுந்தர லிங்கம் பத்திரம் மேல பத்திரமா அடிச்சி அவரோட பத்திரத்திற்கு மதிப்பில்லாம போயிட்டு.
ஏன்னா வாங்கறப்ப ஐந்து கிராம் அரிசிக்கு மதிப்பான அந்த பத்திரம் மறுநாளே ஒரு கிராம் மதிப்புன்னா எவன் வாங்குவான்...? வேலையும் உருப்படியா செய்ய வக்கில்லை.
ஆனாலும் சுந்தர லிங்கம் செல்வச் செழிப்பா இருந்தான். அது எப்படி சாத்தியம்னு யாருக்குமே புரியலை.
ராமலிங்கத்திற்கும் ஏதோ தப்பு நடக்குதுன்னு கொஞ்சம் சந்தேகமாவே இருந்தது. கொஞ்சம் தீவிரமா ஆராய்ச்சி பன்னப்பத்தான் அந்த ரகசியம் தெரிஞ்சது.
அண்ணன் ராமலிங்கத்தோட பத்திரத்தை தயார் பன்னி அவர் போலவே கையெழுத்து போட்டு திருட்டுத்தனம் பன்னி சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கான் தம்பி சுந்தர லிங்கம். இதுக்கு பக்காவா ஸ்கெட்ச் போட்டு கொடுத்து கமிஷன் பார்க்கறது அவர்கிட்ட முன்னாடி கணக்குபிள்ளை வேலை பார்த்த தாம்பரம் செட்டியார்.
பார்த்தார் ராமலிங்கம். தன்னோட பழைய பத்திரமெல்லாம் செல்லாதுன்னு அறிவிச்சி அதுக்கு பதிலா வேற யாரும் தயாரிக்க முடியாத புது பத்திரங்களை மக்களுக்கு மாத்தி கொடுத்திட்டார்.
இப்ப சுந்தர லிங்கத்திற்கு போலி பத்திரம் தயாரிக்க முடியலை. அவர் ஏற்கனவே ஊர் முழுக்க கடன் வாங்கி வச்சிருக்கறதால புதுசா கடன் கொடுக்க யாரும் இல்லை. ஏற்கனவே வாங்கின கடனிற்கு வட்டி கட்டவே வழியில்லை. வருமானம் இல்லாததால் புவ்வாக்கு லாட்டரி அடிக்கற நிலமைக்கு வந்திட்டார்.
அரேபிய தெரு, உலக வங்கி தெரு, சப்பை மூக்கன் தெருன்னு பல தெரு சுத்தியும் இவனுக்கு பிச்சை போடக்கூட யாரும் முன் வரலை.
இதே நிலமை நீடிச்சா கூடிய சீக்கிரம் திருவோடு ஏந்திக்கிட்டு அண்ணன் ராமலிங்கம் இருக்கற இந்தியா தெரு பக்கமும் பிச்சை எடுக்க கண்டிப்பா வருவான். அவனுக்கு பிச்சை போடனும்னு இங்கே இருக்கிற இம்ரான் கான் பிள்ளைங்க ஒப்பாரி வைக்கறதும் நடக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...