சோ ராமசாமி என்று அழைக்கப்படும் சீனிவாச ஐயர் ராமசாமி, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடிகர், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர், ஆசிரியர், அரசியல் நையாண்டி, நாடக ஆசிரியர், உரையாடல் எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் மற்றும் வழக்கறிஞர் ஆவார்.
அவர் 1960 மற்றும் 70 களில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்தார், மேலும் அந்த காலகட்டத்தில் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தார்.இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.
1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
சோ ராமசாமி, 2016 டிசம்பர் 7 அன்று காலை 4 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். நகைச்சுவை நடிகர் சோ.ராமசாமியின் சகோதரி மகள்தான் நடிகை ரம்யா கிருஷ்ணன்.. ஆரம்ப காலத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க வந்தது பிடிக்கவில்லை ஆனாலும் பின்னால் அவர் நடிப்பைக் கண்டு பாராட்ட தவரவில்லை சோ அவர்கள்...

No comments:
Post a Comment