தகப்பனார் ,
பாட்டனார்,
முப்பாட்டனார்,
மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது
காரணம்.
குழந்தை பிறக்க மூலகாரணமான பொருள், ஆணிடமுள்ள சுக்கிலம்''
எனப்படும் தாதுவாகும்.
இந்த தாதுவில் எண்பத்து நான்கு அம்சங்கள் உள்ளன ;
அதில் இருபத்துஎட்டு அம்சங்கள் , அந்த மனிதன் உட்கொள்ளும் உணவு , மற்றும் அருந்தும் நீர் முதலியவற்றால் உண்டாவை ;
தந்தையிடமிருந்து இருபத்தியொரு அம்சமும்
பாட்டனாரிடமிருந்து பதினைந்து அம்சமும்
முப்பாட்டனாரிடமிருந்து பத்து அம்சமும்
நான்காம் மூதாதையிடமிருந்து
ஆறு அம்சமும்
ஐந்தாம் மூதாதையிடமிருந்து மூன்று அம்சமும்
ஆறாம் மூதாதையிடமிருந்து
ஒரு அம்சமும்..
என ஆறு தலைமுறையினரின் ஐம்பத்தியாறு அம்சங்கள் ஏழாம் தலை முறை மனிதனின் சுக்கிலத்தோடு தொடர்பு கொண்டவை !
இதில் அதிகமாக தங்கள் அம்சத்தை தங்கள் வாரிசுகளுக்குத் தருபவர்கள் , தகப்பனார் , பாட்டனார், முப்பாட்டனார் ஆகிய மூவரே!
எனவே தான் , திவசத்தின் போது இந்த மூவரின் பெயர்களைக் கூப்பிட்டு பிண்டம் கொடுக்கப்படுவது வழக்கத்திலுள்ளது.
No comments:
Post a Comment