Monday, June 12, 2023

பசுவை தன் தாய்க்கு ஈடாக எண்ணிய நீங்க உண்மையிலேயே ஆயிரத்தில் ஒருவன்தான் !

 தெருவோரத்தில் ஒரு வாழைப்பழ வியாபாரி பழம் விற்றுக்கொண்டிருந்தார். பலர் அவரிடம் வாழைப்பழங்களை வாங்கிக்கொண்டிருந்தனர்

அப்பொழுது எங்கிருந்தோ ஒரு பசு திடீரென்று அந்த கடையை நோக்கி ஓடி வந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் சிதறி ஓடினர். அந்த பசு கடையின் அருகில் வந்து வாழை சீப்புகளை எடுத்து உட்கொள்ள ஆரம்பித்தது. அருகில் நின்றுகொண்டிருந்த அனைவரும் அந்த பசுவை கற்களாலும், கம்புகளாலும் தாக்கத் தொடங்கினர். அந்த பழக்கடையின் உரிமையாளர் பதறிப்போய் மக்கள் அனைவரையும் தடுத்தார். அடிக்காதிங்க அடிக்காதிங்க என்று கத்தினார்.
என்ன ஐயா உங்க பழக்கடைல இருந்து பழங்களை சாபிடுது நீங்க என்னடானா அடிக்க வேண்டாம்னு சொல்லுரிங்க? என்று கேட்டார்.
அது பாவம் பா, வாயில்லா ஜீவன், நமக்கு ஆறறிவு இருக்கு அதனால நம்ம உழைச்சு சாபிடுறோம்.. நம்ம அளவுக்கு அதுக்கு அறிவு இல்லாதனால அது இப்படி இருக்கு.
அந்த பசு என்ன பாவம் பண்ணுச்சு, எத்தனை நாள் தான் அதுவும் மேய புல்லு இல்லாம சுவரோட்டிகலையே தின்னுகிட்டு இருக்கும். விடுங்க அது போகட்டும் என்றார் அவர்.
என்ன அய்யா இப்படி சொல்லுரிங்க... அந்த பசு இப்படி சாப்டா உங்களுக்கு நஷ்டம் வராதானு கேட்டேன். அதற்க்கு அவர் தந்த பதில் என்னை கலந்கடித்தது.
அந்த பெரியவர் சொன்னார் என்ன பெருசா நஷ்டம் வந்துற போகுது? நீங்க பேரம் பேசி என்கிட்ட பழம் வாங்கி நஷ்டப்பட வைகிறீங்க.. அந்த நஷ்டத்த விடவா இந்த பசுமாடு எனக்கு நஷ்டம் ஏற்படுதிர போகுது...?
எங்க ஆத்தாக்கு ஆக்கி போட எனக்கு கொடுத்துவைகல எங்க ஆத்தாக்கு கொடுக்குறதா நெனச்சு இந்த பசுமாட்டுக்கு கொடுக்குறேன் என்றார்.
May be an image of 1 person and animal
All react

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...