Wednesday, June 7, 2023

பழைய செய்தி தான் ஏனோ இப்ப ஞாபகம் வருது .

 அமெரிக்காவில் 1968ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரையிலும் ஜனாதிபதியாக இருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியை சேர்ந்த நிக்சன் 1968ம் ஆண்டில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 தேர்தலில் மீண்டும் வென்றார். அப்போது அவர் மீது வாட்டர் கேட் ஊழல் புகார் சுமத்தப்பட்டது. எதிர்கட்சியான ஜனநாயக கட்சி தலைமையகம் இயங்கும் வாட்டர் கேட் மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைபொருத்தி அக்கட்சியினரிடம் உரையாடல்களை பதிவு செய்து, அக்கட்சியினரின் தேர்தல் வியூகங்களை தெரிவிந்து கொண்டார் என்பதுதான் அந்த ஊழல் குற்றச்சாட்டு.

1974ம் ஆண்டில் இந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்தது. பின்னர் ஒட்டுக்கேட்டது உண்மைதான் என்றும், அதை மறைக்க திட்டமிட்டதும் உண்மைதான் என்றூம் ஒப்புக்கொண்டார். ஆனால் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மாட்டேன் என்றார். உண்மையை ஒப்புக்கொண்டால் மன்னிப்பு கிடைக்கும். பதவி பறிபோகாது என்று நினைத்திருந்தார். பின்னர்நெருக்கடியை அடுத்து 9.8.1974 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அப்போது துக்ளக் இதழின் அட்டைப்படத்தில் இந்த செய்தி இடம்பெற்றிருந்தது. 15.8.74 தேதியில் வெளிவந்த துக்ளக் இதழின் அட்டைப்படத்தில் இருக்கும் கார்ட்டூனில், இந்திராகாந்தி -கருணாநிதி இருவரின் படத்தையும் தொங்கவிட்டு, அவர்களை பார்த்து, "தப்பு பண்ணிட்டேன்! தப்பு பண்ணிட்டேன்! உங்ககிட்ட முதலிலேயே யோசனை கேட்டிருக்கலாம். எவ்வளவோ வழிகள் கத்துக் கொடுத்திருப்பீங்க..!’’ என்று நிக்ஸன் கேட்பது போல் அந்த அட்டைப்படம் அமைந்திருக்கிறது.
May be an image of 2 people and text
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...