இதயத்துடிப்பே, இன்ப மூச்சே
இளம் சிங்கமே, இருமல் மருந்தே,
இப்படியெல்லாம் - சமயத்தில் தப்பும் தவறுமான தமிழில் - கேனைத்தனமான வார்த்தைகளில், ராட்சஷ பேணர்கள் ரோட்டை அடைத்து வைக்கப்படவில்லை!! குறுக்கும் மறுக்குமாக கட்சிக்கொடி தோரணங்களோ, பிரமாண்ட வரவேற்பு வளைவுகளோ, பகட்டையும், பணத் திமிரையும் ஊருக்கு காட்டும் மேடை அலங்காரமோ எதுவுமே கிடையாது!!
கட்சி (கரை)வேட்டிகளும், கூட்டணி கட்சியினரின் கூட்டமும் மண்டபத்தை அடைத்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தும் சாக்கில், எதிர்கட்சியினரை
திட்டி அரசியல் பேசும் பகுத்தறிவு அலம்பல் கிடையாது!! மீடியாக்களின் வெளிச்சம் சுத்தமாக கிடையாது!!
நேற்று முன்தினம் பெங்களூரு தனியார் ஹோட்டல் ஒன்றில் மிக எளிமையாக நடந்த அந்த திருமணத்தில்.... மணமகளின் அம்மா உலகமே உற்று கவனிக்கும் இந்தியாவின் நிதியமைச்சர்!!
அதுவும் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாட்டின் நிதியமைச்சர்!!
அவர் நினைத்திருந்தால் ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள்,
மாநில முதலமைச்சர்கள் அமைச்சக அதிகாரிகள், பாலிவுட் நடிகர்கள்,
VVIP-கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் என்று பெரிய பட்டாளத்தையே வரவழைத்து அந்த திருமணத்தை, இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பிரமிப்பாக நடத்திக் காட்டியிருக்க முடியும்!!
ஆனால் இப்படியெல்லாம் பகட்டையும், பணத் திமிரையும், ஆடம்பரத்தையும் காட்டி பாமர மக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு, - "அரசியல்தனமான திருமணத்தை" - செய்வதற்கு திருமதி நிர்மலா சீதாராமன் ஒன்றும் ஊழல் செய்யும் அமைச்சர் கிடையாதே!!
அவர் மோடிஜி போன்றே, தன் சொந்த வாழ்க்கையையும் அரசு பதவியையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க தெரிந்தவராக இருக்கிறாரே!!
இந்த எளிமையெல்லாம் "திராவிட மாடல்களுக்கு" எங்கே புரியப்போகிறது!!
No comments:
Post a Comment