Saturday, June 10, 2023

அப்பளம் உப்பலாக இருக்குதே கோபத்தை போல.

 சமீபத்தில் ஒரு திருமண விழாவிற்கு சென்று இருந்தோம்.

மதிய உணவு பந்தி ஆரம்பம் ஆனது.
சரி, முதல் பந்திக்கே ஏன் ஓட வேண்டும் என நினைத்து உறவினர்களிடம் பேசி கொண்டு இருந்ததில் கொஞ்சம் நேரம் போனது.
பிறகு கல்யாண வீட்டினர் வற்புறுத்தி அழைக்கவும் சாப்பிட போனேன்.
என் நேரம்,
என் வரிசைக்கு முன் உள்ள வரிசையில் எல்லாம் சரியாக இருந்தது.
நாங்கள் அமர்ந்த வரிசையில் எதுவுமே வைக்க வில்லை.
பின் அவர்களாக வந்து இலை தீர்ந்து விட்டது. வாங்க பையன் போய் இருக்கான்.
ஒரு ஐந்து நிமிடம்.
இதோ வந்துடுவான் என கூறினார்கள்.
அப்போது ஒன்றும் தோணவில்லை.
கொஞ்ச நேரம் என்பது 5, 10 15 நிமிடங்கள் ஓடியது.
எங்கள் வரிசையில் அமர்ந்து இருந்தவர்கள் நெளிய ஆரம்பித்தார்கள் .
பந்தியில் சும்மா உக்காந்து இருக்கவும் வெறுப்பு. வாழை இலை வாங்க தோட்டத்துக்கே போய் விட்டான் போல என நினைத்தேன்.
நேரம் ஆக ஆக கடுப்பு ஏறியது.
BP எகிறியது.
இன்னமும் வரவில்லை.
ஒருவேளை, இப்பத்தான் வாழைக்கன்று நட்டு இருப்பான் போல.
அது வளர்ந்து, இலை விட்டதும் அறுத்துகிட்டு வருவான் போல என நினைத்தேன்.
அடுத்த கொஞ்ச நேரத்தில்
உண்மையில் கடுப்பு தலைக்கு ஏறி விட்டது. எப்பதான்டா சோறு போடுவீங்க..??
போடுவீங்களா மாட்டீங்களாடா..?
என கத்தி கேட்க தோன்றியது..
பிறகு கொஞ்ச நேரம் கழித்து
அப்பாடா,
ஒரு வழியாக ஒரு சிறுவன் வாழை இலை கட்டை தூக்கி கொண்டு வந்தான்.
இலையை வரிசையாக போட்டார்கள்.
அடுத்து தண்ணி வைக்க ஆளில்லை.
பந்தி பரிமாறிய பசங்க எல்லாம் இடையில் , பிரேக் ஆனதால் ஆளுக்கொரு பக்கம் சென்று விட்டார்கள்.
பின் ஒரு வழியாக கிடைத்த ஆட்களை வைத்து சோறு போட்டார்கள்.
பாதி சாப்பிடும் போது கொஞ்சம் நிதானம் வந்தது. ஒரு வழியாக சாப்பிட்டு முடித்து, பந்தியில் இருந்து எழுந்த போது,
எனக்குள் இருந்த கடுப்பு எரிச்சல் கோபம் எல்லாம் மறைந்து விட்டது.
கையை கழுவும் போது, இவ்வளவு ஆட்களுக்கு பந்தி பரிமாறும் போது இதெல்லாம் சகஜம் என நினைத்தேன்.
அப்புறம் ஐஸ் கிரீம் சாப்பிடும் போது,
அடடா, நல்ல சாப்பாடு.
இதை கொடுக்க விசேஷ வீட்டு காரங்க எவ்வளவு சிரம பட்டு இருப்பாங்க..
பாவம்
என நினைத்தேன்..
அதாவது பசியில் ஒரு மனநிலை,
வயிறு நிரம்பியதும் வேற மனநிலை என்று ஆனது.
உங்கள் அனுபவம் எப்படி...????
May be an image of biryani
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...