1.எந்தச் சூழலிலும் வாய்ச் சண்டையோடு முடித்துக் கொள்ள வேண்டும். கணவன் மீது எப்போதும் கை வைக்கக் கூடாது.
2.சாப்பாடு எப்டி இருக்கு? என்று கத்தியைக் கையில் வைத்தபடி கேட்கக் கூடாது. அதை போலவே, சாப்பிடும் ஐட்டத்தின் பெயரை சரியாகச் சொல் எனும் கடுமையான கேள்விகளைக் கேட்கக் கூடாது.
4. வெளியே சாப்பிடச் சென்றால் மெனு சுதந்திரம் முழுமையாக அளிக்கப்பட வேண்டும். உனக்கு இது பிடிக்கும் இது பிடிக்காது என்று நமக்கே தெரியாத நம்மைப் பற்றிய ரகசியங்களை நமக்கே கட்டளையிடக் கூடாது.
5. டிவி ரிமோட் எனும் இயந்திரம் எப்படி இருக்கும், அதை எப்படி ஆப்பரேட் செய்வது என்று கணவன் மறந்து போகும்படி செய்யக் கூடாது. வாரத்திற்கு ஒரு நாளாவது அதை கணவரின் கையில் தர வேண்டும்.
6. வீட்டிற்கு யாராவது வந்திருக்கும்போது அவர்கள் முன்பு மிகுந்த மரியாதையுடன் நடத்த வேண்டும். அந்த மரியாதை அவர்களுக்கு சந்தேகம் தராத விதம் இருக்க வேண்டும்.
7. ஊருக்குச் சென்றிருக்கும்போது நாம் தனியாக இருக்கும் வேலைகளில் எங்கே நிம்மதியாக இருந்துவிடுவோனோ எனும் பதட்டத்தில் அரை மணிக்கு ஒருமுறை 'நலம்?' விசாரிக்கக் கூடாது.
8. பாத்திரம் கழுவித் தர ஆரம்பித்ததும் இது தான் வாய்ப்பென்று பல வருடங்களாக கிடப்பில் இருந்த பாத்திரங்களை எல்லாம் போட்டு சின்க்கை நிரப்பக் கூடாது.
9. அரை மணி நேரம்அவரை பேச விடாமல் பேசிவிட்டு, சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல் என்று கேட்கக் கூடாது.
10. எல்லாவற்றிற்கும் மேல்.. கணவரின் குடிப்பழக்கத்தை விமர்சிக்கும் நிலை வந்தால் சட்டரீதியாக அங்கீகரிப்பட்ட வார்த்தையான 'மதுப்பிரியர்' என்று தான் சொல்ல வேண்டும்.......

No comments:
Post a Comment