Saturday, June 10, 2023

ஒரு பட்டியல் தருகிறேன்.

 சிலருக்கு அந்தக் காலத்தில் மட்டுமே நல்ல திரைப்படங்கள் வந்ததாகவும் இப்போது வரும் படங்கள் எல்லாமே குப்பை என்றும் ஒரு கருத்து உண்டு.

அதேப் போல அப்போது எழுதப்பட்ட எழுத்துக்களே தரமானவை என்றும், இப்போது எழுதப்படுபவை எல்லாம் தரமற்றவை என்றும் பூமர் அங்கிள் சிந்தனையும் சிலருக்கு உண்டு.
இது.. வெள்ளையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், சிரிக்கும் பெண்களை நம்பக் கூடாது, உலகமே கெட்டுப் போய் விட்டது போன்ற நிஜமற்ற பொதுப் புத்தி சிந்தனைகள்.
எல்லாக் காலக்கட்டங்களிலும் குப்பையான படைப்புகளும், தரமான படைப்புகளும் கலந்தே வந்திருக்கின்றன என்பதே நிஜம்.
பத்து தரமான படங்களின் பட்டியல் போட்டால் அதேக் காலக்கட்டத்தில் வந்த பத்து குப்பைப் படங்களின் பட்டியலும் போட முடியும். எழுத்தும் அப்படியே.
இந்தத் தரப் பட்டியல் நபருக்கு நபர் அவரவர் ரசனைக்குத் தகுந்தபடி மாறுபடும். சிறந்த படைப்புகளைத் தேடித்தான் ரசிக்க வேண்டும்.
இப்போது நல்ல படைப்புகள் இல்லை என்பவர்கள் தங்கள் தேடல்களை வெகு காலத்திற்கு முன்பே நிறுத்திவிட்டார்கள் என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்.
சமீப காலங்களில் என் ரசனையில் தரமானதாகக் கருதும் சில படங்களின் ஒரு பட்டியல் தருகிறேன்.
நீங்கள் மாறுபடலாம்.
பட்டியலைத் தொடரலாம்.
வழக்கு எண் 18/9
எங்கேயும் எப்போதும்
அங்காடி தெரு
கடைசி விவசாயி
டு லெட்
தேன்
அருவி
காக்கா முட்டை
க.பெ ரணசிங்கம்
விசாரணை
மிகமிக அவசரம்
அறம்
பரியேறும் பெருமாள்
கார்கி
மண்டேலா
கமலி ஃபரம் நடுக்காவேரி
96
டாணாக்காரன்
ஜெய்பீம்
நித்தம் ஒரு வானம்
செம்பி
அயோத்தி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...