Thursday, June 8, 2023

*கொடுப்பது பேரின்பம்* .

இந்த உலகத்தில் நாம் எதையும் கொண்டு வரவில்லை, இங்கிருந்து எதையும் கொண்டு போகவும்முடியாது. அதனால், நமக்கு உணவும்உடையும் இருந்தால் அதுவே போதும் என்று திருப்தியோடு வாழ வேண்டும்.
மனத்திருப்தியுடன் இருப்பவர்கள் குறைசொல்ல மாட்டார்கள், முணுமுணுக்க மாட்டார்கள், வயிற்றெரிச்சல்பட மாட்டார்கள். ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என்று பகட்டாக வாழ மாட்டார்கள்; அதனால்,தேவையில்லாத மனக் கவலைக்கும் மன அழுத்தத்திற்கும் அவர்கள் ஆளாவதில்லை.
தாராளகுணமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள். ஏனெனில் "வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது”என்ற உண்மையை உணர்ந்தவர்கள்.

மற்றவர்களைச் சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் அவர்களுக்குச் சந்தோஷம் கிடைக்கிறது; மற்றவர்களுடையசந்தோஷத்துக்காக, கொஞ்சம் நேரத்தையும் சக்தியையும் மட்டும்தான் கொடுக்க முடியும் என்றால்கூட அதைத் தாராளமாகக் கொடுக்கிறார்கள்.இதற்காக அவர்களுக்குக் கிடைக்கிற பலன் கோடி கோடியாகக் கொட்டினாலும் கிடைக்காத பலன்.,ஆம், அன்பு, மரியாதை, தாராளமாகக் கைமாறுசெய்யும் உண்மை நண்பர்கள். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...