*'திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பில் நிறுத்தப்படும் இரண்டு சக்கர , நான்குசக்கர வாகன நிறுத்துமிடத்தில் நடைபெறும் கூடுதல் கட்டண வசூல் முறைகேடுகளை வன்மையாக கண்டிக்கிறோம்.'*
*'திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப் பில் செயல்பட்டு வரும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தொடர்ந்து பல விதமான முறைகேடுகள் நடந்த வண்ணம் உள்ளது இரண்டு சக்கர வாகனத்திற்கு 12 மணி நேரத்திற்கு 20 ரூபாயும் அதற்கு மேல் மேலும் 20 ரூபாயும் 24 மணி நேரத்திற்கு மேல் மேலும் 20 ரூபாய் என வசூல் செய்வதும் எந்தவித அறிவிப்பும் முறைகளும் இல்லாமல் அடாவடியாக ஒப்பந்தம் எடுத்தவர்கள் சொல்வதே அந்த பகுதியில் எழுதப்படாத சட்டமாக உள்ளது அதே போல் 4 சக்கர வாகனங்களுக்கு சில நூறு ரூபாய்கள் பிடுங்கப் படுகிறது*
*'மேலும் உறவினர்களை வழியனுப்ப வரும் இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்களுக்கும் ரயில்வே நிலையம் முன்பு இடம் ஒதுக்கித் தராமல் ரயில்வே போலீசை வைத்து விரட்டியடிக்கப்பட்டு வாகன நிறுத்துமிடத்தில் வைத்து 10 நிமிடத்திற்குக் கூட இரண்டு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 20ம் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய்100 வசூலிக்கப்படும் கொடுமை நடந்து வருகிறது மேற்கண்ட இது போன்ற அடாவடி மோசடி செயல்களுக்கு திருச்சி கோட்ட வணிகத் துறை அதிகாரிகள் உறுதுணையாகவும் ஒப்பந்தகாரர்களோடு கைகோர்த்து இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்கள் மேலும் இவர்கள் குறிப்பிடும் வாகன நிறுத்தம் என்பது மேற்கூரை இன்றி கடும் வெயில் மற்றும் மழையில் முழுவதும் நனைவதும் மழை காலங்களில் சேறும் செகதியுமான இடத்தில் வாகனங்கள் கீழே விழுவதும் கண்கானிப்பு கேமரா உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லாமலேயே இவ்வாறு வசூல் செய்வதே குறியாக செயல்படும் ஒப்பந்ததாரர் மற்றும் திருச்சி கோட்ட வணிகத் துறை ரயில்வே நிர்வாகத்தை வன்மையாக கண்டிப்பதோடு ரயில்வே நிலையத்திற்கு டிக்கட் எடுக்கவும் பயணிகளை ஏற்றி விட மற்றும் வரவேற்று அழைத்து செல்பவர்கள் வரும் வாகனங்களை கட்டணமின்றி நிறுத்துவதற்கு இடத்தை ஒதுக்கி தர வும் ரயில் போக்குவரத்தை பொதுமக்களின் சேவை துறையாகவே நிலை நிறுத்த வேண்டுமே ஒழிய லாப நோக்கோடுஅதை பணம் வசூல் செய்யும் இடமாக மாற்றுவதை கைவிட வேண்டும் எனகேட்டுக் கொள்கிறோம் எனவே மேற்கண்ட வாகன நிறுத்த வசூல் முறைகேடுகளை களைந்து பயணிகளுக்கு போதுமான வசதிகளை செய்து தருவது ரயில்வே நிர்வாகத்தின்.
No comments:
Post a Comment