Sunday, June 11, 2023

ஒரு யோசனை.இந்த கருத்தை உங்கள் மூலமாக உரிய இடத்தில் சேர உதவுங்கள். நன்றிகள்.... 🙏

 இது GPS யுகம். அதன் மூலம் இன்று பயணம் எளிதாகி உள்ளது. சில கிலோமீட்டருக்கு முன்னால் நிற்கும் வாகன நெரிசலைக் காண்பிக்கிறது. அது அங்குள்ள வாகனங்களில் உள்ளவர்கள் உபயோகிக்கும் அலைபேசிகளை வைத்து நமக்குக் காண்பிக்கிறது.

இதுபோல் ரயில்களில் ஃபோன் அல்லது பிரத்யேகமான வயர்லெஸ் சாதனம் மூலம் முன்னால் செல்லும் வண்டிகளை அறிந்து அவை எவ்வளவு கிமீ தொலைவில் உள்ளது என்று கணக்கிட்டு, தங்களுக்குக் கிடைக்கும் சிக்னல் சரிதானா என்றறிந்து தங்களுடைய வண்டியின் வேகத்தைக் கட்டுப் படுத்தலாம்.
இரயில் நிலையங்களில் இதன் தேவை அதிகம் என்றால், அதாவது இரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது அதிகமென்றாவ், இரயில் நிலையங்களுக்கு அருகில் வயர்லெஸ் Frequency ஐ அதிகப் படுத்த பிரத்யேக டவர்ஸ் அமைக்கலாம்.
இந்த frequency இரயில்வேக்குப் பிரத்யேகமாக இருக்கலாம்.
அதிவேக இரயில்கள் கடந்து செல்லும் இரயில் நிலையங்களில் முதலில் அமைக்கலாம்.
இது ஒரு சாதாரண ஆலோசனைதான். நிபுணர்கள் சிறப்பாகச் செய்ய முடியும் என்பது என் கருத்து.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...