இன்றைய நவீன உலகத்தில் மனித
உறவுகள் சிதைந்து,விஞ்ஞானத்தோடு உறவு
வளர்ந்துவருகிறது.இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள்
இருந்தால் போதும் என்ற மனநிலையில் வாழ்ந்து வருகிறோம்..ஆக..மனித உறவுகள்
இன்று உதாசினப்படுத்தப்பட்டு
வருகின்றன என்பதே உண்மை.
பெற்ற பிள்ளைகளோடும்,உற்றார்
உறவினர்களோடும் சிரித்து
மகிழ்ந்து உறவாடிய நாட்கள்
போய்,இன்று உறவுகள் களைந்து
குடும்பங்கள் சிதைந்து,பிள்ளைகளை மறந்து
கணினியும அலைபேசியும்
இருந்தால் போதும் என்ற நிலையில்
வாழ்ந்து வருகிறோம்...
இது ஒருபுறம் இருக்க இனிவரும்
காலங்களில் அண்ணன்,தம்பி
அக்கா,தங்கை,சின்ன அண்ணன்
பெரிய அண்ணன்,சின்ன அக்கா
பெரிய அக்கா,சித்தப்பா,பெரியப்பா
அத்தை,மாமா,மச்சான்,மச்சினி
அண்ணி,கொழுந்தனார்,நாத்தனார்
தாய்மாமன்,சித்தப்பா பையன்
சித்தப்பா பொண்ணு,அத்தைபையன்,அத்தை பொண்ணு,மாமா பையன்,மாமா
பொண்ணு..இதுபோன்ற வார்த்தைகள் எல்லாம் 2050க்கு
மேல் யாருடைய காதிலும் விழாது.
காரணம்...
நகர்வாழ் பெரியவர்கள் கூறுவது போல,"ஒண்ணே ஒண்ணு கண்ணே
கண்ணு"என்று ஒரேஒரு குழந்தை
மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்..அப்படியிருக்கும்
போது இந்த உறவுகள் எல்லாம்
எப்படி வரும்?
அந்த ஒருகுழந்தையும்,வெளியூருக்கோ
தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால்
வயதான காலத்தில்,ஏனென்று
கேட்க நாதியற்று,முதியோர்
இல்லத்திலோ,இல்லை அந்த
ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ,அனாதையாக
கிடக்க வேண்டியதுதான்..
உறவுகளின் உன்னத மதிப்பை
உணராமல்,பொருளாதார
முன்னேற்றத்தை மட்டுமே குறிக்
கோளாக கொண்டு,ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம்
என வாழ்ந்து கொண்டிருக்கும்
அத்தனைபேருக்கும் இதே நிலைதான்.
வாகனங்கள்,வீட்டுவசதி வாய்ப்புடன் "ஒண்ணே ஒண்ணு
கண்ணே கண்ணு என்ற பெயரில்
உறவுகளற்ற ஒரு அனாதையை
வளர்ப்பதற்கும்,வயதான காலத்தில்
நாதியற்று கிடப்பதற்குமா இவ்வளவு பாடுபட்டு ஓடி ஓடி
செல்வம் சேர்க்கிறீர்கள்?
ஒரேஒருமுறை நம் கடைசி காலத்தை நினைத்து பார்ப்போம்.
பணமில்லாத ஒருவனை அநாதை
என்று யாரும் சொல்வதில்லை.
ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன்
எத்தனை கோடி வைத்திருந்தாலும்
அநாதைதான் என்பதை மறந்து
விடாதீர்கள்!
என்றும் அன்புடன்
உங்களில் நான்..
No comments:
Post a Comment