Thursday, June 8, 2023

2023 பிப்ரவரியில் இருந்தே சதி திட்டம் தீட்டபட்டதோ?

 'கவாச்' தொழில்நுட்பம் ஒடிசா ரயில் விபத்தினை தவிர்த்திருக்க முடியாது என்ற எனது கடந்த பதிவில் பின்னூட்டம் இடப்பட்டுள்ள செய்தி

நண்பர் ஒருவர்
"நீங்கள் நன்றாக முட்டு கொடுங்கள்... ஆனால் உண்மையை சொல்கிறேன் என்று அவ்வப்போது சொல்வது ஏனோ...
இந்த ரயில்வே தடத்தில் பிப்ரவரி மாதமே சிக்னல் கோளாறு பற்றிய புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது....
அதற்கும் சேர்த்து முட்டு கொடுக்க முயற்சி செய்யுங்கள்..."
***
அவரது குற்றச்சாட்டு என்னவென்றால்
'கடந்த பிப்ரவரி மாதம் இந்த ரயில் தடத்தில் சிக்னல் கோளாறு பற்றி புகார் தரப்பட்டுள்ளது. ஆனால் அதை சரி செய்ய மத்திய அரசு சரியாக கவனம் செலுத்தவில்லை' என்கிறார்.
முதலில் இந்த புகார் தரப்பட்டுள்ளதாக கூறப்படுவது
ஒடிசா ரயில் மண்டலம் இடம்பெற்றுள்ள
'தென் கிழக்கு ரயில்வே மண்டலம்' அல்ல.
புகார் தரப்பட்டுள்ள பகுதி
கர்நாடகாவின் மைசூர் பகுதி இடம்பெற்றுள்ள
'தென் மேற்கு ரயில்வே மண்டலம்'.
கடந்த பிப்ரவரி 8,2023 ல் மைசூரு டிவிசன் பிரூர் -சிக்ஜஜுர் செக்சனில் உள்ள ஹொசதுர்கா ரோடு ஸ்டேஷன் பகுதியில் நடந்த சம்பவம் அது.
ரயில் எண் 12649, சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவர்
'தனது ரயிலுக்கு சிக்னல் ஒரு வழியை காட்டியும், ஆனால் அந்த வழித்தடம் இணைப்பு வழித்தடத்திற்குள் நுழைவதையும், அந்த இணைப்பு வழித்தடத்திற்குள் ஏற்கனவே ஒரு சரக்கு ரயில் நிற்பதையும் கவனித்துள்ளார்'.
அதனால் உடனடியாக சுதாரித்து கொண்ட ரயில் டிரைவர்
தாமதமின்றி ரயிலின் வேகத்தினை குறைத்து நிறுத்தி விபத்தினை தவிர்த்திருக்கிறார்.
அதன் பிறகு இது பற்றி தனது மேலதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார்.
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரி, சிக்னல் மற்றும் டெலி கம்யூனிகேஷன் உயர் அதிகாரி, தென் மேற்கு ரயில்வே ஜெனரல் மேனேஜர் மற்றும் சிலருக்கு புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
இந்த புகாரின் மீது துறை ரீதியாக என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, சம்பந்தப்பட்ட ஜங்ஷனின் சிக்னல் பராமரிப்பாளர் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்று தெரியவில்லை.
ஆனால் இன்றும் அதே வழித்தடத்தில், அதே ரயில் வழக்கம் போல இயங்கி வருகிறது, இதற்கு முந்தைய காலங்களை போல.
ஆனால் இங்கே விபத்து தவிர்க்கப்பட்டு, விஷயம் ஊடகங்களாலும், தொழிற்சங்கங்களாலும், ஊழியர்களாலும் பொதுவெளியில் பகிரப்படாமல்,
அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் புகார் கடிதம் பரிமாறிக் கொள்ளப்பட்டு விவகாரம் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளதால் சம்பவம் குறித்து எந்த விழிப்புணர்வும் எச்சரிக்கையும் ஏற்படவில்லை.
காரணம் பல வருடங்களாக எந்த வித பிரச்சினைகளும் இல்லாமல் இந்த சிக்னல் சிஸ்டம் இயங்கி வருவதால் மட்டுமே.
ஒருவேளை தென் மேற்கு ரயில்வே அதிகாரிகள் இந்த சிக்னல் குறைபாடு(?) விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு சென்றிருந்தால், அப்போதே அனைத்து சிக்னல் குறைபாடுகளும் சரி செய்ய வாய்ப்புகள் உருவாகியிருக்கலாம்.
"ஆனால் அங்கே என்ன மாதிரியான நடவடிக்கை ரயில்வே உயர் அதிகாரிகளால் எடுக்கப்பட்டது என்ற தரவுகள் ஏதும் பொதுவெளியில் இல்லை."
"இப்போது 'சிக்னல் குறைபாட்டிற்காக ஊழியர்களை பழிவாங்கப் போகிறார்கள் என்று கூச்சலிடும் ரயில்வே தொழிற் சங்கங்கள்,
ஒடிசா ரயில் விபத்தில் எங்களுக்கு எந்த பங்கும், பொறுப்பும் இல்லை என்று ஓடி ஒழிந்து கொள்ள முடியாது".
"ஒருமுறை நிகழ்ந்த சிக்னல் தொழில்நுட்ப குறைபாடு விவகாரத்தை தேசிய அளவில் பேசு பொருளாக்கி, தீர்வினை காண அழுத்தம் தராத சம்பந்தப்பட்ட தென்மேற்கு ரயில்வே ஊழியர்கள் அனைவருக்கும் ஒடிசா மாநில ரயில் விபத்திற்கு பங்கு உண்டு."
ரயில்வேயின் ஒவ்வொரு அங்குல வழித்தடத்தையும் பராமரிக்க ஆயிரக்கணக்கான ரூபாய் பணத்தை சம்பளமாக பெறும் 12.5 லட்சம் ஊழியர்களுக்கும் இந்த விபத்தில் பங்கு உள்ளது.
ரயில் பாதைகள், தளவாடங்கள், சிக்னல்கள் பராமரிப்பிற்காக பாஜக அரசு கடந்த ஆண்டு 40,000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
"நேரடியாக களத்தில் உள்ள இவர்களில் யாரும் எளிதாக மத்திய ரயில்வே அமைச்சரை நோக்கி குற்றச்சாட்டினை திருப்ப முடியாது".

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...