Monday, June 12, 2023

நான்கு ஹீரோ......

 கோரமாண்டல்எக்ஸ்பிரஸ் விபத்து

பற்றி விசனப்பட்டதைவிட காரண
காரியம் ஆராய்ந்து அலசி யாரைத்
துவைத்துத்தொங்கவிடலாம் என்று
பலர் அறிக்கை விடுவதுதான்ஜாஸ்தி
இனி நல்ல விஷயங்கள் இந்த
நான்கு ஹீரோக்களைப்பறறி
இவர்கள் யாருமே---
செல்லுலாய்ட் ஹீரோக்கள் அல்ல.
சொக்கத்தங்கஹீரோக்கள்.
முதலாமவர் NDRF எனும் தேசிய
பேரிடர்மீட்புப்படையில் பணிபுரியும்
வெங்கடேஷ் எனும் வீரர்.இவர் 12
நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு
B-7 மூன்றாம் வகுப்பு A.Cபெட்டியில்
பயணம் செய்துள்ளார்.இவர் பயணம்
செய்த பெட்டி தடம் புரண்டாலும் மற்ற
பெட்டிகளுடன் மோதவில்லை.
உடனே தான் பணியாற்றும் கல்கத்தா
பட்டாலியன் இன்ஸ்பெக்டருக்குத்
தகவல் கொடுத்திருக்கிறார்.அடுத்து
NDRF கட்டுப்பாட்டு அறைக்கு விபத்து
பற்றிய தகவல்கள்,படங்கள் மற்றும்
இருக்கும் இடம் பற்றி WHATSAPP
மூலம் அனுப்பிவிட்டார்.
இதன்அடிப்படையில் NDRFன் முதல் குழு உடனடியாகப்புறப்பட்டு
விபத்து நடந்த இடத்துக்கு வந்து
சேர்ந்தது. வெங்கடேஷ் அதற்குப்
பிறகு சென்னைக்கு நிவாரண ரயிலில் வந்து சேர்ந்தார்.
NDRF DIG ஆன திரு.மோசேன்
ஷாஹேதி சீருடையில்
இருந்தாலும் இல்லாவிட்டாலும் NDRF
வீரர் எப்போதும் கடமையைச்-
செய்கிறார் எனக்குறிப்பிட்டுச்
சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது ஹீரோ ஒடிசாமாநில
தகவல்தொழில்நுட்பத்துறைச்
செயலர் மனோஜ் மிஸ்ரா ----
மூன்றாவது ஹீரோ
ஒடிஷாமாநில வளர்ச்சி ஆணையர்
அனு கர்க் .
இவர்கள் இருவரும் அளித்த தகவல்
படி ஒடிஷா அரசின் தாரக மந்திரம்
ஆன FIVE --T
TRANSPARENCY
TECHNOLOGY
TEAMWORK
TIME
TRANSFORMATION
ஆகியவற்றின் அடிப்படையில்
" நாங்கள்இயற்கைப்பேரிடர்களை
எதிர்கொள்கிறோம்.தகவல் கிடைத்த
உடனேயே நடமாடும் உயரக்கூடும்
ஜெனரேட்டர் விளக்குகள்,200
ஆம்புலன்ஸ்கள்,109மருத்துவக்குழுக்கள்,இலவசப்
பேருந்து ,உணவு,குடிநீர் வழங்க
ஏற்பாடு செய்தோம்.தனியார் மற்றும்
அரசு மருத்துவமனை களில் 15மணி
நேரத்துக்குள் 1175பேரை சிகிச்சை
பெறவைத்தோம் என்றார் அனுகர்க்.
மனோஜ் மிஸ்ராஅளித்தவிவரப்படி
சாதி ,மொழி,மத,இன வேறுபாடுகள்
இன்றி ஏறத்தாழ 2000பேர் காத்திருந்து ரத்த தானம் செய்தனர்.
இதில் சிறந்தபாடத்தினைக்கற்றுக்
கொண்டோம்.இனி நாட்டில் விபத்துகள் ஏற்படக்கூடாது.
ஒருவேளை நேரிட்டாலும்,மீட்புப்பணி
செய்ய முதலாவது ஒடிஷா குழுஅங்கு
விரையும் என்றார் அவர்.
இனி நான்காவது ஹீரோ
ஒடிஷா முதல்வரின் தனிச்செயலரும்
5Tதொலைநோக்குத்திட்டச்செயலரும்
ஆன திரு.வி.கார்த்திகேயபாண்டியன்
"ஒவ்வொரு உயிரும் முக்கியம் என்ற
முதல்வர் நவீன்பட்நாயக்கின் உறுதியான நிலைப்பாடே எங்களது
அரசினை வழிநடத்தும் தாரக மந்திரம்
அதன் அடிப்படையிலேயே இந்தப்
பேரிடரையும் எதிர்கொண்டோம்
என்றார் அவர்.
ஒடிஷா முதல்வரின் நம்பிக்கைக்கு
உரிய இவர் மதுரை மாவட்டத்தைச்
சேர்ந்தவர் என்பதும் வேளாண்பட்டம்
பெற்றவர்என்பதும்குறிப்பிடத்தக்கது.
எனவே-----
இந்த நாலு ஹீரோக்களையும் நாம்
மனமாறப்பாராட்டி மகிழ்வோம்.
இந்தப்பதிவினை SHARE செய்யுங்கள்.இந்த நிஜ ஹீரோக்கள் பற்றிப் பலரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த விபத்தில் வாழ்வாதாரங்களைத்தொலைத்த
போதிலும் பிழைத்தவர்களுக்கு நாம்
அளிக்கக்கூடிய நம்பிக்கைக்கீற்று.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...