கடந்த வாரத்தின் ஒரு காரணத்திற்காக விமர்சித்தவர்களில் ஆராய்ந்த போது ,உண்மையான பாஜக வளர்ச்சிகாக களத்தில் இறங்கி செயல்படும் நிர்வாகிகள் பெரும்பாலும் விமர்சிப்பது கிடையாது,களப்பணி செய்தால் தான் வாக்குகள் பெற முடியும் என அவர்கள் அறிவார்கள் ,ஆனால் ,பாஜக ஆதரவாளர்கள் என்ற போர்வையில் மறைந்து இருக்கும் திராவிட கட்சி ஆதரவு பிராமணர்கள் தான் கடுமயைான அநாகரீகமான வார்த்தைகளை சமூகவலைதளத்தில் பயன்படுத்திகிறார்கள்,அதனால் விளக்கம் தர எங்களுக்கு அவசியமாகிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, June 10, 2023
தமிழக பாஜக தரப்பினருக்கானது*
Sv சேகர் அண்ணா காரணமாக,எங்கள் மீது அக்கறையுடன் எங்களை பாராட்டி அவரை விமர்சிப்பவர்கள்,எங்களுடன் அவர் இணையக்கூடாது என்பவர்களுக்கு நினைவுப்படுத்துகிறேன் தற்போது வரை அவர் பாஜக வில் தான் உள்ளார்.
அவருடன் உங்களுக்கு என்ன வெறுப்பு என தெரியவில்லை,எனது தரப்பில் அவர் மீது மரியாதை இருக்க மூன்று நிகழ்வுகள் கூறுகிறேன்,
1.நமது பிராமண சமூதாய பெண் கொல்லப்பட்ட போது உண்மை என்ன என தெரியாமலும் ,அப்பெண்ணை பெற்றவர்கள் மனதின் வேதனை உணராமல் அவ்வளவு வக்கரத்துடன் எழுதியவர்களில் பலர் பிராமண சமூகம் சேர்ந்தவர்கள் தான் ,ஆறுதல் தர வேண்டிய நேரத்தில் அவமதிப்பு செய்தார்கள்,அப்பெண் சார்ந்து திரைப்படம் வெளிவர இருந்த நிலையில் ,எங்களுடன் Sv சேகர் அவர்களும் திரைப்பட தணிக்கையின் அனைத்து குழுவினருக்கும் ஈமெயில் அனுப்பி அவரும் ஒருவராக மற்றவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
2.ஒரு கோயில் பட்டாச்சாரியார் குடும்பத்தை சேர்ந்தவரின் வயதான தந்தை கொரோணா உச்சத்தில் இருந்த போது ,மருத்துவமனையில் அட்மீட் செய்ய முடியாமல் இரவு 7 மணிமுதல் அக்குடும்பத்தினர் தவித்தனர் ,பிறகு என்னிடம் பேசினார்கள் ,நான் Sv சேகர் அண்ணா மற்றும் அரசு மருத்துவத்துறை அதிகாரி உள்பட மூன்று நபர்களிடம் பேசினேன், பல மருத்துவமனை தொடர்பு கொண்டு ,இறுதியில் சென்னை அரசு மருத்துவமனையில் இரவு 11 மணிக்கு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஏறத்தாழ 3 மணிநேரம் எங்களுடன் தொடர்பில் இருந்து உதவினார்.
3.பிராமண சமூக சார்ந்த பாக்ஸிங் சாதனை இளைஞனை அழைத்து பாராட்டி நிதியுதவி வழங்கி பலரிடம் அந்த தகவலை கொண்டு சேர்த்தார்.
அவர்மேல் எனக்கு மரியாதை இருக்க இதுபோல் இன்னும் சில உள்ளது.ஆனால் உங்களுக்கு என்ன அவருடன் வெறுப்பு என எனக்கு தெரியாது.அதைபற்றி தமிழக பாஜக தலைமையிடம் பேசி தெரிந்து கொள்ளுங்கள்.
KT ராகவன் அண்ணாவை ,திட்டமிட்டு சூழ்ச்சியுடன் அவமதிப்பு செய்தார்கள் ,அந்த நெருக்கடி காலத்திலும் மனிதன் தடுமாறி இருந்தபோது அப்போது அவர் காரணமாக பிராமண சமூகத்தை முன்வைத்து எங்களிடம் கேலி செய்தனர்,இருப்பினும் அவருக்கு ஆதரவாக இருப்போம் என கூறினோம்.அன்றுமுதல் அவரை தொடர்ந்து விமர்ச்சித்தவர்கள் சமீபத்தில் அவரது இல்ல திறப்புவிழாவிற்கு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வந்தபிறகு KTராகவன் அவர்கள் மீது இருந்த விமர்சனங்கள் குறைய தொடங்கியது.
தர்மபோராளி H ராஜா அண்ணாவின் குடும்பத்தில் நடந்த முடிந்த இல்ல திருமண விழாவில் ,அவரது அழைப்பில் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாக செய்தி அந்த காலக்கட்டத்தில் வந்தது ,அதனால் H ராஜா அண்ணா அவர்களிடம் விளக்கம் வேண்டுவோர் அந்த போட்டோ இருந்தால் அதை தற்போதே பாஜக வினர் விளக்கம் கேட்டு கொள்ளுங்கள்,மாறாக அந்த நிகழ்ச்சியில் உடன் இருந்து போட்டோ எடுத்து வைத்து கொண்டு ஒரு வேளை வரும் காலத்தில் பாஜக விலிருந்து அவர் வெளியேறும் சூழல் வந்தால்,பிராமணராக அடையாளப்படுத்தி அன்று விமர்சிக்காதீர்கள்.
மேலும்,விஷயத்திற்கு வருகிறேன்,நாங்கள் ஒன்றும் ஒட்டுமொத்த பிராமணர்களின் பிரதிநிதிகள் என்று கூறிகொள்ளவில்லை,ஆனால் நீங்கள் எந்த கட்சியில் இருந்தாலும் ,பிராமணர் எனில் உங்கள் தரப்பு பிரதிநிதியாக உங்கள் பிரச்சினைக்கு நிற்போம் என்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment