ஆட்டோகாரர்களின் கொட்டம் Ola Uber சகாப்தத்துக்கப்புறம் ஒழிந்துவிட்டது என்ற எண்ணத்தை, நான் போன மாதம் சென்னை சென்று வந்தபின் மாற்றிக்கொள்ள நேர்ந்தது. ஆட்டோ Uber இல் புக் பண்ணினப்பறம் வருகிறீர்களா, ஏன் வண்டி நகரவில்லை என்றால் 20₹ extra வேண்டும்சார். இல்லைன்னா கேன்சல் பண்ணிடுங்க என்றார். என் நண்பர்கள் பிறகு சொன்னார்கள் - இந்த extra இல்லாமல் ஆட்டோ கிடைப்பதில்லை என்றார்கள். அதுவும் கேஷ்தான் online transferனா சென்னைக்கே பிரபலான திட்டுதான். தோல் கனமாக சூடு சொரணையை எல்லையிலே கழட்டி வைத்துவிட வேண்டும். ஆனால் அனுபவம் பெங்களூரில் சற்று வித்தியாசமாக இருந்தது. Airportஇலிருந்து Uber go புக் பண்ணினேன். AC போடச்சொன்னால் Uber premier புக் பண்ணணும் go வில் கிடையாது என்றார். Trip முடித்தவுடன் Uber feedbackஇல் பதிவிட்டேன். வருத்தமும் தெரிவித்து முழு trip பணத்தை திருப்பியும் கொடுத்து விட்டார்கள்!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, June 10, 2023
Demand & Supply gap தான் இதற்கெல்லாம் காரணம்.
இது ஒரு புறம் இருக்க… பயணிகளை சகட்டுமேனிக்கு கொள்ளையடிக்கும் கொள்கை தமிழ்நாட்டில் மட்டுமல்ல. கேரளாவிலும் மிக பிரசித்தம். கேரளாவில் உங்கள் சுமையை நீங்கள் தூக்கிச்சென்றாலும் பின்தொட்ந்து வந்து கூலி கேட்பார்கள். ஏன்? நாங்கள் செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்தாலும் எங்களுக்கு கூலி தரவேண்டுமாம்! ஆனாலும் அங்கு கோயில்களில் அப்படி ஒரு நேர்மை.
வடநாட்டில் ஒரிஸா பண்டாக்கள் தவிர ஏமாற்றுபவர்களை நான் அதிகம் பார்க்கவில்லை. மற்றபடி தமிழகத்தை தவிர காஷ்மீரிலோ, குஜராத்திலோ, காசி, ரிஷிகேசத்திலோ வேறு எங்கும் இவ்வளவு ஊழல் இல்லை. சுற்றுலாவுக்கு வருபவர்களை மரியாதையுடன் அவர்கள் நடத்துகிறார்கள். கொள்ளையடிப்பதில் நம்மவர்களுக்குத்தான் முதலிடம். தமிழகத்தையும் கேரளாவையும் தவிர மற்ற மானிலங்களில் விபரம் தெரியாமல் வரும் பயணிகளை ஏமாற்றுவது குறைவு. விருந்தினரை தெய்வத்துக்கு சமமாக எண்ணுவதுதான் அதிகம்..
ஆன்மிக எண்ணங்கள் குறைந்து பாவபுண்யங்களுக்கு பயம் இல்லாததால்தான் இந்த குற்றங்கள் இங்கு மலிந்துவிட்டதோ என தோன்றினால் அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை!
கேரளாவில் கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பும் இங்கு திராவிட சித்தாந்தமும்தான் கோலோச்சுவதுதான் இந்த சீர்கேடுகளுக்கு மூல காரணமோ?
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment