Friday, August 30, 2019

தேமதுரத் தமிழை உலகமெலாம் பரப்பும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

தாத்தா பெயர் :- உருத்திராபதி,
தந்தை பெயர் :- வாலறிவன்,
அண்ணன் பெயர் :- இறைவன்,
தங்க மங்கை பெயர் :- இளவேனில்
என்ன அழகிய தமிழ் பெயர்கள்
கூடுதல் தகவல் இளவேனிலின் அண்ணன் இந்திய ராணுவத்தில் சேவையாற்றுகிறார்..
மருத்துவ படிப்பிற்க்கு இடம் கிடைத்தும் துப்பாக்கி சுடும் விளையாட்டில் உள்ள ஆர்வத்தால் அதை நிராகரித்து தன் லட்சிய பயணத்தில் பயணிக்கும் தங்க மங்கை மேன்மேலும் சாதனைகளை புரிய வாழ்த்துக்கள்.

வாரத்தில் ஒருமுறை சர்க்கரை வள்ளியை உண்போர் அடைவர் நல்ல பலனை.


"நேரத்தின் மீது அக்கறை கொண்டோர்
அடைவர் சிறந்த நலனை,
வாரத்தில் ஒருமுறை சர்க்கரை வள்ளியை உண்போர் அடைவர் நல்ல பலனை"
பொதுவாக நாம் அனைவரும் கேள்வி பட்ட ஒன்று என்னவென்றால் கிழங்கு வகைகளை சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்ற ஒன்று. ஆம் அது உண்மை தான், ஒரு சில கிழங்கு வகைகளை நீங்கள் உண்டால் உங்களின் உடல் எடை அதிகரிக்கும்.
ஆயினும் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலிற்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.
*சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள சத்துக்கள்*
இப்பொழுது நாம் சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள சத்துக்களை பற்றி காண்போம்.இதில் வைட்டமின் எ, பி,சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.
*கொழுப்பு இல்லை*
நாம் பொதுவாக கேள்விப்பட்ட கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.
*உடல் எடையினை குறைக்க உதவும்*
சர்க்கரை வள்ளி கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இவை உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றது. மேலும் உங்கள் இரத்த சர்க்கரை அளவும் சீராக வைக்க உதவுகின்றது.
*மலச்சிக்கலை தடுக்கும்*
மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரை வள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
*எப்போதும் இளமையாக இருக்க உதவும்*
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரீ ராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். மேலும் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும். எனேவே வாரத்திற்கு ஒரு முறையாவது சர்க்கரை வள்ளி கிழங்கினை உண்டு வாருங்கள்.
*நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும்*
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். மேலும் உங்களை ஆரோக்கியமாக வைக்க வழிவகுக்கும். எனவே கிடைக்கும் பொழுது சர்க்கரை வள்ளி கிழங்கினை வாங்கி உண்ணுங்கள் நண்பர்களே.

தெரிந்து கொள்வோம் மிகவும் பயன் உள்ள முப்பது தகவல்கள் என்றும் பயன் தரக்கூடியது🌷🧩🌷

1.ஒரு 30 வினாடிகள்.இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2.ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3.கொட்டாவியை நிறுத்த.கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxygen பற்றாக்குறை தான். அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!
5.உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6.வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7.தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.
8.வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9.தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
10.முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
 சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.
முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.
வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.
10.மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11.நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12.சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13.சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14.புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.
15.மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16.சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17.பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18.தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?
அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.
19.சீரக தண்ணீர் 2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
சீரகப் பொடி மற்றும் தயிர் மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
 சீரகப் பொடி மற்றும் தேன் 1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
சூப்புடன் சீரகப் பொடி உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.
தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி
மகிழ்வித்து மகிழுங்கள் 🌷🧩🌷

வீட்டில் செல்வம் பெருக பின்பற்றவேண்டிய ஆன்மீக குறிப்புகள்!!

செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது. அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.
நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும். அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும். எங்கோ போக வேண்டிய பணம், நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும்.
ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை; மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5-மணி முதல் 7-மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.
வெள்ளிக் கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து, அலசிவிட்டுவிட வேண்டும். அலசிய பின்னர், நமது வீட்டுப் பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும். அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.
ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும், அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான்.
.ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர் இவைகளால் அர்ச்சித்து, பால், பாயசம், கல்கண்டு, கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரே இரவு உணவு உன்ன வேண்டும்.
வைரம், வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும் கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும், முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்.
அன்றாடம் ஒரு வேளைக்கு ஒரு பிடி அரிசியை ஒரு பெரிய பாத்திரத்தில் கடவுளுக்கு
(அன்னதானம் செய் ) என்று போட்டால் தான் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும்.லக்ஷ்மி வீட்டில் வாசம் செய்வாள்.
காலையில் எழுந்தவுடன் யார் முகத்தையும் பார்க்காமல் தண்ணீர் இரண்டு மடக்கு குடிக்க, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும், கோபம் வராது.

ஸ்டாலின் தன்நிலை அறிந்து பேச வேண்டும் ..

1969-ஆம் ஆண்டு திரு.கருணாநிதி முதல்வராகும் போது அவரின் வயதோ 45-தான்...
அப்போது எடப்பாடியாரின் வயதோ வெறும்15-தான்..
எடப்பாடியார் பிறந்தது 12 மார்ச் 1954...
எண்ணை தேய்த்து, வகிடெடுத்து தலை சீவி, நெற்றியில் திருநீர் இட்டு, அரைக்கால் சட்டையுடன் 'சிலுவம்பாளையம்' எனும் பட்டிக்காட்டில், அரசு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சிறுவன் பழனிசாமிக்கு அப்போது தெரியாது, தான் பிற்காலத்தில் இந்த நாட்டின் முதல்வராக வருவோம் என்று..
அதே ஆண்டு தமிழக முதல்வர் திரு.கருணாநிதியின் மகன் திரு.ஸ்டாலின் 10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பார்..
அவர் பிறந்ததோ 01 மார்ச் 1953...
இவர்கள் இருவருக்குமான வயது வேறுபாடு... ஓர் ஆண்டு மட்டுமே..‌
ஆனால் பாருங்கள்...
மிக முக்கிய திராவிட இயக்க தலைவரான திரு.மு.கருணாநிதியின் மகன் திரு.ஸ்டாலினை இந்த தமிழகத்தின் முதல்வராக வர அனுமதிக்காத இந்த வரலாறுதான்...
சேலம் மாவட்டத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒரு வேளாண் குடிமகனாக பிறந்த, கருப்பகவுண்டரின் மகனான பழனிசாமியை இந்த தமிழகத்தின் முதல்வராக தேர்ந்தெடுத்தது...
1984 சட்டசமன்ற தேர்தலில் 'திமுக தலைவர், முன்னால் முதல்வரின் மகன்' என்ற சிறப்பு அந்தஸ்தில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டபோது..
பக்கத்து ஊர் மக்களுக்குக்கூட தெரிந்திராத சிலுவம்பாளையம் அஇஅதிமுக கிளைச் கழக செயலாளராக இருந்தவர்தான் திரு.பழனிசாமி.
ஸ்டாலினை அரியணை ஏற்ற அவரது தந்தையார் திரு.கருணாநிதி திரு.வைகோவுக்கு குழி வெட்டிக்கொண்டிருந்த காலகட்டம் அது..
1989ல் இரு அணிகளாக பிளவு பட்டிருந்த அஇஅதிமுக-வில், ஜெ அணியில் சேவல் சின்னத்தில் நின்று முதல்முறையாக வெற்றி பெற்றார் பழனிசாமி.
சிலுவம்பாளையம் பழனிசாமியாக இருந்த எடப்பாடியார் அதன்பின்புதான் எடப்பாடி கே. பழனிசாமி எம்.எல்.ஏ.வாக உருமாறியிருந்தார்...
மீண்டும் 1991 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் திரு.பழனிசாமி வெற்றி பெற்ற போது திரு.மு.கஸ்டாலின் திமுக-வின் பட்டத்து இளவரசர்.
1998ல் எடப்பாடி பழனிசாமி திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.
மு.க.ஸ்டாலினின் அப்போது சென்னை மேயர். அவரது தந்தை தமிழக முதல்வர்.
2006 - 2009 காலகட்டங்களில் மு.க.ஸ்டாலின் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர்.
2009ல் ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரியை மத்திய கேபினட் அமைச்சராக்கும்போது , அப்போது மு.க.ஸ்டாலினை துணை முதல்வராக்கினார் திரு.கருணாநிதி..
2011ல் திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட தேமுதிகவிடம் பறிகொடுத்துவிட்டு சட்டசபையின் மூன்றாவது கட்சியாக இருந்தபோது இன்றைய முதல்வர் அன்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்.
2016ல் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராகும்போது எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை அமைச்சர்.
ஆக.. அதிமுகவின் ஆலம் விருட்சமாக இருந்த மாண்புமிகு இதயதெய்வம் மாண்புமிகு #அம்மா அவர்கள் மறைந்தபோதும் கூட, எங்கோ ஒரு மூலையில் எளிமையாக இருந்த 'திரு.எடப்பாடியார் முதல்வராவார்' என்று யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்...
ஆனால் அனைத்தும் நடந்தேறியது...
இப்போது தமிழகத்தின் மிகச்சிறந்த முதல்வராக திகழும் மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆளுமை மிகவும் மெச்சத்தக்கது..
இதான் வரலாறு...‌
இதற்கு இடையில் நடந்ததொல்லாம் காலத்தின் கட்டாயம்...
இதுதான் அஇஅதிமுகாவின் வெற்றிக்கு மூல காரணம்...
2021-லும் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அஇஅதிமுக-வின் ஆட்சியே தொடரும்...

நாமத்தால் வந்த மதிப்பு.

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.
நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள். அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால் கெட்டுவிடும் என்று நினைக்கும் சமூகக் கட்டமைப்பு.
அவள் விடியும்‌முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌பிடித்து விட்டது.
வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள்.
சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்து க் கொண்டது. பொழுது போகாதபோதெல்லாம் நாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் எப்போதுமே நாமம் சொல்லத் தொடங்கினாள்.
ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள்.
இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.
இப்படியே அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.
ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது.
ஏம்மா அழற?
அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.
வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம்.
அம்மா அழுதுண்டே இருக்காங்க..
சரி, அழாத.. இங்க வா..
ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உஙப்பாவ்வுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும்
என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.
சரி பாட்டி
என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன திரும்பி வந்தது.
அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க நாமா கொடுத்தேள் னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார்.
வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு. இனி வ்யாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார்.
என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.
விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது.
யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள்.
யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை.
துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.
அத்ருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவைரும் வரவேற்கும்படி செய்தது எது?
அவளைப் பிடித்துக்கொண்ட ராமநாமமன்றோ?
ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசம்
இன்றைய நாள் இனியதாக, ஆனந்தமாக, ஆரோக்யமாக, அமைதியாயக அமைய வாழ்த்துக்கள்.

*இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.*

இரண்டாம் வகுப்பு ஆசிரியை வாய்ப்பாடு ஒன்றை கரும்பலகையில் எழுதினார்.*
*இந்த வாய்ப்பாடு எழுத ஆரம்பித்தது முதல்....,*
*வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்தது.*
காரணம்,
*முதலாவது வாய்ப்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது*
1×9=7, 
2×9=18, 
3×9=27, 
4×9=36, 
5×9=45, 
6×9=54 
7×9=63 
8×9=72 
9×9=81 
10×9=90 
*மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது.*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
*சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை.....,*
*சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பேசத் துவங்கினார்...*
*நான் முதல் வாய்ப்பாட்டை பிழையாக எழுதியிருக்கின்றேன்.*
*இதன் மூலம் உங்களுக்கொரு உண்மையை புரியவைக்கப் போகிறேன்.*
🔶🔶🔶🔶🔶🔶🔶🔶🔶
*இந்த உலகம் உங்களை எப்படி விமர்சிக்கும் என்பதை நீங்கள் இதன் மூலம் புரிந்து கொள்வீர்கள்.*
*நான் இங்கு 9 முறைகள் மிகச் சரியாக எழுதியிருக்கின்றேன்.*
*அதற்காக நீங்கள் யாரும் என்னைப் பாராட்டவில்லை.*
ஆனால்,
*நான் பிழையாக எழுதிய ஒரே ஒரு விஷயத்தைக் மட்டும் கவனித்து.......*
*அனைவரும் சிரித்து கேலி செய்கிறீர்கள்.*
🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷
*⚀நீங்கள் இலட்சம் தடவைகள் விஷயங்களைச் சரியாக செய்த போதிலும்......,*
*⚀இந்த உலகம் உங்களை ஒரு போதும் பாராட்டப் போவதில்லை.*
*⚀ஆனால் நீங்கள் செய்த ஒரு பிழையைத் தான் உலகம் கவனிக்கும்.*
🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
*⚅அதையே மிகக் கீழ்த்தரமாக விமர்சிக்கும்...*
*⚅இவைகளைக் கண்டு ஒருபோதும் தளர்ந்து விடாதீர்கள்.*
*⚅உங்களைப் பார்த்து சிரித்தவர்கள்,*
*⚅உங்களை விமர்சித்தவர்கள் முன்னால் .....,*
*⚅உயர்ந்து நிற்கும் முயற்சியில் உறுதியாக நில்லுங்கள்.*
💠💠💠💠💠💠💠💠💠

ரூ. 2,000 நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்?



நடப்பு நிதியாண்டில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, 2016, நவம்பர், 8ல், புழக்கத்தில் இருந்த, 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தார். இதையடுத்து, புதிய, 500 ரூபாய் மற்றும், 2,000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது. 

ஆனால், தற்போது, 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்துள்ளது. 2017- - 18 நிதியாண்டில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 600 கோடி அளவிற்கு இருந்த, 2000 ரூபாய் நோட்டின் புழக்கம், 2018- -19 ம் ஆண்டில், 6 லட்சத்து, 58 ஆயிரத்து, 200 கோடியாக குறைந்துள்ளது.மேலும், 2017 - 18ம் ஆண்டில், 336.30 கோடி எண்ணிக்கையிலான, 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இது, 2018 - 19ம் நிதியாண்டில், 320.91 கோடியாக குறைந்துள்ளது, 

அதே நேரத்தில், மற்ற ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது, குறிப்பாக, 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.நாட்டில், இப்போது புழக்கத்தில் உள்ள, 21.1 லட்சம் கோடி நோட்டுகளில், 51 சதவீதத்தை, 500 ரூபாய் நோட்டுகள் பிடித்துள்ளன, இப்போது, 2,151 கோடி எண்ணிக்கையிலான, 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. அதே போல, 100 ரூபாய் நோட்டுகள், 2,007 கோடி நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 

இதனை தொடர்ந்து நடப்பு நிதியாண்டில். 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்த, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
 ரூ. 2,000 நோட்டு, அச்சடிப்பு ,நிறுத்தம்?

Thursday, August 29, 2019

தொண்டனும் கட்சி தலைவராக முடியும் என்பதை திமுகவில் மட்டுமே காணமுடியும் - ஸ்டாலின்.

அதானே,
வேப்ப எண்ணெய்யிலே
கேசரி,
வெந்தயத்திலே
பாயாசம்,
கடுக ஒடச்சி
கடலைமிட்டாய்,
காக்காச் சிறகுல
கண்டாங்கிச் சேலை,
கரும்புச் சக்கையிலே
காங்கிரீட்டு,
கொத்தவரங்காய்ல
கொட்டகை போட,
அப்பளத்துல
அடிவாரம் கட்டி,
கேப்பமாவுல
மணல குலைச்செடுத்து,
கெழங்கு மாவும
சுவரெழுப்பி,
வெண்டைக்காய் அரைச்சு
வெள்ளையடிச்சு,
மாளிகை கட்டினோம்
பாருங்க,
மயக்கம் வந்தா
நான் பொறுப்பல்ல?
அடப்போங்க நீங்க வேற கடுப்பேத்தி கவித படிக்கிறீய்ய....
திருச்செந்தூர் வைரவேலுக்கு பாதயாத்திரை ,நீதி கேட்டு நெடும்பயணம்னு சொல்லி மோருக்கு பதிலா பினாயில குடிச்சவனுக.... மறந்துட்டீய்ளா ?

சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா? *சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*...

 நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
இரண்டு சக்கர வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில், கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
*இப்படிக் காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல உடல் உபாதைகள் உருவாகிறது*...
 இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...
 *நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது*.
 *நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்*.
 *மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது*.
 எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால் போட்டு அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.
எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான் சாப்பிட வேண்டும்.
ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம் நன்றாக நடைபெறுகிறது.
 சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல் காலுக்கே அதிகமாக செல்கிறது.
 இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம் யுரோப்பியன் கழிவறையில் அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும், அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.
 ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளுங்கள். *உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்*. எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்... எனவே யுரோப்பியன் வகை கழிவறைகளை தவிருங்கள்...
 கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...
 சாப்பிடும் பொழுது தரையில் ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...
 சில வீடுகளில் அதற்கு வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...
 *சாப்பிடும் முறை*...!
1.நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...
2. எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...
3. பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
4. சாப்பிடும் பொழுது இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...
5. அவசர அவசரமாக சாப்பிட வேண்டாம்...
6. பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...
7. பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட வேண்டாம்...
8. ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...
9. இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...
10.சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...
11. சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...
12. சாப்பிட வேண்டிய நேரம்...காலை - 7 to 9 மணிக்குள் மதியம் - 1 to 3 மணிக்குள் இரவு - 7 to 9 மணிக்குள்
13. சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்க வேண்டும்...
14. சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...
 *அமருங்கள் சம்மணமிட்டு*.

ஊளைச்சதை_குறைய_குடம்புளிஜூஸ்!


குடம்புளி: 5 துண்டுகள்
பனை வெல்லம்: 4 துண்டுகள்
ஏலப்பொடி: 1 சிட்டிகை
சுக்கு: 1 சிட்டிகை
குடம்புளியை முதல் நாள் இரவே ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் புளி கரைந்த நீரை வடிகட்டி தனியாக ஒரு கப்பில் எடுத்துக் கொள்ளவும். பனை வெல்லம் முங்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வெல்லம் கரையும் வரை அதைக் காய்ச்சி ஆறியதும் வெல்லக் கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
இப்போது குடம்புளி கரைசல் மற்றும் வெல்லக் கரைசல் இரண்டையும் நன்றாகக் கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அடுப்பில் ஒரு கொதி வரும் வரை சூடாக்கவும். பின்னர் மீண்டும் வடிகட்டி சுக்குப் பொடி, ஏலப்பொடி தூவி பரிமாறலாம்.
இந்த குடம்புளி ஜூஸ் செரிமானத்தை அதிகரிப்பதோடு, பசிக்கும் தன்மையை தன்னிறைவு பெறச் செய்யுமாம். இதனால் அடிக்கடி பசித்து எதையாவது சாப்பிடும், கொறிக்கும் பழக்கம் தடை படும். எனவே உடல் எடை தானாகவே குறையும் என சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...