Saturday, April 25, 2020

👏🏻 தயவுசெய்து ஒரு ஐந்து (5 minits) நிமிடங்கள் ஒதுக்கி இந்த பதிவை படிக்கவும்...நன்றி..

🎼 இசைஞானி ILAYARAJA 5,000 பாடல்கள் இசையமைத்திருக்கிறார் என்பது ஒரு பிரமாண்டம் என்றாலும்,அந்த 5,000 பாடல்களை ஒரு சாதாரண மனிதன் செய்வது சாத்தியமா ? , என்ற கேள்வியும் எழவதை தடுக்கமுடியாது...
சரி இது ஒரு தெய்வீகம் குடிகொண்டிருக்கும் மனிதன் செய்தான் என வைத்துக்கொண்டாலும் அந்த பாடல்களில் அவர் செய்திருக்கும் நுட்பங்களை பார்தாலே(i.e.கேட்டாலே) இசைஞானியை எதனோடு ஒப்பிடுவது என புரியாமல் போகும்...
இசையை வெறும் வியாபாரத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் இன்றைய Musician's_களுக்கிடையே , இவர் மட்டும் விதிவிலக்கு..
சங்கீதம்(Music)இது எதுவென்று தெரியாத பாமரன் நான், என்னுள் இசைஞானி ஏற்படுத்திய தாக்கத்தின் இசையை , அதன் நுட்பம் ரசிப்பது மட்டுமல்லாமல் இவர் இசையில் செய்த புதுமைகளை என்னி பித்தனானேன்..அப்படி ராஜா செய்த நுட்பங்களை(technical) பற்றிய பதிவுதான் இது...

1🎶. 3_Track Recording வசதியில் முதலில் ஒரு பகுதியை பாடமுடியாத இடங்களில் விட்டுவிடச்சொல்லி ஒரு Track_ல் ரெக்கார்ட் செய்து, அதன்பின்னர் அடுத்த Track_ல் விட்ட இடங்களைப்பாடி Record செய்து பிறகு இரண்டையும் Synchronization செய்து பதிவு செய்த பாடல்தான் "கண்மணியே காதல் என்பது கற்பனையோ.... காவியமோ...கண்வரைந்த ஓவியமோ...எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சில் பொங்குதம்மாாா பல்சுவையும்ம் சொல்லுதம்மா...." இதுவரை யாரும் செய்யாதது மேலும் இதற்கு *முன்_பின்* யாரும் நினைத்துக்கூட பார்காதது..
🎵. ஸ்ரீ_ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் "சோளம் வெதைக்கையிலே சொல்லிபுட்டு போனபுள்ள..சோளம் வௌஞ்சு காத்து கிடக்கு பாரடிபுள்ள", என்ற பாடல்தான்.இந்த பாட்டிற்கு இன்னொரு சிறப்பும் உண்டு..15 நிமிடத்தில் மெட்டமைத்து ராஜாவே பாடிய Title Song..(திரைப்படத்தில் ராஜா பாடிய first full song_கும் இதுதான்)...
🎧. "நூறாவது நாள்" படத்தின் மொத்த Re_Recording_கையும் JUST அரைநாளில் செய்து முடித்து சாதனை படைத்தது...
🎤. ஒரு முறை "அமிர்தவர்ஷினி" என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டபாடலை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் (மழையை வரவழைப்பதற்குண்டான தனித்துவமுடைய ராகம் அது) Recording_ஐ முடித்து விட்டு , பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி..யாரும் வெளியிலே செல்லமுடியாதபடி கனத்த மழை..(முறையாக மெட்டமைத்து பாடினால் மட்டுமே இது சாத்தியம்) ராகதேவனுக்கு மட்டுமே இதுவரை சாத்தியப்பட்ட ஒரு விசயம் இது....
🎧. " ரீதி_கௌளை " எனும் ராகம் இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்பட்டதே இல்லை,முதன் முதலாக ராகதேவன் தான் *கவிக்குயில்* எனும் படத்தில் ''சின்ன கண்ணன் அழைக்கிறான்..ராதையை பூங்கோதையை" என்னும் பாடலில் முதன்முதலில் சினிமா பாட்டின் தலையில் உட்கார்த்தி வைத்தார்...
6🎹. ரஜினி,ஸ்ரீதேவி நடித்த *காயத்ரி* படத்தில் வரும் "வாழ்வே மாயமாா.. வெறுங்கதையா" எனும் பாடலில்தான் இந்திய திரை இசை வரலாற்றில் முதன் முறையாக Electric PIANO (எலெக்ட்ரிக் பியானோ) வாசிக்கப்பட்டது (உபயோகிக்கப்பட்டது)...
🔊. COUNTER POINT (கௌண்டர் பாயிண்ட்) என்னும் யுக்தியை முதன் முதலில் பயன்படுத்தியது சிவக்குமார் நடித்த *சிட்டுகுருவி* என்ற படத்தில் இடம்பெற்ற " என் கண்மனி என் காதலி..இளம்மாங்கனி_உனைப்பார்ததும் துடிக்கின்றதே_துடிக்கின்றதே...நீ சொன்ன ஜோக்கை கேட்டு நானாமோ நகசை்சுவை மன்னனில்லயோ..." என்ற பாடலில்தான்....
🔔. ஞானி *செஞ்சுருட்டி* ராகத்தில் உருவாக்கிய ஒரே பாடல் *16வயதினிலே* படத்தில் வரும் "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. கோழிகுஞ்சு வந்ததுன்னு.. பூனைக்குட்டி சொல்லக்கேட்டு. யானைக்குட்டி வந்ததுன்னு.... கதையில்ல சாமி இப்பாே கானுது பூமி" என்ற பாடல் மட்டும் தான்...
🎻. "சிகப்பு ரோஜாக்கள்" படத்தின் இசைக்கு 12 வயலின் 2 செல்லோ வெறும் 10,000/- ரூபாயில் முடித்தது....
10 📯. ரஜினி நடித்த *முள்ளும் மலரும்* படத்தில் வரும் "ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனெக்கொரு கவளையுமில்லே" என்ற பாடலை 'அந்தோலிகா' எனும் ராகத்தின் அடிப்படையில் *நாடோடி பாடலாக*அமைந்த இந்த இசையை மிஞ்ச இன்னொருவன் பிறக்கவுமில்லை,இனிமேல் பிறக்கபோவதுமில்லை....
11🔇.தமிழ்படவுலக வரலாற்றில் முதன்முதலில் *STEREOPHONIC*(ஸ்டீரியோ) தொழில்நுட்பத்தில் அதுவும் வெளிநாட்டில் முழப்பாடல்களையும் பதிவுசெய்து பயன்படுத்தியது ரஜினி,ஸ்ரீதேவி நடித்த "பிரியா" படத்தில் தான் ....
12 . மோகன்,சுஹாசினி நடித்த *புதிய பார்வை* படத்தில் வரும் "பருவமே புதிய பாடல் பாடு...இளமையின் பூந்தென்றல் ராகம் " என்ற பாட்டிற்கு தொடையில் தட்டி தாளத்திற்கு(இசைக்கு) புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி....
13 📌. விசிலில் மெட்டமைத்து அதற்கு இசையமைத்தவர் இளையராஜா,ரஜினி,மாதவி நடித்த *தம்பிக்கு எந்த ஊரு* படத்தில் இடம்பெற்ற "காலின் தீபமென்று ஏற்றினாலே எந்நெஞ்சில்... ஊடலில் வந்த சொந்தம் மயக்கமென்னா...காதல் வாழ்க" என்ற பாடல் தான்....
14 📣. இந்திய திரையிசை துறையிலேயே யாருமே செய்திராத,செய்யமுடியாத சாதனையாக, படத்தோட கதையை கேட்காமலேயே, பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டுமே வைத்து, அதற்கு மெட்டமைத்து பாடல் பதிவு செய்து ராஜா இசையமைத்து கொடுத்த படம் ராமராஜன்,கனகா நடித்த *கரகாட்டகாரன்*.....
15 👻. வாயசைவை மட்டும் வைத்து அதற்கு பொருத்தமான பாடல்களை கமல் நடித்த *ஹேராம்* படத்திற்கு உருவாக்கியது இதுவரை இசையுலகில் யாரும் செய்திராத சாதனை....
16 🎺. இதுவரை யாரும் ஒரு பாடலுக்கு மட்டும் 137 இசைக்கருவிகளை பயன்படுத்தியது கிடயைாது,அப்படி இசைஞானியால் பயன்படுத்தப்பட்ட பாடல் ரஜினி,ம்முட்டி,ஷோபனா நடித்த *தளபதி* படத்தில் வரும் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. சொல்லடீ இன்னால் ஒரு சேதி" என்ற பாடல்தான் அது....
17 🎷. ?சத்தியராஜ்,ரஞ்சிதா நடித்த *அமைதிப்படை* படத்தில் வரும் அதிபயங்கர ரேப்(RAPE) SENE_க்கு , வெறும் புல்லாங்குழல், தபேலாவை மட்டும் வச்சி வாசித்து தியேட்டரையே மிரய வைத்தது....
18 🎸. நாசர்,ரேவதி இருவருமே குருடர்களாக நடித்த *அவதாரம்* என்ற படத்தில் வரும் "சந்திரரும் சூரியரும்" பாடலில் இசைஞானி அதில் தனி ஆவர்த்தனமே நடத்தியிருப்பார்..*GRANDEUR'S MUSIC* (க்ராண்ட்யூர் இசை) அறிமுகப்படுத்தியது இந்த பாடலில்தான்...
19 🔖. ?ரஜினி,விஜயசாந்தி நடித்த *மன்னன்* படத்தில் இடம்பெற்ற "அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காதஉறவில்லயைே " என்ற பாடல் பாடகர் K.J.ஜேசுதாஸ்_க்கு பல விருதுகளையும் ,எந்த மேடைகளில் அவர் பாட சென்றாலும் அனைவராலும் திரும்ப திரும்ப(once more) கேட்க வைத்த பாடல் மட்டுமல்லாது, திருச்சி நகரில் அருள்மிகு ஐயப்பன் சன்னதி கல்வெட்டில் முழபாடலையும் பொறித்துவைக்கப்பட்டுள்ளதையும் , Audio_அனுதினமும் ஒலித்துக்கொண்டேயிருப்பதையும் காணலாம்...
20 🎨. *சிம்பொனி* கம்போசிங் பண்ண குறைஞ்சது 6 மாதமாவது ஆகும்..ஆனால் 13_ஏ நாளில் வாசித்து முடித்து உலகையே திரும்பி பார்த்து பிரமிக்க வைத்தவர் நம் இசைஞானி இளையராஜா அவர்கள்....
🙏🏾 அவர் என்றென்றும் நீடீடி வாழவும்... என்றுமே அவர் இசைபயணம் இவ்வுலகில் கேட்டவண்ணம் இருக்கவும் வேண்டி இறைவனை பிரரார்திப்போம்....
இவண் : இசையின் அடிமை 🚶🏼🏃🏽..
Image may contain: 1 person, smiling, sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...