Thursday, April 23, 2020

சாதுவுக்கு பதில் பாதிரியார் இறந்திருந்தால் சோனியா சும்மா இருந்திருப்பாரா-அர்னாப் கேள்வி?

அண்மையில் இந்தியாவையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம். மும்பையின் அருகே பால்கர் என்ற நகரில் 70 வயதான கல்பவ்ரிஷ்கா கிரி மகாராஜ் மற்றும் 35 வயதான சுஷில் கிரி மகாராஜ் இரண்டு ஹிந்து துறவிகளை கொலை வெறி பிடித்த கும்பல் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவம் ரத்த கண்ணீர் வடிக்கும் வகையில் இருந்ததை நாடே பார்த்தது.
காவல்துறை அதிகாரிகளிடம் தன்னை காப்பாற்றும்படி சாதுக்கள் கெஞ்சினர். ஆனால் அவர்களோ கொலை வெறி பிடித்த கும்பல்களுக்கு பயந்து சாதுக்களுக்கு அடைக்கலம் வழங்கவில்லை. சில அரசியல்வாதிகள், பத்திரிக்கைகள், ஊடகங்கள் வழக்கம் போல் கோமா நிலைக்கு சென்று விட்டது.
ஊடகவியலாளர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர் அர்னாப் கோஸ்வாமி. இவர் சாதுக்கள் விவகாரத்தில் பலரின் முகத்திரையை கிழிக்கும் வகையில் பல கேள்விகளையும், தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
* நான் நாட்டு மக்களிடம் கேட்க விரும்புகிறேன் மெளலவி அல்லது கிறிஸ்துவ பாதிரியார், இந்து துறவிகளை போல கொடூரமாக கொல்லப்பட்டு இருந்தால் நாடு அமைதியாக இருக்குமா?
* இத்தாலி ரோம் நகரிலிருந்து வந்த அன்டோனியா மைனோ (சோனியா காந்தி) கிறிஸ்துவர் கொல்லப்பட்டு இருந்தால் இதுபோல அமைதியாக இருந்திருப்பாரா?
* நான் கூட்டணி அமைத்துள்ள மாநிலத்தில், இந்து துறவிகளை விரட்டி அடித்ததில் வெற்றி பெற்றுள்ளோம், என்று வேண்டுமானால் இத்தாலிக்கு, அறிக்கை அனுப்பி மகிழ்ந்திருப்பார் என்று குற்றம் சாட்டினார்.
* இந்து துறவிகளின் கொடூரமான கொலையை மூடி மறைக்க நினைக்கும் ஊடகங்களே நீங்கள் வெட்கப்பட்ட வேண்டும் என்று கொதித்தெழுந்தார்.
இவ்வாறு அர்னாப் கோஸ்வாமி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...