Wednesday, April 22, 2020

‘காலரை’ தூக்கிவிடுங்க..!

தமிழகத்தில் கொரோனா மருந்து கண்டுபிடிப்பு முயற்சியில் முதல்கட்ட முன்னேற்றம்.
சென்னை: கொரோனா தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் முதல் கட்டமாக வெற்றி பெற்றிருக்கிறோம் என்று எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
200க்கும் மேற்பட்ட நாடுகளை அலற வைத்திருக்கும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசிகளோ, மருந்துகளோ இதுவரை இல்லை. அதற்கான ஆராய்ச்சிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் அமெரிக்காவின் தடுப்பு மருந்து நிறுவனத்தோடு இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாகவும், தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்திற்கு செல்லும்பட்சத்தில், தடுப்பூசி மூலம் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரசை தடுக்கும் புரதமானது, ரிவர்ஸ் வேக்ஸினாலஜி என்ற முறையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகமே முயன்று வருகிறது.
அதற்காக ஆயிரக்கணக்கான டாலர்களை உலக நாடுகள் செலவழித்து வருகின்றன.
இந் நிலையில் தமிழகத்தில் உள்ள
எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில்
முதல்கட்ட வெற்றி அடைந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
நன்றி :- அப்டேட் நியூஸ் 360 . காம்.
22 April 2020, 11:51 am

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...