Monday, April 27, 2020

விலை போகும் வீனர்கள்.

தெரியாத்தனமாக இன்று (26 ஏப்ரல்) தந்தி டிவியில் இரவு 8 மணிக்கு
ஆயுத எழுத்து கலந்துரையாடல் கேட்டேன். கோரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கைத் தவிர வேறு எதுவும் இல்லையா என்பதே விவாதத்திற்கான டாபிக்.
பெண் நெறியாளர். திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தவிர மூன்று மருத்துவர்கள் பங்கேற்றார்கள்.
ஊரடங்கினால் நம் நாட்டிற்கு ஏற்பட்ட நஷ்டத்தையும், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தையும், பொருளாதார முடக்கத்தையும் பற்றியே கேள்விகள் கேட்டார் நெறியாளர்.
ஊரடங்கு எதற்கு என்றே மீண்டும் மீண்டும் கேள்வி. சமூக ஆர்வலர்கள் சொல்கிறார்களாம் ஊரடங்கினால் மக்கள் பலவிதத் தொல்லைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று.
பேசிய மருத்துவர்கள் அனைவரும் இன்று நாட்டில் நிலவும் சூழ்நிலையில் ஊரடங்கு ஒன்றுதான் நோய் பரவலைக் கட்டுப்படுத்த சரியான உபாயம் என்றே வாதித்தார்கள்.
நெறியாளருக்கோ, இதைக் கேட்கவே பொறுமை இல்லை. புத்திசாலித்தனம் என்று நினைத்து, குறுக்கே புகுந்து கேள்விகள் கேட்டு அவர்களைப் படுத்தினார். திருவண்ணாமலை கலெக்டர் ஊரடங்கை ஆதரித்து முக்கிய தகவல் கொடுத்தபோது அவரைப் பேச விடவில்லை.
நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மக்கள் படும் கஷ்டங்களைப் பெரிது படுத்திக் காட்டி, ஊரடங்கு உத்தரவைப் குறை கூறினார் அந்த நெறியாளர். ஆனால் ஊரடங்கு மட்டும் இல்லாதிருந்தால் இச்சமயம் நம் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்கள் ஆகியிருக்கும் என்ற உண்மையை மறைக்கப் பலவாறு முயற்சித்தார்.
அமெரிக்காவில் 9 லட்சம் மக்களை இந்நோய் தாக்கியுள்ளது. 30000 மக்கள் உயிரிழந்துள்ளனர். அமெரிக்க மக்கள் தொகை 32 கோடிதான். மேலும் அங்குள்ள சுகாதார அமைப்பு மிகப் பலம் வாய்ந்தது.
நம் நாட்டில் இன்று வரை 27000 பேருக்கே நோய் வந்துள்ளது. 750 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். ஆனால் நம் மக்கள் தொகையோ 130 கோடி. இவ்வளவு பெரிய ஜனத்தொகையில் கோரோனாவின் தாக்கம் இவ்வளவு குறைவாக இருக்கக் காரணமே சரியான சமயத்தில் அமல் படுத்திய ஊரடங்கு தான்.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், ஊரடங்கை அமல் படுத்தாமலேயே நோயைக் கட்டுப்படுத்திய நாடுகளை நாம் பின்பற்ற வேண்டும் என்றவர் , ஸ்வீடனை உதாரணமாகக் காட்டினார். நோய் தாக்கியுள்ள 213 நாடுகளில் ஊரடங்கு போடாத ஒரே நாடு ஸ்வீடன்தான். மற்ற 212 நாடுகளை விட்டு இந்த நாட்டைப் பின்பற்ற வேண்டுமாம்!
சரி, அப்படி அங்கே என்ன வாழ்கிறது என்று பார்ப்போம். ஸ்வீடனின் மக்கள் தொகை 1 கோடி தான். மிக மிக வளர்ந்த நாடு. அப்படி இருந்தும் அங்கே நோய் வாய்ப்பட்டவர்கள் எண்ணிக்கை 10000க்கும் மேல். இறந்தவர்கள் எண்ணிக்கை 1000க்கும் மேல். இதுதான் இந்த நாட்டின் லட்சணம். இதை நாம் பின்பற்ற வேண்டுமாம்!
விவாத நேரம் முழுவதும் நெறியாளர் செய்தது வெறும் விதண்டாவாதம் தான். யாரோ பெயர் தெரியாத, தன்னைத்தானே அதி புத்திசாலி என்று நினைத்துக் கொண்ட, சமூக ஆர்வலர்கள் என்று தாங்களே விளம்பரம் செய்து கொள்ளும் ஒரு கூட்டத்தின் ஏற்க முடியாத, ஏற்கவே கூடாத கருத்துக்களை வேண்டுமென்றே விளம்பரப் படுத்துவது போல் தான் தெரிந்தது.
ஊரடங்கினால் நாட்டில் நோய் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற உண்மையை வெளி உலகம் புகழ்ந்தாலும் அதைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும் என்ற எண்ணமே அவரது நெறியில் தெரிந்தது.
எப்படியோ, ஊரடங்கை விலக்க வைத்து நோய்ப் பரவலை துரிதப் படுத்தினால் கோடிக்கணக்கான மக்களை நோய் தாக்கும். அவ்வளவு நோயாளிகளை குணப்படுத்த மருத்துவர்களும் மருத்துவ மனைகளும் போதாமல் பல லட்சக்கணக்கான மக்கள் இறந்து போவார்கள்.
கோரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் பிரதமர் மோடி தோல்வி அடைவார். உலக அளவில் அவர் புகழ் மங்கும். உள் நாட்டில் அவரது செல்வாக்கு குறையும். இதில் நாம் அரசியல் ஆதாயம் தேடலாம்.
திமுக சார்பு டிவியில் இதைவிட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...