Friday, April 24, 2020

ஜோதிகா & தமிழ் ஆர்வலர்களுக்கு.

ஜோதிகா அவர்களே நீங்கள் சொன்ன கருத்தில் எந்த முரண்பாடும் எனக்கு இல்லை ஆனால் உங்கள் எல்லோருக்கும் கோவில் மட்டும் கண்ணுக்கு தெரிவதற்கு முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய விடையங்கள் ஏராளமாக இருக்கிறது.
தமிழ் நாட்டில் அறநிலையத்துறைக்கு கீழ் சுமார் 45,000 கோவில்கள் இருக்கின்றன அவற்றிற்கு சொந்தமாக
சுமார் 5லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறது
22,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இருக்கிறது
54 கல்வி நிறுவனங்கள் (கல்லூரி, பாடசாலை) உள்ளன.
36 கருணை இல்லங்கள் இருக்கின்றது
6 சித்த வைத்தியசாலை இருக்கின்றது
2 ஆங்கில மருத்துவமுறை மருத்துவமனையும் இருக்கின்றது.
ஆலயங்களினூடாக சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான வருவாய் தமிழ்நாட்டிற்கு கிடைக்கின்றது. அப் பணத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு பல திட்டங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஏழை எளியோருக்கான 4கிராம் தங்கம் உட்பட நடாத்தப்படும் திருமண திட்டம் ஆண்டுக்கு சுமார் 1,000க்கும் அதிகமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது
754கோவில்களில் அன்னதானம் செய்யப்படுகிறது அதாவது ஆண்டுக்கு சுமார் 30கோடியில் அன்னதானம் மட்டும் தினமும் வழங்கப்படுகிறது
ஆன்மீகம் மற்றும் ஒழுங்கம் சார்ந்த (தமிழ் இலக்கியங்களில் காணப்படும் ) வகுப்புக்கள் சுமார் 28,000 மாணவர்களுக்கு 517 கோவில்களால் நடாத்தப்படுகிறது.
ஆண்டுதோறும் நடாத்தப்படும் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் ஆலயத்தினால் பெறப்படும் நிதியில் இருந்தே செயல்படுத்தப்பட்டுவருகிறது.
தமிழ்நாட்டில் காணப்படும் ஆலயங்களின் செலவுகள், கிராமங்களில் காணப்படும் வசதியற்ற கோவில்களின் பராமரிப்பு உட்பட மேட்கூறப்பட்ட நலத்திட்டங்களின் செலவுகள் அனைத்தும் கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களினூடாக பெறப்படும் வருமானங்களின் ஊடாகவே செய்யப்பட்டுவருகிறது.
கோவில்கள் என்பது எங்களுடைய அடையலாம், தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் மணிமகுடம். எங்களை பொறுத்தவை தஞ்சை கோவிலுக்கு செய்வதை விட வேறெதுவும் பெரிதில்லை. இவ்வாறு கூறுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது அதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தியாவிலையே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைதருவது தமிழ்நாடு தான். ஆண்டுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடு அடங்கலாக சுமார் 39கோடி மக்கள் தமிழ்நாட்டிற்கு சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இவர்களில் 90விகிதத்திற்கும் அதிகமான மக்கள் ஆலயங்களை தரிசிக்கவும் அதன் அழகை கண்டுகொள்ளவுமே வருகிறார்கள்.
"தமிழ்நாட்டில் மிகவும் போற்றத்தக்க வகையில் கோவில்களும் கட்டிட களையும் அமைந்துள்ளது" என்ற வாசகம் தான்
தமிழ்நாடு மற்றும் இந்திய சுற்றுலாத்துறை வாரியங்கள் முதன்மைப்படுத்தி விளம்பரம் செய்கின்றது. எமது வருவாயில் ஆலயங்களின் பங்கே இரண்டாவது இடத்தில் இருக்கின்றது அவற்றை அழகாக வைத்துக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று அரசியலை ஆராய்ந்து சமூக செயல்பாடுகளை உற்றுநோக்குபவர்கள் கண்டிப்பாக அறிவார்கள்.
மருத்துவமனைகளுக்கு செலவழிக்க வேண்டும் என்று உங்களுடன் சேர்ந்து நாங்களும் கோரிக்கை வைக்கின்றோம். மக்களோ அல்லது அரசோ கோவிலுக்கு செலவு செய்கிறது என்பதை விட தேவையில்லாமல் சினிமா துறைக்கு கொடுக்கும் வரி சலுகையை நிறுத்தினாலும், சினிமா துறையில் புரளும் கருப்புப்பணத்தை வெளிகொண்டுவந்தாலும், அவ்வளவு ஏன் உங்கள் துறை சார்ந்த அனைவரும் வருமான கணக்குகளில் நேர்மையாக இருந்தாலே மருத்துவமனைகள் எல்லாம் நீங்கள் சென்று மருத்துவம் பார்க்கும் அளவிற்கு மேம்பட்டுவிடும்.
உங்கள் ஒப்புவமை நீங்கள் பணிபுரியும் துறை சார்ந்து இருந்திருக்கலாம் ஆனால் இந்து அறநிலைத்துறையை பற்றியும், தமிழர்களின் காலை கலாச்சார பாரம்பரியம் பற்றியும் கொஞ்சம் கூட தெரிந்துகொள்ளாமல் அதனுடன் ஒப்பிட்டு பேசுவது மிகவும் தவறானதேயாகும்.
இதையெல்லாம் பேசுவதற்காக நீங்கள்ஏறிய மேடையும் அந்த நிகழ்விற்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் கூட 2 மருத்துவமனைகளை உருவாக்கியிருக்கலாம் என்று எங்களாலும் கூற முடியும். அவ்வளவு என் இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிகமாக பணத்தை விரயமாக்குவது சினிமாவிற்கு தான். அவ்வாறான சினிமா நமக்கு எதற்கு என்று கேட்கலாம். இதெல்லாம் தாண்டி அதற்க்கு பின்னால் இருக்கும் வணிகம், வேலைவாய்ப்பு கண்முன் தெரிகிறது.
இனியேனும் தமிழர் "கலை, கலாச்சார" விடயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...