Monday, April 27, 2020

ஆயிரம் விமர்சனம் வந்தாலும் அந்த பண்புள்ள குடும்பம் திருந்த போவதில்லை ஊருக்கு தான் உபதேசம் எல்லாம்.

சூர்யா,ஜோதிகா திருமணம் வீடியோ பார்த்தேன் 2006 Hotel Park Sheraton Chennai யில் நடந்தது எவ்வளவு நேர்த்தியாக திட்டமிடப்பட்டு ஹிந்து கலாசாரத்தை, குறிப்பாகொங்கு வெள்ளாள கவுண்டர்கள் முறைப்படி பந்தக்கால் நட்டு,முகூர்த்த கால் பிடித்து,யாகம் வளர்த்து,அம்மிமிதித்து அருந்ததி பார்த்து அவ்வளவு சிறப்பா நடந்திருக்கு நன்றாக வாழட்டும் என் வாழ்த்துக்கள் (கொஞ்சம் லேட் தான்),,,,,,
தமிழன் சத்யராஜ் வெள்ளக்கார துரை கணக்கா வந்திருந்தார் ,எண்ணற்ற பிரபலங்கள் ,,குறிப்பா கலைஞர் கருணாநிதி , அம்மையார் ஜெயலலிதா எல்லோரும் பங்கேற்ற பிரம்மாண்டமான திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி.......
சரி அதெல்லாம் எதுக்கு இப்போன்னு நீங்க கேட்கிறது புரியுது....ஒண்ணுமில்லை சும்மா ஒரு சின்ன கணக்கு போடலாம்னு ,,,,,,அந்த ஹோட்டல் 5ஸ்டார் அந்தஸ்துன்னு நினைக்கிறன்,சாப்பாடு,
டெக்கரேஷன்,லொட்டு லொசுக்குன்னு எப்படியும் 2006ல் 2-3 கோடி செலவாயிருக்குமா ?,, ஒருநாள் கூத்துக்கு 3கோடி செலவு எதுக்கு ,அதுக்கு பேசாம ஒரு விநாயகர் கோவிலில் அல்லது ஏதாவது தர்காவில் சிம்பிளா முடுச்சுட்டு அந்த 3கோடிக்கு ஏதாவது ஒரு அரசு மருத்துவமனையை தத்தெடுத்து தூய்மை பணியை செய்துவந்தால் எத்துணை பேருக்கு முன்னுதாரணமா இருக்கலாம் ,,,,,என்ன நா சொல்றது ?
Note:அதுதான் அகரம் foundation நடத்துறாங்களேன்னு யாரும் இங்கு வரவேண்டாம்,,,அதுக்கு நிறையா இருக்கு.......
அப்புறம் இதெல்லாம் அவங்க விருப்பம்ன்னு யாரும் வக்காலத்து வாங்கவேண்டாம் ஏன்னா ஜெய்ப்பூர் அரண்மனையும் ,தாஜ்மஹாலும்,தஞ்சை பெரியகோவில் இப்படி ஒவ்வொருத்தரின் விருப்பம்தான்........
(இங்க மக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும்போது விண்ணுக்கு ராக்கெட் எதுக்குன்னு கேட்டவரின் மகன்தான் இப்போ அந்த technologyயை பயன்படுத்தி படத்தை இணையத்தில் வெளியிடறாராம்,,,மகனும் சளைத்தவர் இல்லை நீட்டுக்கு நீட்டி முழங்கியவர்தான்,,செலஃபீ எடுத்தவனின் செல்போனை தட்டி உடைச்சுட்டு அப்புறம் புது போன் வாங்கிக்கொடுத்த வள்ளல்கள்)
இதுயெல்லாம் பணம் சம்பாரிக்க ஒருவிதமான யுக்தி என்பது எத்தனைபேருக்கு புரியுதுன்னு தெரியலை....என்னவோ போடா சுப்பா
அப்புறம் இனொன்னய் மறந்துட்டேன்,,கோவில் கட்டினவங்க யாரும் கோவிலுக்குள்ள(கற்பகிறக்கத்திற்குள்) போகமுடிவதில்லையாம்....இந்த முத்தை உதிர்த்தவரும் அக்கா மாமனார் தான்.....இவங்க வீட்டை கட்டினவங்க எப்ப வேணுநாளும் இவங்க வீட்டுக்குள் (எல்லா ரூமுக்கும்தான்) வந்துட்டு போக இவங்க permision கொடுத்து வச்சுருக்கங்களாம்..
(சினிமாவுக்கு செலவு பண்றீங்க அதேமாதிரி மருத்துவமனைக்கும் நிதி கொடுங்கன்னு சொல்லியிருந்தா அதில் ஒரு நியாயம் இருக்கும்....)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...