டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குடியிருக்கும் வீட்டை காலி செய்யச் சொல்வோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் சில பகுதிகளில், வாடகைக்கு குடியிருக்கும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை, வீட்டின் உரிமையாளர்கள், காலி செய்யும்படி வற்புறுத்துவதாக, அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.

இதுபோன்ற நடவடிக்கைகள், பொது சேவை செய்வோரை, பணி செய்யவிடாமல் தடுக்கும் செயலாகும். அவர்கள் மீது, மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், மாநகராட்சி கமிஷனர்கள், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment