Thursday, April 30, 2020

எல்லாபுகழும்எம்ஜிஆர்கே...அடித்தட்டு மக்களின் அவதார புருஷன்.

ஒரு முறை எம்ஜிஆர் தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு சென்று கொண்டிருந்தார் வேனில் ரோட்டின் இரு மறுங்கிளும் மக்கள் திரளாக நின்று கோஷமிட மாலை போடவும் ஆராவாரமாக வந்து கொண்டிருந்தார் ஏழுமலை என்ற கிராமத்தை அடைந்தவுடன் திடீரென வேன் நின்றது ஏன்? என்று பார்க்கையில் ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் வழியை மறைத்து படுத்துக்கொண்டார் உடனே வேனை விட்டு எம்ஜிஆர் இறங்கி விட்டார் குழந்தைகள் மற்றும் வயதான மூதாட்டிகளுக்கு முதலிடம் கொடுப்பார் எல்லோரும் அறிந்ததே!
என்ன வேண்டும் எழுந்திரியுங்கள் என்றதும் எம்ஜிஆரை முதன் முதலில் அருகில் பார்த்த பாட்டிக்கு கண்ணீர் பொங்குகிறது வாய் வார்த்தை வரவில்லை பின் தளத்த குரலில் நீ நல்லா இருக்கனும் ராசா சரிம்மா என்னனு சொல்லுங்க ஒன்னும் இல்லப்பா என் வயலு ரெண்டு வருசமா விளச்சலே இல்ல ஓ பாதம் பட்டா விளையும் னு சொன்னாங்க... அதா நல்ல மழை பெய்தால் தானா விளையும் அம்மா சரி வாங்க எங்கே? இருக்கு என்றார் தலைவர் அந்தா தெரியுது பாருப்பா என்றதும் கூட்டத்தில் விசில் பறக்குது கூட்டம் பின் தொடர எம்ஜிஆர் யாரும் என் பின்னே வரக்கூடாது வயல் கெட்டு விடும் என்று கட்டளையிட்டவாரே வேஷ்டியை தூக்கி பிடித்து கொண்டு ஐந்து நிமிடத்தில் சென்று தன் செருப்பை கழட்டி விட்டு வயலை தொட்டு வணங்கி விட்டு திரும்பினார் தலைவர்
பச்சை பசேலான வயலில் வெள்ளை ஜிப்பா வேஷ்டியில் வெள்ளை கலர் தொப்பி கருப்பு கண்ணாடி தங்கமான நிறத்தில் அவர் முகம் நேரடியாக அன்று அவரை பார்த்த கண்கள் தூங்கி இருக்கவே முடியாது
பின்பு அந்த பாட்டி தயாராக வைத்திருந்த குண்டு சோடாவை கொடுக்க தன் பெருவிரலால் ஒரே அமுக்கு அமுக்கி இரண்டு மடக்கு குடித்து விட்டு பாட்டியை கட்டி பிடித்து விட்டு கை ஆட்டிக் கொண்டே வேனில் ஏறி பறந்தார் எம்ஜிஆர் இது தான் கூட்டத்தில் எல்லோரும் பார்த்தது
ஆனால் பாட்டியின் முந்தானை கொசவத்தில் பேப்பரில் சுற்றிய பணக்கட்டு யார் கண்ணுக்கும் தெரிய வில்லை அதை கட்டிப்பிடிக்கும் போதே தனது ஜிப்பாவில் இருந்து மாற்றி விட்டார் தலைவர் சென்ற பின் அந்த பாட்டியை கட்டிப்பிடித்த பெண்கள் எத்தனை பேர்? அவ்வளவு சந்தோஷம்
பின் தன் உதவியாரிடமும் ஓட்டுனரிடமும் என்னை எவ்வளவு தூரம் நம்பி இருக்கும் இந்த மக்கள் எல்லோருக்கும் எப்படி நான் உதவ போகிறேன் என்று தனது கருப்பு கண்ணாடியை கழட்டி கர்சிப்பால் கண்ணை தொடைத்து கொண்டே பயணமானார் #பொன்மனச்செம்மல்
நீங்க நல்லா இருக்கனும்
நாடு முன்னேற....
என்ற பாடல் தூரத்தில் ஒலித்த வண்ணமே இருந்தது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...