Tuesday, June 9, 2020

வரலாறு அறிவோம்.


ஊழலுக்காக கருனாநிதி ஆட்சி 1991 Jan 30 th கலைக்கப்பட்டு 1991 May பொது தேர்தல் நடக்குது... அம்மாவுக்கு , கட்சி தன்னோட கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு நடக்குற முதல் தேர்தல் ...
கருணாநிதியோ, “அய்யய்யோ கொல்றாங்க “ பாணியிலே என்னோட ஆட்சியை ஈழ தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிச்சதால கலைச்சுட்டாங்கன்னு அழுது உருண்டு புரண்டு ஓட்டு கேட்ட தேர்தல் ...
சுனாமி அடிச்ச மாதிரி அதிமுக கூட்டணி அமோக வெற்றி , திமுக ஜெயிச்சது மொத்தமே 2 சீட்டுதான் , ஒன்னு கருணாநிதி , இன்னொன்னு பருதி இளம்வழுதி ...
சட்டசபையில் அம்மாவை சந்திக்க தைரியம் இல்லாத கருணாநிதி , ஜெயிச்ச உடனே தன்னோட , MLA பதவியை ராஜினாமா செஞ்சுட்டு வீட்டுல கூப்புல உக்கார்ந்தாரு ...
ஆனா
2006 தேர்தல்ல கருனாநிதி ஜெயிச்சு ஆட்சி அமைக்கிறார் ... அதிமுக உறுப்பினர்கள் ஒருதடவை கருணாநிதியால் கூண்டோடு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள்.. அம்மா அன்று சட்டசபைக்கு வரவில்லை என்பதால், அம்மா மட்டும் சஸ்பெண்ட் லிஸ்ட் ல இல்ல ...
மறுநாள் ஒற்றை ஆளாய் , சிங்க பெண்ணாய் சட்டசபைக்குள் நுழைகிறார் .... கிட்டத்தட்ட 2 மணி நேரம் சட்டசபையை சூறாவளியாய் சுழன்றடித்தார் ... துறை வாரியாக அமைச்சர்கள் முதல் கருணாநிதி வரை அத்தனை பேரையும் கேள்வி கேட்டு பந்தாடினார் ...
இறுதியாக , நான் இப்போது இந்த அவையை விட்டு செல்கிறேன், திரும்ப வரும்பொழுது முதலமைச்சராகத்தான் வருவேன் என கருனாநிதி க்கு சட்டமன்றத்திலே சவால் விட்டு வந்து , அதை செய்தும் காட்டினார்... ஆம் அதற்க்கு பின் வந்த எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்று, MGR க்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் ஆட்சியை கைப்பற்றி சாகும் வரை முதலமைச்சராக இருந்துவிட்டு கருணாநிதியையும் சாகுற வரைக்கும் கூப்புல உக்கார வச்சிட்டு போனாங்க ..
கருணாநிதி மாதிரி என்னைக்கும் யாருக்கும் பயந்து MLA பதவியை ராஜினாமா செஞ்சது கிடையாது அம்மா..
இப்பவும் சொல்றேன் , கருணாநிதியின் பிம்பங்கள் எல்லாம் பொய்யால் கட்டமைக்கபட்டதே..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...