இந்து மத இறையாண்மைக்கு எதிராகவும் அவதூறாகவும் பேசும் அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் விழாவிற்கு ,அவர்களை பாராட்டி பேசுவதற்கு ..
இந்து இறையான்மை, ஆன்மீக பேச்சு இவற்றைப் பற்றிப் பேசி பேசியே வருமானம் மற்றும் உலகம் முழுவதும் சுற்றி பயன் பெற்றும் வரும் பேச்சாளர்கள் ஏன் செல்கிறார்கள் என்று பலபேர் வருத்தத்துடன் பல பதிவுகளை போடுகிறார்கள் ??
நான் இதை எப்படிப் பார்க்கிறேன் என்றால்..
நாம் தான் ஜனநாயகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் தமிழ் புலமை பெற்ற பல பேச்சாளர்கள் தங்களை அந்த காலத்துப் புலவர்கள் போலவே இன்னமும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் .
அவர்களை பொறுத்த வரைக்கும் ஆட்சியில் இருந்தவர்கள், ஆட்சிக்கு வரக் கூடியவர்கள் எல்லாருமே ராஜா மாதிரிதான் .
அதனால் அவர்கள் அதே அடிமைத்தனத்தை காட்டுகிறார்கள் .
ஆணவம் மிகுந்த மனிதர்களுக்கு முரணான நம்பிக்கை கொண்ட மனிதர்கள் வந்து அடிபணிந்து புகழ்ந்து பாராட்டும் பொழுது தான் மமதை தலைக்கு ஏறும் .
அதை தான் அவர்கள் விரும்புவார்கள்.
அதை தான் அவர்கள் விரும்புவார்கள்.
அவர்களுக்குள்ளேயே அவர்களை வியந்து பார்க்கும் மனிதர்களால் புகழப்படுவது அவர்களுக்கு எந்தவிதமான பெரிய ஆனந்தத்தை தரப்போவதில்லை.
அதனால்தான் இலக்குகள் ஆக்கப்படுகிறார்கள் இப்படிப்பட்ட அடிமைத்தனம் கொண்ட தன்மானம் இல்லாத போலி மனிதர்கள்!
ராஜாக்கள் அழைப்பு விடுத்தால் எப்படி புலவர்கள் பாடி சன்மானம் பெற்று வருவார்களோ அதுபோல் தான் அவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள் .
மற்றபடி இவற்றை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
நீங்க என்ன நினைக்கிறீர்கள் ?
No comments:
Post a Comment