Thursday, December 10, 2020

தமிழக தேர்தல் களம் மாறுகிறது-

 தமிழக தேர்தல் களம் இந்த முறை படு

சுவாரசியமாக இருக்க போகிறது.கடந்த
2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்
கூட்டணி மூலமாக ஆட்சியை இழந்த
திமுக இந்த முறை நான்கு முனைப்போட்
டியால் மறுபடியும் மண்ணை கவ்வ இரு க்கிறது.
நான்கு முனைப் போட்டி என்றவுடன் அது
ஏதோ அட்ரஸ் இல்லாத கட்சிகள் சேர்ந்து
அமைக்கும் கூட்டணியாக இருக்காது.
ஒவ்வொரு கூட்டணியும் குறைந்தது 10
சதவீதம் வாக்குகளை பெறக்கூடிய வகை
யிலேயே இருக்கும் .
இந்த முறை சீமான் தனியாக நிற்பது சந்தேகம் தான் சீமான் கமலுடன் கை
கோர்க்கும் நிலை உருவாகலாம். ஆரம்ப
கட்ட வார்த்தைகள் துவங்கி விட்டது.கமல்
கட்சி ஆரம்பித்த பொழுது அவர் வீடு தேடி
சென்று வாழ்த்தியவர் சீமான் என்பதால்
கமல் சீமான் கூட்டணி தான் முதலில் உரு
காக கூடும்.
கடந்த லோக்சபா தேர்தலிலேயே கமல்
சீமான் தேமுதிக கூட்டணி உருவாக இரு
ந்தது.ஆனால் அது ஏனோ அப்பொழுது
உருவாக வில்லை. ஒரு வேளை கடந்த
லோக்சபா தேர்தலில பிஜேபி அதிமுக
கூட்டணியை வழி நடத்தி இருந்தால் அப்
பொழுதே உருவாகி இருக்கலாம்.
ஆனால் என்ன செய்ய? நேரம் ஒன்று
இருக்கிறது அல்லவா. அது இப்பொழுது
தான் தமிழகத்தின் தலை எழுத்தை மா ற்றுவதற்கு தமிழக அரசியலை அமித்ஷா
வின் கைகளில் அளித்து இருக்கிறது.
இந்த கூட்டணி உருவாகிய பிறகு அதில் தேமுதிக திருமாவளவன் வந்து இணை யக்கூடும்.இந்த கூட்டணி உருவானால் அசாதுதீன் உவைசியின் முதல் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்க கூடும்.
சீமான் திருமாவளவன் தேமுதிக கூட்ட ணி வட மாவட்டங்களில் திமுகவை நிச்ச யமாக காலி செய்யும். கமல் சீமான் தேமு
திக திமுகவின் நகர்ப்புற ஓட்டுக்களை
காலி செய்யும்.சீமான் திருமா உவைசி
திமுகவின் முஸ்லிம் ஓட்டுக்களுக்கு
வேட்டு வைக்கும்.
மொத்தத்தில் இந்த கூட்டணி சுமார் 10 சதவீத வாக்குகளை பெற முடியும் என்ப
தால் திமுக கூட்டணிக்கு முதல் வேட்டு
வைக்கும் வேலையை கமலும் சீமானும்
ஆரம்பிக்க இருக்கிறார்கள்.
அடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணியும்
உடைய வாய்ப்புகள் அதிகரித்து வருகிற து என்பதற்கான சமிக்ஞைகள் தெரிய
ஆரம்பித்து விட்டது.
கடந்த வாரம் அறிவாலயம் வந்த குண்டு
ராவ்க்கு திமுக சிறந்த வரவேற்பு அளிக்க
வில்லை என்பதால் காங்கிரஸ் கூடாரம்
கவலையில் இருக்கிறது.40 தொகுதிக ளை பெற காங்கிரஸ் மல்லுக்கு நிற்கிற து.
பதிலுக்கு திமுக 25 தொகுதிகளுக்கு மேல் 1 தொகுதியை கனவில் கூட உங்க
ளுக்கு அளிக்க முடியாது .அதோடு 25
தொகுதிகளின் வேட்பாளர்களை யும் நா
ங்கள் தான் முடிவு செய்வோம் என்று பிர
சாந்த் கிஷோர் அறிவுரை படி கண்டிசன்
போட ஆரம்பித்து விட்டது.
தொகுதி எண்ணிக்கையை விட இந்த கண்டிஷன் தான் காங்கிரஸ் தலைமை
யை கவலை கொள்ள செய்து இருக்கிற
து. திமுக கூட்டணி என்பதால் வெற்றி உறுதி என்கிற நம்பிக்கையுடன் இப்பொ ழுதே பல காங்கிரஸ் பெரும் புள்ளிகள்
பல கோடிகளை வைத்து கொண்டு கா த்து இருக்கிறார்கள்.
அவர்களிடம் கிடைக்கும் தொகுதிகளை
கை மாற்றி விட்டு கிடைக்கும் பல கோடி
களை வைத்து அடுத்த தேர்தல் வரை
வண்டியை ஓட்டி விடலாம் என்று கனவில்
இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் களு
க்கு ஆரம்பத்திலேயே வேட்பாளர்களை
யே நாங்கள் தான் முடிவு செய்வோம்
என்று திமுக காங்கிரஸ் கட்சிக்கு இனி
மா அளித்து விட்டது.
கமல் காங்கிரஸ்க்கு துண்டு போட்டு வை
த்து இருந்தாலும் சீமானை பார்த்தாலே
காங்கிரஸ் கட்சிக்கு ஆகாது என்பதால்
திமுக கூட்டணி இல்லை என்றால் காங் கிரஸ் சசிகலா அதிமுகவை நோக்கி செல்வது தவிர்க்க முடியாதது.
அண்ணன் வைகோ அவர்களும் திமுக
கூட்டணியில் நிச்சயமாக இருக்க மாட்
டார் என்று உறுதியாக கூறலாம். ஏனெ
ன்றால் வைகோ கட்சி ஆரம்பித்த 1994 ல் இருந்து இதுவரை திமுகவுடன் லோக்சபா
தேர்தலில் 1999,2004,2019 என்று மூன்று
தேர்தல்களில் கூட்டணி வைத்து இருக்கி
றார்.
ஆனால் ஒரு ்தடவை கூட சட்டமன்ற தேர்
தலில் கூட்டணி வைத்தது கிடையாது.
மத்தியில் பிஜேபி திமுக கூட்டணியில் இருந்து கொண்டே 2001 சட்டமன்ற தேர் தலில் மதிமுகவை திமுக பிஜேபி கூட்ட ணியில் இணையாமல் தனித்து போட்டி யிட்டு திமுக வின் தோல்வியை கண்டு
ரசித்தவர் வைகோ.
அதற்கு பிறகும் 2004 லோக்சபா தேர்த லில் திமுக காங்கிரஸ் கூட்டணியில்
இணைந்த வைகோ 2006 சட்டமன்ற தேர்
தலில் திமுக கூட்டணி தான் என்று கரு ணாநிதியிடம் சூடம் அடித்து சத்தியம் செய்து இருந்தார். ஏனென்றால் ஜெயல லிதா வைகோவை 2002 ல் பொடாவில் கைதுசெய்து வேலூர் சிறையில் போட்டு இருந்தார்.
அப்பொழுது கருணாநிதி போய் வைகோ
பார்த்து கண்ணீர் வடித்து தம்பி என்று
ஒப்பாரி வைக்க பதிலுக்கு வைகோ அண்
ணா என்று கதறி அழ வேலூர் ஜெயிலில்
இவர்கள் இரண்டு பேரும் சிந்திய கண்
ணீர் இருக்கிறதே..சந்திப்பு படத்தில் சி வாஜி கூட அப்படி நடித்து இருக்க முடியா
து.
ஜாமீன் வேண்டாம் கடைசி வரை ஜெயி லில் தான் இருப்பேன் என்று அடம் பிடித் த வைகோவை கெஞ்சி கூத்தாடி 2004 ல் சிறையில் இருந்து அழைத்து வந்த கரு
ணாநிதி 2004 லோக்சபா தேர்தலுக்கு
அதிமுக பிஜேபி கூட்டணியை தோற்கடிக்
க வைகோவை பயன்படுத்தி கொண்டார்
2004 லோக்சபா தேர்தலில் வைகோ பாம க காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கள் என்று மெ கா கூட்டணி அமைத்து மெகா வெற்றி பெற்ற கருணாநிதி அந்த கூட்டணியை 2006 சட்டமன்ற தேர்தல் வரை கொண்டு செல்ல விரும்பினார்.அதற்காக வைகோ
வுடன் பல மேடைகளில் இணைந்து வை
கோவின் பெருமைகளை அள்ளி விட்டு
வந்தார்
கருணாநிதி தம்பி என்பார் வைகோ அண்ணா என்று கண்ணீரோடு நிற்பார்
கடைசியில் இந்த அண்ணன் தம்பி கண்
ணீர் பாச நாடகம் வெறும் 10 தொகுதிக ளில் உடைந்து போனது. கருணாநிதி 25
தொகுதிகள் தான் என்று கூற பதிலுக்கு
வைகோ வைத்தார் பாருங்கள் ஆப்பு
செமயாக இருந்தது.
திருச்சியில் மாநாடு நடத்தி கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை அறிவிக்க நினைத்த கருணாநிதி தம்பி வைகோ வுக்கு பெரிய கட் அவுட் வைத்து காத்து
இருக்க கடைசியில் கருணாநிதிக்கு பெப்பே காட்டி விட்டு வைகோ போயஸ் கார்டன்வாசலில் நின்றதை நினைத்தால் இப்பொழுதும் சிரிப்பாக இருக்கிறது
இதை யெல்லாம் நினைத்து பார்க்கும் பொழுது வைகோ திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாதுஎன்பதக தான் லட்சிய மாக வைத்து இருக்கிறார் என்று அறிந்து
கொள்ளலாம்.
அதனால் இந்த முறையும் வைகோ திமுக
கூட்டணியில் இருக்க மாட்டார் என்று உறு
தியாக கூறலாம்.வைகோ நிச்சயமாக
சீமான் கமல் இருக்கும் கூட்டணிக்கு செ
ல்ல மாட்டார் என்பதால் அவரின் அடுத்த
சாய்ஸ் சசிகலா அதிமுகதான் இருக்க மு
டியும்.
சசிகலா அதிமுகவை நோக்கி காங்கிரஸ் வைகோ ஜபருல்லா இன்னும் பல சிறிய
கட்சிகள் செல்லக் கூடும். 2 ஜி வழ்க்கில்
கனிமொழி ராஜா குற்றவாளிகள் என்று
தீர்ப்பு வந்தால் திமுக கூட்டணியை விட்டு
கம்யூனிஸ்ட்களும் விலகி மாற்று வழி யை தேட ஆரம்பித்து விடுவார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு மு
னைப்போட்டி உறுதி.என்பதால் அதிமுக பிஜேபி ரஜினி எதிர்ப்பு. வாக்குகள் பிரி வதால் திமுகவினால் வருகின்ற சட்டம ன்ற தேர்தலில் வெற்றி பெறவே முடியா
து..அதற்கான முயற்சியை முன்னெடு த்து வருகிறார் கமல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...