Friday, June 4, 2021

பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?- தமிழக அரசு.

 தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் 11 மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது.

பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?- தமிழக அரசு
கோப்புப்படம்


















தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கானது வருகிற 7-ந்தேதி முதல் 14-ந்தேதி காலை 6 மணி வரை  சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. 

கொரோனா வைரஸ்

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர இதர மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும். 

அவை:-

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள்  காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். 

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி 

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். 

* இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனை மட்டும் அனுமதிக்கப்படும். 

* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். 

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும். 

* மின் பணியாளர், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். 

* மின்பொருட்கள், பல்புகள், கேபிள்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும். 

* மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* ஹார்டுவேர் கடைகள்  காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதிக்கப்படும்.

* வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும் வாடகை டேக்ஸிகளில் ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...