இனிய #காலைவணக்கம் நண்பர்களே ....
இளையராஜாவின் ஆரம்ப கால படங்களில் அவரது பிண்ணனி இசை பற்றி பேசபடாவிட்டாலும் மனுசன் கொஞ்சம், கொஞ்சமா ரசிகர்களை ட்யூன் ஆக்கிட்டேதான் வந்தாரு. குறிப்பாக சொல்லணுமின்னா, சாய்தாடம்மா சாய்ந்தாடு, பத்ரகாளி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள்
பாரதிராஜாவும், இளையராஜாவும் சேர்ந்து படம் கொடுக்க ஆரம்பிச்சதும்தான் பிண்ணனி இசைன்னா என்னன்னு மக்களும், விமர்சகர்களும் கவனிக்க ஆரம்பித்தார்கள். குறிப்பாய் நிறம் மாறாத பூக்கள் படத்திலிருந்து சொல்லலாம். படம் முழுவதும் கிடாரும், வயலினும், கதையில் ஒரு கேரக்டர் போல கூடவே எல்லா உணர்வுகளுக்கு பதில் சொல்லும். படத்தின் வெற்றிக்கு பாடலகள் ஒருபுறம் உதவ, உறுத்தாத பிண்ணனி இசை நம்மை படத்துடன் ஒன்றச் செய்தது நம்ம மொட்டை தான்.
ராஜாவின் பிண்ணனி இசை பற்றி மிகவும் பேசப்பட்ட படம் சிகப்பு ரோஜாக்கள். படம் முழுவது தீம் மீயூசிக் போல கமலனின் ப்ளாஷ்பேக் கட்சிகளுக்கு “டுடுன், டுடுன்,டுடுன், டுடுன்” ஒரு விதயாசமான இசையை அளித்திருப்பார். அது கமலின் குழம்பிய மனதின் வெளிப்பாடாகவே இருக்கும், முக்கியமாய் கதவு திறக்கும் சப்தம், பூனையின் மியாவ், காலடி ஓசைகள், கமல் டேபிளின் மேல் நத்திங் நத்திங் என்று கோபத்துடன் எழுதும்போது வரும் உடல் கூசும் அந்த ஒலி, என்று எஃபக்ட்ஸுக்கும், முக்யத்துவம் கொடுத்து அதையே பிண்ணனி இசையாய் பயன்படுத்தியதில் தமிழ் திரையுலகில் முதன்மையானவர் இளையராஜா. க்ளைமாக்ஸ் காட்சியில் பூனையை பார்த்து ஸ்ரீதேவி பயப்பட ஆரம்பித்து, ஓட ஆரம்பிப்பதிலிருந்து ஒரு படம் முடியும் வரை சுமார் இருபது நிமிடம் மயிர்கூச்செரிய வைக்கும் பிண்ணனி இசை ராஜாங்கமே நடத்தியிருப்பார்.
அதே போல் முதல் மரியாதையில் ரஞ்சனும், ரஞ்சனியும் நிலாவை பிடிக்க, ஓடுவது போன்ற ஒரு காட்சி, உங்களுக்கு அந்த படத்தின் டிவிடி எங்காவது கிடைத்தால், அந்த காட்சியை முதல் முறை மியூட்டில் வைத்து பாருங்கள், வெறுமையாய் இருக்கும், பிறகு அதே காட்சியை ராஜாவின் பிண்ணனியோடு பாருங்கள புல்லாங்குழலும், வயலினும் ஒரு சேர அவர்களுடனே ஓடும், சிரிக்கும், மூச்சு வாங்கும், அவர்களின் சந்தோஷம் உங்க்ளுக்கும் தொற்றி கொள்ளும். அதே போல் ராதா, சிவாஜிக்கு ஒரு புல்லாங்குழலை வைத்தே அவர்களின் பாசம், காதல், சோகம், பரிவு, பிரிவு என்று ஒவ்வொரு உணர்வுகளுக்கு பாரதிராஜா எடுத்த ஷாட்டுகளை, உணர்வாய் மாற்றி மகக்ளிடையே சேர்த்தது ராஜாவின் இசைதான்.
"மெளனராகம் "
இந்த படத்தின் வெற்றியில் இளையராஜாவின் பங்கு எவ்வளவு என்று சொன்னால் பாதிக்கு பாதி என்பேன். ஏனென்றால் படம் முழுக்க இயக்குனருக்கு வலது கரம் போல், பாடல்களில் ஆகட்டும், பிண்ணனி இசையிலாகட்டும் கூடவே இருப்பார் ராஜா.. முக்கியமாய் கார்த்திக் வரும் காட்சிகளில் இருக்கும் இளமை துள்ளல், கார்த்திக் நடிப்பை மேலும் தூக்கி நிறுத்தி துள்ளல், இளமை, குறும்பு கலந்த ஒரு பிண்ணனி இசையை க்கொடுத்திருப்பார். அதே போல படம் நெடுக மோகன், ரேவதி வரும் காட்சிக்ளில் அவர்களின் உணர்வுகளுக்கு ஏற்ப பிண்ணனி இசை அவர்கள் வெளிபடுத்தாத உணர்வுகளை கூட மணியும்- ராஜாவும் வெளிபடுத்தியிருப்பார்கள்.
"இதயத்தை திருடாதே"
இதிலும் மணியின் வழக்கமான குறும்புத்தனமான ஹீரோயின் கேரக்டருக்கு ஒரு பிண்ணனி பீஜிஎம் படம் முழுக்க வலைய வரும். அவளின் குறும்புத்தனத்தை நமக்கு டிரான்ஸ்பர் செய்து விடுவார் ராஜா. நாகார்ஜுனை தேடி ஹீரோயினின் குட்டி தgeetanjali-bங்கை, அவளுக்கு உடம்பு சரியில்லை என்று சொல்ல, அவனின் வீட்டு கதவை திறக்க, அவளுக்கு முன்னால் பனிபுகை மெல்ல, தரையில் ஊர்ந்து போய், எழும்பி, ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் நாகார்ஜுனின் முதுகில் தொட, அவர் திரும்பி பார்க்கும் வரையான காட்சியில் ராஜாவின் பிண்ணனி இசைக்காக, அந்த காட்சி எடுக்கப்ட்டதா, அல்லது காட்சிக்காக இசையமைக்கபட்டதா? என்று கேட்கும் வண்ணம் இரண்டு பேரும் உழைத்திருப்பார்கள்.
மேலும் மணி- ரஜா காம்பினேஷன் படஙக்ளை பற்றி பேச நிறைய இருப்பதால் ஒரு பதிவில் அடக்கிவிட முடியாது...
அதே போல் காமராஜர் படத்தின் டபுள் பாஸிடிவ் பார்க்க நேர்ந்தது. அப்போது படத்தில் இயக்குனர் சில புட்டேஜுகளை விட்டிருந்தார். அவர் ஏன் விட்டிருந்தார் என்று எனக்கு புரிந்தது. அது பிண்ணனி இசை கோர்வைக்காக விடப்பட்டிருந்தது. இசை கோர்ப்பு முடிந்ததும் அது எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் ஏனென்றால் அந்த படத்தின் இசையமைப்பாளர் “இசைஞானி’ இளையராஜா.
எத்தனையோ இசையமைப்பாள்ர்கள் கோலோச்சியுள்ள தமிழ் சினிமாவில், ஆர்.ஆர்னா அது ராஜா தான் என்று இன்றளவும் பேசப்படும் ஒரு மாபெரும் கலைஞன் இளையராஜா மட்டும்தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

No comments:
Post a Comment