#இறைவனுக்கு_பிடித்த #அபிஷேகம்.....
யாருடைய மனதையும் புண்படுத்தமாட்டேன் குளிரவைப்பேன் என்று
#இளநீர் அபிஷேகமும்..
எல்லோரிடமும்
இனிமையாக
இருப்பேன் என்று #தேன் அபிஷேகமும்.. எப்பொழுதும் நற்குணங்களையே அனைவருக்கும் பரப்புவேன் என்று
#பன்னீர் அபிஷேகமும்..
இந்த உடல் நிலையற்றது என்று எண்ணி பெருந்தன்மையுடன் இருப்பேன் என்று
#திருநீறு அபிஷேகமும்..
எப்பொழுதும் மங்களகரமான வார்த்தைகளையே பேசுவேன் என்று
#மஞ்சள் அபிஷேகமும்..
வாழ்க்கை முழுவதும் இறைவா உன் புகழ் பாடுவேன் என்று #சந்தன அபிஷேகமும்..
சென்ற இடமெல்லாம் உன் சேவை செய்வேன் என்ற #ஜவ்வாது அபிஷேகமும்..
அனைவரிடமும் புனிதமாக இணைந்து சென்று இந்த பிறவி பயணத்தை முடிப்பேன் என்று
#நீர் அபிஷேகமும் செய்யுங்கள்..
இதுவே இறைவனுக்கு பிடித்த உண்மையான அபிஷேகம்..மற்றவை எல்லாமே நம்முடைய
மனதிருப்திக்காக செய்யப்படும் அபிஷேகங்கள்
#ஓம்_சிவாயநமஹ! !!!

No comments:
Post a Comment