மாண்புமிகு நிதி அமைச்சர் தாழ்வான கவனத்திற்கு மற்றும் சிந்தனைக்கு,
நீங்கள் உங்கள் ஆணவத்துடன் நம்பிக்கையை குழப்ப வேண்டாம். ஆணவம் நீங்களே நிறைந்தாக இருக்கிறது. நீங்கள் எப்பொழுதும் சரியானவர் என்று உணர்கிறீர்கள். உங்கள் சாதனைகளை நீங்களே மூச்சுக்கு முந்நூறு தடவை தற்பெருமை தம்பட்டம் அடித்து கொள்கிறீர்கள். உங்களை சார்ந்த கட்சியினரே அல்லது ஊடகவிலயார்கள் கூட நீங்கள் பேசும் தற்பொருமையை புகழ்வது இல்லை. வீணாக நீங்களே உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு கொண்டு பெருமையை உயர்த்தி கொள்கிறீர்கள்.
உங்களுடைய கீழ்தரமான பேச்சு உங்கள் தரங்களையும், திறன்களைப் வரையறுக்கவில்லை. உங்கள் பட்டங்கள் உங்கள் திறன்களைப் போல மதிப்புமிக்கவை அல்ல. உங்கள் கல்வியை தற்பொருமையை புத்திசாலித்தனத்துடன் குழப்ப வேண்டாம்.
" மற்றவர்கள் உங்களைப் பற்றி பெருமைப்படுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்கும் முன் உங்கள் உண்மையான சுயத்தைப் பற்றி பெருமைப்படுவது மிகவும் முக்கியம்."
நீங்கள் பொதுச் சேவை செய்வதற்கு ஒவ்வொரு மாதம் ஊதியம் பெறுகிறீர்கள் மக்கள் வரிப் பணத்தில். மக்கட்சேவைக்கு பெறும் சம்பளம் கொடுக்கும் ஏழை மகாராஜாக்கள் மட்டுமே. சுயலாபம் இருப்பின் நீங்கள் உங்களது கடமை மற்றும் பொருப்புகளிலுருந்து தடம் மாறுகிறீர்கள்.
திமிர்பிடித்தவர்கள் கற்காதவர்கள். மனநிறைவின் வசதியான உணர்வை பேணுவதில் அவர்கள் தங்கள் ஆற்றல்களை முதலீடு செய்கிறார்கள், மேலும் அனுபவத்திலிருந்து தொடர்ச்சியாகக் கற்றுக்கொள்வதற்கான செயல்முறைக்கு மனநிறைவு மிகப்பெரிய ஒற்றை எதிரி.
தனி மனித ஆணவத்தை அதிக நம்பிக்கை என்று பெரும்பாலும் ஏழைகளும் அடிமைகளும் நம்புவார்கள், ஆனால் அது உண்மையிலே நம்பிக்கையின்மை. திமிர்பிடித்தவர்கள் பாதுகாப்பற்றவர்கள், பெரும்பாலும் மற்றவர்களை இழிவாகவும் கீழ்தரமாக நடத்துவார்கள் விரட்டவும் செய்வார்கள்.
பாரத பிரதமரின் கல்வி தகுதியை இழிவாக விமர்ச்சிக்கிறீர்கள். என்றைக்காவது அவர் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் தன்னை பெருமையாக பேசி உள்ளாரா? வைராக்கிய சேவையிடத்தில் உங்களது போலி சேவை பேச்சுகள் எடுபடாது. வேணுமென்றால் பணத்திற்கு தன்னை விற்கும் ஈனப்பிறவிகள் ருசிப்பார்கள் ரசிப்பார்கள் உண்மையான மனிதர்கள் யாரும் ரசிக்க மாட்டார்கள். தற்பொருமையும் கொள்ளமாட்டார்கள்.
உண்மையிலே திரு மோடி அவர்கள் நம்பிக்கையுள்ளவர் அதனால் தான் உண்மையான சேவை பக்குவம் உள்ளவர்கள் தங்களை பற்றி நன்றாக உணர்கிறார்கள், மற்றவர்களை அவர்களிடம் ஈர்க்கிறார்கள்.
நீங்களே இந்திய பொருளதாரத்திற்கு புதியவர், நிதி மந்திரி அனுபவம் இல்லாதவர். பதவி ஏற்று கொண்ட நாள் முதல் மாநிலத்தின் நிதி வளர்ச்சிக்குரிய ஆக்கப்பூர்வமான சுயசிந்தனை பேச்சுகளை தாங்கள் மறந்து விட்டீர்கள். மாநிலத்தின் மனித வளத்தின் உற்பத்தியை பெருக்கும் எந்த முன்யோசனையே செயல்திட்டமே இல்லை. நீங்கள் மாநிலத்தின் நிதி வருவாயை பெருக்குவதற்கு மது மற்றும் எரிவாயு விற்பனை வரி இல்லாமல் நிதி வருமானம் வரும் ஆதாரம் உள்ளதா என்று ஒரு தடவை கூட பேசியது இல்லை.

No comments:
Post a Comment