#சீன_கம்யூனிஸ்டு வைரஸின் முதல் அலை பரவலின் போது மத்திய அரசு முழுப்பொறுப்பையும் எடுத்துக்கொண்டு ஊரடங்கு முதல் மற்ற அனைத்தையும் பார்த்துக் கொள்ள முயன்றது.
இது எதிர்க்கட்சிகளால் அரசியலாக்கப்பட்டு, தேவையில்லாத பல விஷயங்கள் நடந்தேறின. அதில் முக்கியமான ஒன்று - தடுப்பூசி பற்றிய அச்சத்தை மக்களிடையே கிளப்பியது!
அதே சீன கம்யூனிஸ்டு வைரஸின் இரண்டாவது அலையின் போது சுகாதாரதம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது, தேவையில்லாமல் எதிர்க் கட்சிகளும் அரசியல் செய்கின்றன என்பதால், மாநில அரசே பார்த்துக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு விட்டிருந்தது, அவ்வாறு விட்டதற்காகவும் மத்திய அரசு குறை சொல்லப்பட்டது. பிரதமர் மோடி தூற்றப்பட்டார்.
மேலும், காங்கிரஸும், பிராந்தியக் கட்சிகளும் மக்களுக்கு சேவை செய்வதை விட அரசியல் செய்வதையே பிரதான நோக்கமாகக் கொண்டு இருந்ததால் தான் மீண்டும் மத்திய அரசு முழு பொறுப்பை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
மத்திய அரசு முழுப்பொறுப்பையும் எடுத்து, அனைத்தும் செய்ய எத்தனிக்கும் போது, மாநிலங்களுக்கு சுயாட்சி இல்லை, முடிவெடுக்கும் அதிகாரம் இல்லை, மாநில உரிமைகள் பிடுங்கப்படுகின்றன, நசுக்கப்படுகின்றன என்றெல்லாம் அது அரசியலாக்கப்பட்டது.
சரி, மாநிலங்களே அனைத்தும் செய்து கொள்ளட்டும் என்றால், மத்திய அரசு செயல்படவில்லை, பொறுப்பு ஏற்கவில்லை என்று கூறி அதுவும் அரசியலாக்கப்பட்டது. (மாநில அரசின் கையாலாகாத்தனமும் இதில் வெளிப்பட்டது).
குறுகிய எண்ணம் கொண்ட, குறுகிய கால லாபங்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட அரசியல்வாதிகள் இருக்கும் வரை எந்த ஒரு நல்ல விஷயமுமே நெகட்டிவ் ஆகத்தான் பேசப்படும்.
இன்றைய பிரதமரின் பேச்சில் 18 வயது முதல் அனைவருக்குமே இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. இது ஏற்கனவே நாம் பலமுறை எழுதியதுதான். அது நடைமுறைப் படுத்தப்பட்டு இருப்பது மிகவும் சந்தோஷமே.
18 முதல் 45 வயது வரையிலான மக்கள்தான் நாட்டின் முதுகெலும்பு, அவர்களை இரண்டாம் பட்சமாக நடத்துவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது நல்லதல்ல. 45 வயதுக்கு அதிகமானோர் பெரும்பாலும் நாட்டின் liability கணக்கில் சேர்ந்துவிடுவார்கள். அதிகம் உழைப்பவர்கள் என்றால் 18 முதல் 45 வரையிலான மக்கள் தான்.
அடுத்து, தீபாவளி வரை ரேஷன் பொருட்கள் இலவசமாகக் கிடைக்கும் என்பதும் நல்ல விஷயமே. மத்திய அரசுக்கு இது எந்தப் பெயரையும் பெற்றுத் தரப்போவதில்லை, அனைத்து மாநில அரசுகளும் அதனை தங்கள் ஸ்டிக்கர் ஒட்டித்தான் கொடுக்கப் போகின்றன. அதைப்பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமும் இல்லை. நடக்கும் வரை நல்லது.
இப்போதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அரசியல் செய்யும் என்றே எதிர்பார்க்கலாம் - இதனை ஏன் மத்திய அரசு முன்னமே செய்யவில்லை, too late, என்று ஆரம்பித்து இன்னும் என்னென்ன பேசப்படும் என்று பார்க்க வேண்டும்... இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சொன்னது போல, எதிர்க்கட்சிகள், எதிர்க்கட்சிகளாக இல்லாமல், எதிரிக்கட்சிகளாகவே இருக்கின்றன. அதுதான் காலக்கொடுமை.
பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு - என்பதெல்லாம் முடிந்து போன கதை போல!



No comments:
Post a Comment