Tuesday, June 8, 2021

இன்றைய செய்திகள்..........

8.06.2021(செவ்வாய்க்கிழமை)

🌹எத்தனை நாட்களுக்கு பிறகு பேசினாலும் சிலரிடம் மட்டு்மே அதே உரிமை குறையாத பாசம் வெளிப்படும் அப்படிப்பட்ட உறவு கிடைப்பது எல்லாம் வரமே.!

🌹🌹உலகத்திலேயே பெரிய முட்டாள்தனம் நம்மை போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என நினைப்பது.!!

🌹🌹🌹அன்பு என்பது இரத்த பந்தத்தால் வருவது இல்லை.

நம்மை அறியாமல் மனதிற்கு பிடித்தவர்களின் மீது வைக்கின்ற பாசம் தான் உண்மையான அன்பு ஆகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

👉12ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என்பது அனைத்துக் கட்சிகளின் கருத்து அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது.

👉பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண்கள் எப்படி கொடுப்பது என்பது  தொடர்பாக ஆராய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

👉+ 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.

👉தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த விடமாட்டோம்.

👉12ம் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் - பள்ளிகல்வித்துறை அமைச்சர்.

👉தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் ஆன்லைன் வகுப்புக்களுக்கான வழிகாட்டு விதிமுறைகள் தயாராக உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.*

மேலும், தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை முறைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது

⛑⛑பிளஸ் 2 செய்முறை மதிப்பெண்களை பதிவேற்றம் செய்ய ஜூன் 28ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது

⛑⛑``எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எந்த சுற்றிக்கையும் அனுப்பவில்லை. அதேசமயம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்துவிதமான அரசு ஊழியர்களும், பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு தெரிவிக்கிறது என பள்ளிக்கல்வி துறை ஆணையர் திரு.நந்தகுமார் தெரிவித்துள்ளார். 

⛑⛑அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடம் எத்தனை? விவரங்களை இன்று மாலைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை  உத்தரவு 

(நாளிதழ் செய்தி)

⛑⛑ 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை, விரைவாக வெளியிட வேண்டும்' என, பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

⛑⛑ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள்  விளக்கம் அளித்துள்ளனர்.                                                      ⛑⛑ State EMIS Team தகவல் வரும் வரை Students Promotion / Transfer பணிகளை மேற்கொள்ள வேண்டாம்.

⛑⛑தேசிய நல்லாசிரியர் விருது-2021- விண்ணப்பங்களை இணையதளம் மூலமாக -20.06.2021 க்குள் விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்கு தெரிவித்தல் சார்ந்து- பள்ளிக்கல்வி ஆணையர் செயல்முறைகள் வெளியீடு.

⛑⛑வரும் 24ம் தேதி நடைபெற இருந்த சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு ஜூலை 24ல் தொடங்க முடிவு.

⛑⛑கலப்பு கற்றல் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்துக் குறிப்பு கல்வியை ‘பண்டம்-நுகர்வோர்’ என்ற கண்ணாடி மூலமாகவே பார்க்கிறது - பிரின்ஸ் கஜேந்திர பாபு

⛑⛑தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க கோரிக்கை.

⛑⛑புதுச்சேரியிலும் +2-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு.

⛑⛑மாணவிகள் மட்டுமே படிக்கும் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகள் மட்டுமே நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்.

⛑⛑பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் 10, பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்களை கணக்கிட்டு இறுதி மதிப்பெண் வழங்க திட்டம்.

(நாளிதழ் செய்தி)

⛑⛑அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பினை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழு அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு.

⛑⛑12ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்திருக்ககூடாது 

காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் கருத்து.

⛑⛑இன்று முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்.

👉காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும்.

தமிழக அரசு.

⛑⛑மாற்று திறனாளிகள் தேசிய அளவில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தடுப்பூசி செலுத்துவதற்கான அடையாள அட்டையாக பயன்படுத்தி கொள்ளலாம்:- மத்திய அரசு.

⛑⛑கோவை மாவட்டத்தில் கோவிட்-19 நோய் தொற்று பரவல் தற்போது 60 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் திரு கே என் நேரு தெரிவித்துள்ளார்.

⛑⛑மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்குவதாக அறிவித்த பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி.

தடுப்பூசி செலுத்துவது, நிர்வகிக்கும் உரிமையை  மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

⛑⛑தமிழ்நாட்டில் கோவிட் தொற்று தடுக்கும் பணிகளில், மாநில அரசு முழுவீச்சில் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது என்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே கிடையாது என்றும் அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன் பேட்டி                                       ⛑⛑பல்வேறு துறைகளின் பெயர் மாற்றம்.

அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த துறைகளின் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டதற்கு தமிழக அரசு தற்போது அரசாணை வெளியீடு.

⛑⛑இன்றைய மோடி அறிவிப்பு மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும். மாநிலங்களுக்கு இலவசமாகத் தரப்படும். மாநிலங்களின் குரலுக்கு  மகத்தான வெற்றி. 

சு.வெங்கடேசன் எம்.பி. ட்வீட்

⛑⛑5 லட்சம் முதல் 6 லட்சம் வரை தான் 

இ - பதிவுகளை எதிர்பார்த்தோம். 

ஆனால் 60 லட்சம் பதிவு வந்துள்ளது

அமைச்சர் மனோ தங்கராஜ்.

⛑⛑கொரோனா சிகிச்சை வார்டில் திடீர் விசிட் அடித்த கனிமொழி எம்பி. அதிர்ச்சி அடைத்த மருத்துவத்துறை

⛑⛑எட்டாக்கனியாக உள்ள மருத்துவ படிப்பை, அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நீட் தேர்வால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.

⛑⛑கொரோனா தடுப்பு பணிகளுக்காக சன் டிவி குழுமம் சார்பில் ரூ. 3 கோடிக்கான காசோலையை கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவிடம் வழங்கினார் சன் டிவி குழு இயக்குநர் காவேரி கலாநிதி மாறன்.

⛑⛑பாகிஸ்தானில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

⛑⛑நெல்லுரைச் சேர்ந்த ஆனந்தைய்யாவின் ஆயுர்வேத சொட்டு மருந்தை பயன்படுத்த ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு குறையும் போது சொட்டு மருந்தை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

⛑⛑தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு கூடுதல் மருந்துகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோன சிகிச்சை மையம் விரைவில் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்

⛑⛑தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை 100 நாளில் செயல்படுத்துவோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என தெரிவித்துள்ளார்

⛑⛑முதல்வர் நிவாரண நிதிக்கு

இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளித்திருக்கும் நன்கொடையாளர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றி! 

முதல்வர் மு.க ஸ்டாலின்.

👉கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.25 கோடி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

⛑⛑தகவல் தொழிநுட்பத்துறைக்கு குறுகிய காலம், நீண்ட காலம் என இரண்டு வகையான திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது

இணைய குற்றங்கள் தொடர்பாக சட்டத்திருத்தங்கள் தேவையென்றால் முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு

அமைச்சர் மனோ தங்கராஜ்.

⛑⛑வழக்கு தொடர்ந்தவருக்கு நீதிமன்றம் அபராதம்

தமிழக முதல்வர் ஸ்டாலினை அசாதாரண சூழ்நிலைகள் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாரிகள் தொந்தரவு செய்யக்கூடாது என்ற வழக்கு தள்ளுபடி

வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தனுக்கு ரூ 10,000 அபராதம். 

ஓராண்டு பொது நல வழக்குகள் தாக்கல் செய்ய தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

⛑⛑கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

⛑⛑தமிழ்நாட்டில் பாஜக தனது இருப்பைக் காட்டிக்கொள்ளவே, திமுக அரசை விமர்சிக்கிறது : அமைச்சர் சேகர்பாபு

⛑⛑கோவை மாவட்டத்தில் வாட்சப் செயலி மூலம் போலிசாரிடம் புகார் அளிக்கும் சேவை நேற்று தொடங்கியது.

புகார் அளிக்க பிரத்தேக தொலைப்பேசி எண் 7708100100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீடியோ கால் மூலம் புகார் அளிக்கும் சேவை தொடக்கம்.

⛑⛑கருவாடு கூட ஒரு நாள் மீனாகும், ஆனால் ஒரு நாள் கூட சசிகலா அதிமுக உறுப்பினராக ஆக முடியாது. 

ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. 

- முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் பேட்டி

⛑⛑மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கொரானா  தடுப்பூசி செலுத்தும் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

⛑⛑தமிழகம் முழுவதும் தொன்மையான கோவில்கள், புராதன சின்னங்களை பாதுகாத்து, பராமரிக்க தனி வாரியம், கோவில் கணக்கு வழக்குகளை மத்திய தணிக்கை ஆய்வு உட்படுத்துவது உள்ளிட்ட75 வித உத்தரவுகளை தமிழக அரசு 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் 

- சென்னை உயர் நீதிமன்றம்

⛑⛑கொரோனா நோய் தொற்றிற்கு உயிரிழந்த பணியாளர்கள் விவரங்களை அனுப்ப இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

⛑⛑கன்னியாகுமரி : 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை கடல் உப்புக்காற்றின் பாதிப்பில் இருந்துபாதுகாக்கரூ.1கோடி செலவில் ரசாயன கலவை பூசப்பட்டு சீரமைக்கப்பட உள்ளது.

⛑⛑குழந்தைகளுக்கு கோவேக்சின் தடுப்பூசி பரிசோதனை நடைமுறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடங்கியது.

⛑⛑2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் 31 மீதமுள்ள ஆட்டங்கள் செப்டம்பர் 19 தொடங்கி அக்டோபர் 15 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்- பிசிசிஐ தகவல்.

⛑⛑நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்புவது மற்றும் பதிவு செய்வது தொடர்பான வரைவு மாதிரி விதிகளை சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

⛑⛑இப்போதில் இருந்து, தடுப்பூசி கொள்முதல் மத்திய அரசிடம் மட்டுமே இருக்க வேண்டும்

மத்திய அரசே மாநில அரசுகளுக்கு தடுப்பூசி வழங்கும்

தடுப்பூசி விவகாரத்தை எதிர்க்கட்சியினர் அரசியலாக்க வேண்டாம்

மாநில அரசுகளுக்கு நரேந்திர மோடி அறிவுறுத்தல்

ஊரடங்கு தளர்வுகளை அடிப்படையாகக் கொண்டு கொரோனா நோய்த்தொற்று முடிந்துவிட்டதாக கருதக்கூடாது. பெருந்தொற்றை வெற்றிகரமாக கடக்கும் வரை மக்கள் அனைவரும் அனைத்து முன்னெச்சரிக்கை விதிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்: பிரதமர் மோடி

⛑⛑சிறு குறு தொழில் துறையை புத்துயிர் பெற செய்யும்  இந்திய அரசின் நாடு தழுவிய முயற்சியை ஆதரிக்க உலக வங்கி 500 மில்லியன் டாலர் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

⛑⛑புதுச்சேரியில் இன்று முதல் மதுக்கடைகளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

அனைத்து வகை கடைகளையும் மாலை 5 மணி வரை திறக்கவும் உத்தரவு.

⛑⛑கோயம்பேடு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம் மூலம் 6340 வியாபாரிகளுக்கு தடுப்பூசியும், காசிமேடு துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம் மூலம் 1234 வியாபாரிகளுக்கும்,  சிந்தாதரிப்பேட்டையில் 89 வியாபாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது 

- சென்னை மாநகராட்சி

⛑⛑ஏப்ரல், மே, ஜுன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை.

முன்களப் பணியாளர்களுக்கு ரூ.160 கோடியை ஒதுக்கி அரசாணை வெளியீடு. 

- தமிழக அரசு.

⛑⛑கோவாக்சினை விட கோவிஷீல்டில் நோய் எதிர்ப்பு சக்தி 10 மடங்கு அதிகம்.

இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தகவல்.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹🌹திருப்பதியில் முன்பதிவு செய்தவர்களுக்கு தேவஸ்தானம் ஓராண்டு வரை தரிசன வாய்ப்பை வழங்கியுள்ளது.

👉கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

👉ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

👉தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு வருகின்றனர். நாடு முழுவது பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

👉இதனால் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருப்பதிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

👉எனவே தேவஸ்தானம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தரிசனம் செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கி உள்ளது.

👉இந்த வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑⛑

🌹🌹மாண்புமிகு- பாரத பிரதமர் அவர்களது உரையின் முக்கிய அம்சங்கள்

👉ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும்.

👉இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம்.

👉இந்தியாவில் 23கோடிக்கும் மேலான வர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

👉தீபாவளி வரை உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

👉மூக்கு வழியாக செலுத்தப் படக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.                                             👉குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றால் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாதனை ஆக அமையும்.

👉2வது அலைக்கு முன்பாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கா விட்டால் நிலைமை என்னவாகி இருக்கும்.

👉3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகளில் உள்ளது.

👉ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் மூலம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன!தடுப்பூசி களை மாநில அரசே வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

👉உள்நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் மத்திய அரசு 75% தனியார் மருத்துவமனைகள் 25% கொள்முதல் செய்ய திட்டம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...