இன்றைய உலகத்தில் நாம் யாரை நம்புவது? யாரை நம்பக்கூடாது? நம்பிக் கெட்டவர்கள் அதிகமாக இருப்பதால் இதைப் பற்றி சற்று சிந்திப்போம்.....
நம்பினார் கெடுவதில்லை என்ற பழமொழி இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தவில்லை அதற்காக எவரையுமே நம்பாமல் சந்தேகக் கண் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு மனவியாதி. முதலில் முன்பின் தெரியாதவர்களை நாம் உடனே நம்பக்கூடாது. ஒரு மனிதனின் முகத்தை வைத்தும், தோற்றத்தை வைத்தும், தேனொழுகும் பேச்சை வைத்தும் எளிதில் நம்ப கூடாது. நம்மோடு நன்கு பழகுபவர்களை
பல சம்பவங்களையும், சந்தர்ப்பங்களையும் வைத்தே எடைபோட வேண்டும். நம்மிடம் பழகுபவர்களிடம் நம்பிக்கைக்குரியவர்கள் யார் யாரென்று பட்டியலை நம் மனதளவில் தயார் செய்து கொள்ள வேண்டும். நம்முடைய உள்மனது இவர்களை நம்பலாம் என்ற பச்சை கொடியையும் இவர்களை நம்ப கூடாது என்ற எச்சரிக்கை மணியையும் அடிக்கடி உணர்த்தும். அதை உணர்ந்து நம்பிக்கைக்குரியவர்களை தேர்ந்தெடுக்கவேண்டும். ஆனால் எல்லோர் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். சந்தேகக் கண் அல்ல... *விழிப்புணர்வுக் கண். நம்முடைய பாதுகாப்பு என்பது முக்கியமானது.
எல்லோரையும் நம்பி ஏமாறாமல்
உறவுகளுடனும், நட்புகளுடனும், விழிப்புணர்வுடன் கூடிய நம்பிக்கையோடு பழக இன்றைய நாள் எல்லோருக்கும் ஒரு இனிய நாளாக அமையட்டும்.
No comments:
Post a Comment