திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தலுக்கு முன் அதை எதிர்த்த நாம் தமிழர், மய்யம் போன்ற கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு பிறகு ஸ்டாலின் காலில் விழ, பாஜக மட்டுமே முழு வீச்சோடு தனது திமுக எதிர்ப்பை தொடர்கிறது..
நீங்கள் தேர்தல் முடிவுகளை நன்கு analyze செய்து பார்த்தால் ஒரு விஷயம் புரியும். சீமான் கட்சி அதிமுகவின் வெற்றி வாய்ப்பை சுமார் 40 இடங்களுக்கு மேல் பறித்திருக்கிறது.. தேர்தல் முன்பு வரை திமுக எதிர்ப்பை ஏதோ பெயரளவில் செய்து வந்த சீமான் (பாஜகவையும் திமுகவையும் மட்டுமே பெரிய அளவில் எதிர்த்து வந்தார்) திடீரென்று தேர்தல் நெருங்க பாஜவிற்கு சமமாக திமுகவை திட்ட துவங்கினார்..
அதன் விளைவு, தமிழன்தான் தமிழகத்தை ஆட்சி செய்யவேண்டும் என்று சொல்லி சொல்லி, பச்சை தமிழனான எடப்பாடியை ஆட்சியிலிருந்து இறக்கி, ongole ஆசாமிகளை ஆட்சியில் அமரச்செய்தார்..
சரி.. இந்த வசைபாடுவதெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் சகஜம் என்று சொல்லலாம்.. சரி.. அப்படியென்றால் இப்போ வசை பாடவேண்டாம்.. ஆனால் நல்லாட்சி என்கிற certificate எதற்கு கொடுக்கவேண்டும்? சென்னைக்கு மட்டும் சுமார் 20 லட்சம் தடுப்பூசிகள் கொடுத்துவிட்டு, 10 தென் மாவட்டங்களுக்கு மொத்தமாகவே சுமார் 15 லட்சம் தடுப்பூசி கொடுப்பதுதான் நல்லாட்சியா?
இன்னமும் சீமானை எல்லாம் ஒரு கொள்கையுள்ள அரசியல்வாதி என்று நம்புபவர்கள் நிலைதான் பரிதாபம்..
No comments:
Post a Comment