Friday, June 11, 2021

#ஆக்கிரமிப்பு மீட்பு.. அத்தனையும் #செட்டப்பு..!

 வடபழனி #முருகன் கோவில் #விவகாரம்..!

சுமார் 250 கோடி மதிப்புள்ள ஐந்தரை ஏக்கர் நிலத்தை சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்தை மீட்டதாக திமுக அரசு நாடகமாடிய விவகாரம் இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது..
சென்னை சாலிகிராமம் பகுதியில் பழைய சர்வே எண்21, 23, 25 மற்றும் 26 ஆகியவற்றின்படி மொத்த பரப்பளவு 5.38 ஏக்கர் வடபழனி கோவில் பெயரில் உள்ள பட்டா நிலத்தை மீட்டதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாராட்டுக்கள் குவிவதாக ஒரு செய்தி பரப்பப்பட்டது.
உண்மை நிலை என்னவென்றால் கோவிலின் சொத்து கோவிலின் பெயரிலேயே இருக்கும் போது அதை யாரிடம் இருந்து மீட்டார்கள் என்று கேட்டால்..
அந்த நிலத்தில் வாடகை கொடுக்காமல் வாகனங்களை பார்கிங் செய்தவர்களிடம் இருந்து மீட்டதாக படம் காண்பிக்கிறது திமுக அரசு..!
இதென்னடா கொடுமை இது..?
காலி நிலத்தில் வாகனங்களை நிறுத்தியவர்கள் வாடகை தரவில்லை என்ற காரணத்தால் அந்த வாகன உரிமையாளர்களை இனி அங்கே வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று வெளியேற்றி இருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள்.
இதனை ஏதோ ஆக்கிரமிக்கப்பட்ட சொத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டது போல மாநகராட்சி ஆணையர் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் போலீசார்களை வைத்து ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றனர் அறநிலையத்துறையினர்..
இத்தனைக்கும் ஊரடங்கால் வாகனத்தை ஓட்ட முடியாமல் பார்கிங் வசதி இல்லாத. வாகன உரீமையாளர்களே அங்கு வேறு வழியின்றி தற்காலிகமாக வாகனங்களை நிறுத்தியிருக்கிறார்களாம்.
ஒருவராலும் ஆக்கிரமிக்கப்படாத ஆவண திருத்தம் ஏதும் செய்யப்படாத சொத்து எப்படி ஆக்கிரமீப்பில் இருந்து மீட்ட சொத்தாகக் கருத முடியும்..?
இந்த லட்சணத்தில் இனி தான் மெயின் பிக்சர் இருக்கு என்ற பில்ட்டப் வேறு..
மொத்தத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு நாடகம் என திமுக ஆட்சி கூத்து கட்டுகிறது. அப்படிப்பட்ட கூத்துகளில் ஒன்று தான் வடபழனி முருகன் கோவில் சொத்து மீட்பு..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...