ஒரு துறையின் அமைச்சராக ஒருவர் பொறுப்பேற்கிறார் என்றால் அந்த துறையை பற்றி சிறிதளவு தெரிந்திருந்தால் நல்லது ! இல்லாவிட்டாலும் பொறுப்பேற்ற பின் தெரிந்து கொள்ள முயற்சி எடுத்து கொள்ளவேண்டும் ! எல்லாவற்றிற்கும் மேலாக வாக்களித்த மக்களின் நலனில் அக்கறை கொள்ளவேண்டும் ! உதாரணத்திற்கு எம் ஜி ஆர் முதல்வரான 1977 ம் ஆண்டில் அவர் சத்துணவு திட்டத்தை விரிவு படுத்தி உலக வங்கியே பாராட்டும்படி அதை செயல் படுத்தினார் ! அவரை திமுகவினர் கேலி பேசியபோது அவர் சொன்ன பதில் நான் பொருளாதாரம் படித்தவன் அல்ல ஆனாலும் பசியின் கொடுமையை அறிந்தவன் என்றார் ! அதனால்தான் அவர் இறந்தும் இறவாப்புகழ் பெற்று இன்றும் மக்கள் மனங்களில் வாழ்கிறார் ! இப்போது தமிழ்நாட்டிற்கு புதிதாக ஒரு நிதி அமைச்சர் வாய்த்திருக்கிறார் ! அப்படிதான் சொல்லவேண்டும் ! எத்தனையோ மூத்த உறுப்பினர் இருக்க இவர் மெத்த படித்தவர் ஒரே காரணத்திற்காக அவரை நிதி அமைச்சராக நியமிக்க பட்டிருக்கிறார் ! பாரம்பரிய மிக்க பரம்பரையில் இருந்து வந்தாலும் அவர் பேச்சும் செயலும் அகங்காரமும் ஆணவமும் எனக்கு ஈடில்லை என்றே போக்கே மிகுந்து காணப்படுகிறது ! வெறிநாய் , சாக்கடை என்று ஏக வசனங்களில் பேசுகிறார் ! பதில் சொல்வதில் நாகரீகம் இல்லை ! gst கவுன்சில் கூட்டத்திலும் சோபிக்கவில்லை ! சாதாரண மக்கள் மனதறிந்து திட்டங்கள் கொண்டுவந்தால்தான் இவருக்கும் பெருமை அரசுக்கும் பெருமை ! ஏனோ தானோ என்றெல்லாம் நடந்துகொண்டால் இவரின் வீழ்ச்சி உறுதி !
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment