நாம் செய்யும் ஏதாவது ஒரு செயல் தோல்வியைத் தழுவினால் சரி பரவாயில்லை போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் நமக்கு எதிராக நடக்கும் பொழுது மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? என்கிற கேள்வி உங்களுக்கு இருந்தால் உங்களிடம் எதிர்மறை ஆற்றல் அதிகமாக காணப்படுகிறது என்று அர்த்தமாகும். இவ்வாற்றல் உங்களை விட்டு நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக, திருஷ்டிகள் அகல குளிக்கும் தண்ணீரில் இதை செய்யுங்கள்! அதைப் பற்றிய ஆன்மீக தகவல்களை இந்த பதிவின் மூலம் இனி காண்போம். நம்மிடம் தன்னம்பிக்கை அதிகமாக இருந்தால் நேர்மறை ஆற்றல் பெருகி இருக்கும். ஆனால் தன்னம்பிக்கை எப்பொழுது குறைகிறதோ, அந்த இடத்தில் எதிர்மறை ஆற்றல் வந்து குடி கொள்கிறது. ஒருமுறை எதிர்மறை ஆற்றல் நம்மிடம் வந்து விட்டால், அது நம்மை விட்டு அவ்வளவு எளிதாக நீங்குவது கிடையாது. இதனால் தொடர் தோல்விகளும், தொடர் அவமானங்களையும் சந்திக்க வேண்டி இருக்கும்.தாழ்வு மனப்பான்மை, நம்மால் முடியாது என்கிற எதிர்மறையான எண்ணங்கள் நம் வெற்றியை தொடர்ந்து தடை செய்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் தாழ்வு மனப்பான்மையை நீக்கி கொள்ள வேண்டும். நம்மால் முடியாதது என்று எதுவுமே இல்லை முயற்சி செய்தால் நம்மாலும் இதை சாதிக்க முடியும் என்ற வைராக்கியத்துடன், தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து பாருங்கள். தோல்வியை தழுவினாலும், உங்களுக்கு அது தோல்வியாக தெரியாது. அதுவும் ஒரு வெற்றி தான் என்று புரிய ஆரம்பிக்கும். தொடர் தோல்விகளை சந்திக்கும் நீங்கள் உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை விலக்கிக் கொள்ள வாரம் ஒருமுறை நீங்கள் கண்டிப்பாக குளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பை எடுத்து கரைத்துக் கொள்ளுங்கள். இந்த உப்பு நீரில் ஒருமுறை நீங்கள் குளித்தால் உங்களிடம் இருக்கும் தரித்திரம், பீடை, திருஷ்டிகள் அனைத்தும் விலகி ஓடிவிடும். அதன் பிறகு உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கத் துவங்கும். உப்பு கலந்த நீர் என்பதால் தான் சமுத்திரத்தில் குளிக்கும் பொழுது நமக்கு பாவங்கள் விலகுகிறது. செவ்வாய், சனி, ஞாயிறு போன்ற கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரில் குளித்து வந்தால் இது போல இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி வெற்றி மேல் வெற்றி குவிவதை நாம் காணலாம். சிறு சிறு விஷயங்களுக்கு கூட மனம் சோர்ந்து விடாமல் இருக்க உப்பு தண்ணீரில் வாரம் ஒரு முறை குளிப்பது நல்ல பரிகாரமாக இருக்கும். மேலும் வளர்பிறையில் வரக்கூடிய செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடல் நீரில் குளிப்பது மட்டுமல்லாமல் கடல்நீரை வீட்டிற்குக் கொண்டு வந்து அதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து கடை, வியாபாரம் செய்யும் இடம், அலுவலகம் மற்றும் உங்கள் வீட்டில் ஆங்காங்கு லேசாக தெளித்து விட்டால் போதும் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், பொல்லா கண்பார்வைகள், அனைத்தும் விலகி உங்களுக்கு வரக்கூடிய நன்மைகள், தடைபட்டுக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டங்கள் அனைத்தும் உங்களை மீண்டும் வந்து சேர ஆரம்பிக்கும். அதன் பிறகு உங்களுக்கு இருக்கக் கூடிய இந்த பிரச்சனையும் எளிதாக நீங்கும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment