ஹிந்துக்களை வாய்க்கு வந்தபடி பேசி, தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா சர்ச்சையை கிளப்பியுள்ளார். இந்த விஷயத்தில் பேச்சை விட, பேசியவரையும், பேசியதன் நோக்கம் பற்றியும் ஆராய்வதே சரியாக இருக்கும். ஏனெனில், பேசப்பட்ட பொருள் மனு ஸ்மிருதி. இதை, மனு சட்டம் என்றும் பொருள் கொள்ளலாம். தற்போது இந்த சட்டம் நடைமுறையில் உள்ளதா... அது நம் நாட்டில் பின்பற்றப்படுகிறதா... மேலும், இந்த சட்டத்தின் அடிப்படையில், எந்த பிரச்னைக்காவது தீர்வு காணப்படுகிறதா? நம்மை கட்டுப்படுத்துவது, நாட்டின் அரசியல் சட்டமா அல்லது மனு நீதியா என்று கேட்டால், அதற்கு பதில் இல்லை என்பதே. அதாவது, எல்லா விதத்திலும் குப்பை கூடைக்கு சென்றுவிட்ட, மக்களால் முழுதும் மறக்கப்பட்டு விட்ட ஒரு நுாலை, இன்றும் நினைவில் வைத்திருப்பவர்கள் ஆ.ராஜா போன்ற திராவிடச் செம்மல்கள் சிலரும், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் தான். இது, அவர்களின் அரசியல் பிழைப்புக்கு உதவுகிறது.'ஹிந்துக்கள் எல்லாம் விபசாரிகளின் மகன்கள்' என்று உளறியுள்ளார் ராஜா. இதன் அர்த்தம், 'ஹிந்துவாக இருக்காதே; வேறு மதத்திற்கு மாறி விடு' என்பது தானே. சிறுபான்மையினரை குஷிப்படுத்த வேண்டும்; கவனிப்பாரற்று கிடக்கும் தன் மீது, ஊடகங்களின் பார்வை விழ வேண்டும்; ஏதேதோ பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த பின், வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திண்டாடும் தி.மு.க., மீதான மக்களின் அதிருப்தியை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவும், ராஜா அப்படி பேசியிருக்கலாம். எப்படியாயினும், பேசிய கருத்துக்கு முழு பொறுப்பாளி, சொந்தக்காரர் அவரே. மத்திய அமைச்சராக முன்னர் பதவி வகித்த இவர், '௨ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பல தகிடுதத்தங்கள் செய்து விட்டு, 'அவை எல்லாம் அரசின் கொள்கை முடிவுகள். நீதிமன்றங்களுக்கு தலையிட உரிமையில்லை' என்று ஒரே போடாக போட்டு தப்பித்து விட்டவர். இவரை போன்றவர்களை, நீதிமன்றம் தண்டிக்க முடியாது. மக்கள் மன்றம் தான் தண்டிக்க வேண்டும்; தண்டிக்கும். பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழலில், தன் பங்கை வசூலித்ததுடன், ஆ.ராஜாவை காப்பாற்றிய காங்கிரஸ், பதவி இழந்தது; நாளுக்கு நாள் தேய்ந்தும் வருகிறது. இனி, காங்கிரஸ் கட்சிக்கு விமோசனமே இல்லை. அதே நிலை, தி.மு.க.,விற்கும் அடுத்த சில ஆண்டுகளில் உருவாகும். குறிப்பாக, ராஜாவை போன்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போடத் தவறினால், காங்கிரஸ் கட்சியை போன்றே, தி.மு.க.,வும் எங்கிருக்கிறது என்று தேடும் நிலைமை உருவாகி விடும். மீளமுடியாத வீழ்ச்சிக்கு போய் விடும் என்பதில் சந்தேகமில்லை.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment