Thursday, March 30, 2023

அவரோட மைனஸ் அவருடைய over confidence.... Update ஆகாமல் இருந்தது..

 1980 வது வருசம் முரட்டுக்காளை படம் ரிலீஸாகி தியேட்டரே தெறிச்சுட்டு இருக்கு.

இந்தப் பக்கம் கமலுக்கு குரு படம் ரிலீஸாகி ஓடிட்டு இருக்கு.
இதுக்கு நடுவுல ஒரு படம் ரிலீஸ் ஆகுது. படத்துல எல்லாருமே புதுமுகங்கள், டைரக்டர் புதுசு. அந்த வருசம் ரிலீஸான படங்கள்ல 30 படங்களுக்கு மேல இளையராஜாதான் இசை.
இந்தப் படத்துல அதுவும் இல்ல.
இப்படி ஒண்ணுமே இல்லாத ஜீரோவா ரிலீஸான அந்தப் படம் அன்னைக்கு இருந்த காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் மத்தியில சக்கை ஹிட் அடிக்குது.
திரும்ப திரும்ப வந்து படம் பார்க்குறாங்க.
பாடல்களைக் கொண்டாடுறாங்க. யாருய்யா இந்த டைரக்டரு, யாருயா மியூஸிக் பண்ணதுனு எல்லாரும் தேடுறாங்க.
இது ரெண்டையும் பண்ணது ஒரே ஆளு விஜய தேசிங்கு ராஜேந்திர சோழன் நமக்கெல்லாம் தெரிஞ்ச டி.ஆர்.
அவ்வளவு மாஸா தமிழ் சினிமாக்குள்ள அறிமுகம் ஆகுறார் டி.ஆர் ஆனா சோகம் என்னன்னா அவரது முதல் படமான ஒரு தலை ராகத்தில் இயக்குநர் என்று வேறு ஒருவரின் பெயர் வருகிறது. இசையிலும் இவருக்குப் பக்கத்தில் இன்னொரு பெயர்.
வெறுத்துப் போன டி.ஆர் இனி இந்தப் படத்தைப் பார்க்கவே வேண்டாம் என்று முடிவெடுத்தார்.
இரண்டாவது படம் வசந்த அழைப்புகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
ஆனால் அடுத்த படமான ரயில் பயணங்களில் படத்தில் தான் யார் என்பதை நிரூபித்தார்.
அன்றைக்கு இருந்து இன்றைக்கு வரைக்கும் தன்னோட தன்னம்பிக்கையால கால் வச்ச ஒவ்வொரு இடத்துலயும் கலக்கியிருக்காரு டி.ஆர்.
இன்னைக்கு வரைக்கும் அவர் திரையில வந்தாலோ, மேடையேறினாலோ நமக்கு ஜாலிலோ ஜிம்கானாதான்.
டி.ராஜேந்தர் என்றாலே நமக்கு அடுக்கு மொழி வசனம்தான் நினைவுக்கு வரும்.
இன்ஸ்டண்ட்டாக ரைமிங் வார்த்தைகள் பிடித்து அடிப்பதே ஒரு மிகப்பெரிய திறமை.
ஆனால் அதைத்தாண்டியும் நிறைய நல்ல பாடல்வரிகளையும் வசனங்களையும் கொடுத்தவர் டி.ஆர்.
சிறந்த உதாரணம் வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது பாடல் ...
வரிகளைக் கவியரசு கண்ணதாசனே வியந்து பாராட்டினார்.
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதி இல்லாத ஓடம்
இப்படி பாடல் மொத்தமும் முரண்களாகவே எழுதியிருப்பார்.
மற்றும் ஒரு பாடல்
தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதா உன் மனதை யார் அறிவார் என்று வரும்
இதுபோல நிறைய பாடல் வரிகளை உதாரணமாகச் சொல்லலாம். வசனத்திலும் கிரியேட்டிவிட்டியில் வீடு கட்டி விளையாடுபவர் டி.ஆர். ‘
மரம் வெயில்ல காஞ்சாதான், கீழ இருக்கவங்களுக்கு நிழல் கிடைக்கும்.
குடை மழைல நனைஞ்சாதான் அதைப் பிடிச்சிட்டுப் போற ஆள் நனையாம போக முடியும்.
அதைப் போல உனக்காக நான் கஷ்டப்படறதில் எனக்கு ஒரு சந்தோஷம்’ எப்படி டி.ஆர். கிரியேட்டிவிட்டி...
இன்னொரு படத்தில்
ராஜீவ் கதாநாயகிக்கு ஐஸ் கிரீம் வாங்கி தர அவள் வேண்டாம் ஜலதோஷம்
தொண்டை #கட்டிக்கும்" என்பாள்
சற்று நேரத்தில் ஹீரோ அவளுக்கு ஐஸ் கிரீம் வாங்கி தர அவள் வாங்கி கொள்வாள்
இதை பார்த்த ராஜீவ்
இப்ப #கட்டிக்கிட்டா பரவாயில்லை ன்னு வாங்கிக்கிட்டயா என்பார்...
அவரே நடிப்பார், இயக்குவார், தயாரிப்பார், இசையமைப்பார், எழுதுவார்.
சகலகலாவல்லவன் என்ற பட்டம் டி.ஆருக்குத்தான்.
சினிமாவில் எல்லாத் துறைகளிலும் கால் பதித்த டி.ஆர் இதுவரை எடிட்டிங் பக்கம் மட்டும் போனதேயில்லை. அதை செய்யாததற்கு ஒரு காரணம் இருக்கிறது. “அட அது ஒரே இடத்துல உக்காந்து வேலை பாக்கணும்ங்க. அது நமக்கு செட் ஆகாது. நான் மியூசிக் போடும்போதுகூட நடந்துக்கிட்டேதான் போடுவேன்” என்கிறார் மிஸ்டர்.
மல்டிடேலண்ட்.
டி.ராஜேந்தருக்கு ஒரு வருத்தம் இருந்தது. வாசமில்லா மலரிது எழுதிய என்னைப் பார்த்து வாடா என் மச்சிக்காக சிரிக்குறாங்க. லஞ்சம் லஞ்சம் ஊரெல்லாம் லஞ்சம் டண்டனக்கானு புரட்சியா பாடினா வெறும் டண்டனக்கா மட்டும் எடுத்து ட்ரோல் பண்றாங்களேனு. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இவரிடம் கீபோர்டு வாசித்தவர் என்பது இந்தத் தலைமுறைக்குத் தெரியுமா என்பது சந்தேகம்தான்
பல துறைகளில் இவருக்கு இருந்த அறிவுதான் இவரை எல்லாருக்கும் பிடிக்க வைத்தது. அதைப் பற்றி கேட்டால் தன் ஸ்டைலில் இப்படிச் சொல்கிறார்.
“தடை என்பது சுவர்.. Knowlege is power”
நன்றி: தமிழ் சினிமா!
May be an image of 1 person and beard
All react

கதை மூலம் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது .

 ஒருதடவை பார்வதி W/o சிவபெருமான் அழகா ஒரு மாளிகை கட்டினாங்க.... அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட நாள் குறிக்க சொன்னாங்க... அந்த மாளிகை கட்ட கடக்கால் போட்ட நாளை ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்..." நீங்க இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட நேரம் சனி உச்சத்துல இருந்த நேரம்.. அதனால நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும் இந்த மாளிகை நிலைக்காது... அதனால நீங்களே இடிச்சுடுங்க"

இத கேட்ட பார்வதி செம்ம கடுப்ப்பாயிட்டாங்க.... லோகத்துக்கே பெரிய சாமியோட பொண்டாட்டி நான்.... பிசாத்து சனி என்னோட மாளிகைய இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு பொங்கல் வச்சாங்க....
புருஷன கூப்பிட்டு.... "யோவ்..... நீ இப்போவே அந்த சனிய பார்த்து..... இன்னமாதிரி எம்பொண்டாட்டி ஒரு பங்களா கட்டி இருக்கா.... அதுல நீ என்னவோ வேலை காட்ட போறியாம்... அதெல்லாம் வேண்டாம்"ன்னு சொல்லிட்டு வா" ன்னாங்க..
உடனே சிவன் சொன்னார்... புரிஞ்சுக்கோ பாரு..... நான் பெரிய சாமியா இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிட்றது இல்ல.... தவிர... சனி எப்போவுமே பெர்பெக்ட்.... நானே சொன்னா கூட அவன் மாத்தமாட்டான் ன்னு சொன்னார்...
புருஷன் சொன்னத எந்த பொண்டாட்டிதான் கேட்டிருக்கா.... நம்ம சிவன் பொண்டாட்டி மட்டும் கேட்க??
சோ..... சிவன பட்னி போட்டுட்டா.... வேற வழி இல்லாம சனிய பார்க்கலாம்னு கிளம்பிட்டார்... ஆனா, போறதுக்கு முன்னாடி பாருவ கூப்பிட்டு..... "இதோ பார் பாரு.... உடனே நீ ஒரு பொக்லைன் ரெடி பண்ணி வை......நான் போய் சனிகிட்ட பேசி பார்க்கிறேன்.... அவன் ஒத்துகிட்டா ஒன்னும் பிரச்சினை இல்ல... இன்கேஸ் அவன் ஒத்துக்கலன்னா.... நான் அங்க இருந்து என்னோட உடுக்கைய அடிக்கிறேன்..... நீ உடனே பொக்லைன் வச்சு மாளிகைய இடிச்சுடு.... யாரும் கேட்டா , எனக்கு டிசைன் புடிக்கல.... வேற கட்ட போறேன்னு கெத்தா சொல்லிடு..."ன்னு சொன்னார்...
சரின்னு பார்வதியும் ஒத்துகிட்டாங்க....
சிவன் சனிகிட்ட போய் " உன்கிட்ட கேக்க ஒரு மாதிரியாத்தான் இருக்கு.... ஆனா வேற வழி இல்ல....... இந்த பார்வதி பெரிய பிரச்சினை பண்றா... நாலுநாளா உலை கூட வைக்கல..... உன்னால அந்த பில்டிங்க்கு ஏதும் பிரச்சினை வராம பார்த்துக்க...." என்றார்...
உடனே சனி...."அய்யனே... இதுக்கு நீங்க நேர்ல வரணுமா... ஒரு போன் பண்ணி இருக்கலாமே..."ன்னு சொல்லிட்டு..... "நீங்களே சொன்னப்புறம் நான் எப்படிய்யா மறுக்க முடியும்.... சரி.... நான் ஒன்னும் பண்ணல.... ஆனா எனக்கொரு ஆசை.... அத நீங்கதான் நிறைவேத்தனும்.."ன்னு கேட்டார்...
சனி ஒத்துகிட்ட சந்தோஷத்துல சிவனும்..."சொல்லு.. சொல்லு.... நம்ம புள்ள நீ.... உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டார்...
"உங்க உக்கிர தாண்டவத்த பார்த்து ரொம்ப காலமாச்சு.... எனக்காக ஒருதடவை ஆடிக்காட்ட முடியுமா "- சனி
"அதுக்கென்ன.... பேஷா ஆடிடலாம்" ன்னு சிவன் ஆட ஆரம்பிச்சார்.... சிவன் ஆட ஆட... உடுக்கை தன்னால குலுங்கியது..... உடுக்கை சத்தம் கேட்டதும்... பார்வதி... "ஆஹா.... இந்த சனிப்பய ஒத்துக்கல போல..... எங்கயாச்சும் சிக்காமையா போய்டுவான்.... அப்போ இருக்கு அவனுக்கு..." என்று கருவிக்கொண்டே, பொக்லைன் டிரைவர கூப்பிட்டு நீ உடனே அந்த பில்டிங்க உடைச்சுடு...ன்னு ஆர்டர் போட்டாங்க...
சிவன் திரும்பி வந்து பார்த்தா... பில்டிங் தரைமட்டமா கெடக்கு..... "ஏன் பாரு ... நான் சொன்னதும் தான் சனி ஒத்துகிட்டானே.... பின்ன ஏன் இடிச்ச...."
"நீங்கதானே சொன்னீங்க... உடுக்கை சத்தம் கேட்டா இடிக்க சொல்லி.."ன்னா பாரு...
ஆக... சனி நினைச்சுட்டா யார் தடுத்தாலும் அவன் நினைச்சத சாதிச்சுடுவான்...
.....

May be a cartoon of 1 person
All reactions

ஒரு கைதியின் டைரி.

 கமல்ஹாசன் அவர்கள் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்த படம், படத்திற்கு கதை, வசனம் k. பாக்கியராஜ் அவர்கள்.

படிப்பறிவு இல்லாமல் அரசியல் மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து தன் அரசியல் தலைவனே உலகம் என்று வாழ்ந்து கொண்டு இருப்பவன் டேவிட், அவன் வாழ்க்கையில் வருகிறாள் ரோசி, டேவிட்டுக்கு கல்வி கற்றுக் கொடுத்து புது மனுஷனாக மாற்றுகிறாள் ரோசி,இருவருக்கும் குழந்தை பிறக்கிறது ,தன் தலைவன் தான் குழந்தைக்கு பேர் வைக்க வேண்டும் என்று ரோசி மற்றும் குழந்தையோடு செல்கிறான் டேவிட்.
தலைவனின் கண் தொண்டனின் மனைவி மீது படுகிறது சூழ்ச்சி செய்து ரயில் மறியல் போராட்டத்தில் டேவிட் சிறைக்கு செல்கிறான் ,தன் கணவரை மீட்க தலைவனை நோக்கி ஓடுகிறாள்
ரோசி, கிழிந்த நாராக வீட்டுக்கு வருகிறாள்.
டேவிட் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ந்து போகிறான் ரோசி தற்கொலை செய்து கொள்கிறாள் அவள் கையில் இருக்கும் கடிதத்தில் இதற்கு காரணம் அரசியல் தலைவர் என்று எழுதிவிட்டு இறந்துவிடுகிறாள்.
நியாயம் கேட்டு டேவிட் செல்கிறான் அங்கு அவன் குற்றவாளியாக்கப்பட்டு சிறைக்கு செல்கிறான் போகும் முன் தன் குழந்தையை சாராய வியாபாரி வேலப்பனிடம் தன் குழந்தையை ரவுடியாக வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிட்டு செல்கிறான்.
22 வருடம் கழித்து டேவிட் விடுதலை பெற்று வருகிறான் தன் மகனுடன் சேர்ந்து தன் மனைவியின் சாவுக்கு காரணமாக இருந்த மூன்று நபர்களை வேட்டையாட பழிக்கு பழி தீர்க்க வெளியே வருகிறான்.
வேலப்பனிடம் தன் மகன் எங்கே என்று கேட்கிறார், அவன் இப்போது ஒரு போலீஸ் அதிகாரி என்று சொல்கிறான் வேலப்பன், டேவிட் அதிர்ந்து போகிறான்
அனைவரும் கைவிட்ட நிலையில் டேவிட் தனி ஆளாக பழிதீர்க்க நினைக்கிறார், மறுபக்கம் மகன் இந்த மிருகங்களை காப்பாற்ற நினைக்கிறார் இந்த வேட்டையில் யார் வென்றார்கள் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அப்பா டேவிட் கதாபாத்திரம் அட்டகாசம்
தன் மகனை வேலப்பன் வீட்டு வாசலில் இருந்து எட்டி எட்டி பார்க்கும் போது அதற்கு இளையராஜா அவர்கள் ஒரு தாலாட்டு இசையை வாசித்து இருப்பார் பாருங்கள் கலங்காமல் இருக்க முடியாது.
தன் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு இருக்கும் போது ஒரு தந்தையின் தவிப்பை கண் முன்னே கொண்டு வந்து இருப்பார் கமல்ஹாசன் அவர்கள்.
இளையராஜா அவர்களின் இசை படத்திற்கு பெரிய பலம் அப்பா, மகன் இருவரும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் ஒரு குழந்தையின் அழுகை சத்தத்தை போட்டு அதன் நடுவே அந்த தாலாட்டு இசையை ஒலிக்க செய்து Bgm தெரிக்கவிட்டு இருப்பார் இளையராஜா அவர்கள்.
முதல் முறை கிளைமாக்ஸ் காட்சியை பார்பவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு காட்சியை எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.
மகன் கமல் துப்பாக்கியை எடுத்து தைரியமாக எந்த தயக்கமும் இல்லாமல் சுடும் போது அப்பா கமல், My son என்று மைக்கில் அழைக்கும் போது மகன் கமல் செய்வது அறியாமல் கலங்கி போய் அப்படியே நின்று விடுவார் கமல்ஹாசன் அவர்களை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு காட்சியில் நடித்து இருக்கவே முடியாது.
படத்தின் வசனங்கள் அட்டகாசமாக இருக்கும்
அந்த பூ நாகம் கதை முடிந்தவுடன் டாக்டரிடம் ,கேட்கிற மூடுல நீ இல்லைனாலும், சொல்ற மூடுல நா இருக்கேனே போன்ற வசனங்கள் நச்.
பாரதிராஜா அவர்கள் பல கிராமிய படங்களை இயக்கி வெற்றி பெற்ற நிலையில் அவரின் இயக்கத்தில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக மிக பெரிய வெற்றி பெற்றது, பிறகு கமல்ஹாசன் & பாரதிராஜா அவர்கள் மீண்டும் இணைந்து மிக பெரிய வெற்றியை இந்த படத்தின் மூலம் அளித்தனர் 1985 ல் இரண்டு படங்கள் இவர் இயக்கத்தில் வெளிவந்தது ஒன்று, ஒரு கைதியின் டைரி மற்றொன்று காலத்தால் அழியாத முதல் மரியாதை.
ஒரு கைதியின் டைரி இந்தி பதிப்பை பாக்கியராஜ் அவர்கள் அமிதாப்பச்சன் அவர்களை வைத்து ஆக்ரிரஸ்தா என்று எடுத்தார் இதில் என்ன ஒரு துணிச்சல் என்றால் தமிழில் மிகவும் பரபரப்பாக பேசபட்ட கிளைமாக்ஸை தூக்கி விட்டு இவர் வேறு ஒரு கிளைமாக்ஸ் வைத்து வெற்றி பெற்றார்.
இந்தியில் அப்பா, மகன் பேசிக்கொள்ளும் உரையாடல் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
May be an image of 3 people and text that says "ஒரு கைதியின் டைரி"
All reac

திருமண யோகம் தரும் நந்தி கல்யாணம்.*

 

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர்.
☘️
*30-03-2023 நந்தி திருமணம்.*
☘️
பிரதோஷ நாயகரான நந்தியம்பெருமான் அவதாரம் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. சிலாத முனிவர் என்பவருக்கு வீதாஹல்யர் என்ற பெயரும் உண்டு. அவர் மனைவி பெயர் சித்ரவதி. இவர்களுக்கு நெடுநாளாகியும் புத்திரபேறு இல்லை. அதனால் அவர் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு தரிசனம் கொடுத்தார். முனிவரே, நீங்கள் எப்போதாவது யாகம் செய்வதற்காக நிலத்தை உழும் போது, என்னைப் போன்று வடிவுடன் அழகான ஒரு புதல்வரை பெறுவீர்கள் எனக்கூறி மறைந்தார்.
☘️
சிலகாலம் கழித்து சிலாத முனிவர் யாகம் செய்ய எண்ணி நிலத்தை உழுதபோது, ஏர்க்காலில் தட்டுப்பட்ட ஒரு செப்பு பெட்டகத்தை மண்ணிற்குள் இருந்து எடுத்தார். அதில் ஒரு அழகான ஆண் குழந்தை இருந்தது. அதற்கு 4 கால்கள் இருந்தன. மேலும் சிவனைப்போல் ஜடா முடியுடனும் காணப்பட்டது. சிவ வாக்கினை நினைவு கூர்ந்த முனிவர் அக்குழந்தைக்கு செப்பேசன் என்று பெயர் சூட்டினார். 14 ஆண்டு காலம் சகல கலைகளிலும், வேத ஆகம புராண சாத்திரங்களிலும் வல்லவரானார் செப்பேசன்.
☘️
ஒரு முறை அவர் ஆழ்ந்த சிவ சிந்தனையில் இருந்தார். அப்போது அவர் சிவனுடைய அந்தரங்க காவலராக இருந்ததும், அப்போது ஆடி என்ற அசுரனை சிவபெருமான் உத்தரவு இல்லாமல் அனுப்பியதால் சிவபெருமானால் சபிக்கப்பட்டு இப்பூமியில் பிறந்தது நினைவுக்கு வந்தது. பிறகு சிவனை நோக்கி ஒற்றைக் காலில் நின்று கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தைக் கண்டு மன மகிழ்ந்த பரமேசுவரன் அவர் முன் தோன்றி, செப்பேசருக்கு சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், கங்கை நீர், இறைவியின் கொங்கை நீர், இடப வாய்நுரை நீர் ஆகிய ஐந்து வகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து தங்கப்பட்டம் அணிவித்து நந்தீஸ்வரர் என பெயர் சூட்டினார்.
☘️
அத்துடன் சிவன், தமக்கு சமமான அதிகாரத்தையும், சிவ கணங்களுக்கு தலைமை தாங்கும் பதவியினையும், முதல் குருநாதன் என்ற தகுதியினையும் நந்தீஸ்வரருக்கு அளித்தார். பின்னர் பட்டு சாத்தி, முடி அணிவித்து வீதி உலாவாக நந்தி தேவரை எடுத்து செல்கின்றனர். அன்று முதல் சிவனை விட்டு எங்குமே நீங்காமல், அவர் வாகனமாகவும் ஆனார். அதனால் அவர் நந்தி தேவர் என்று அழைக்கப்பட்டார்.
☘️
பரமேஸ்வரன் நந்தீஸ்வரருக்கு திருமணம் செய்ய முடிவு செய்து அவருக்கு திருமழப்பாடியில் வாழ்ந்து வந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயம்பிரகாசை என்ற பெண்ணை பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமழப்பாடியில் திருமணம் செய்துவைத்தார்.
☘️
இதற்காக திருவையாறில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமழப்பாடிக்கு நந்தீஸ்வரர் குதிரை வாகனத்திலும், ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி வெட்டிவேர் பல்லக்கிலும் செல்கின்றனர். திருமழப்பாடியில் இறைவன் வைத்திய நாதரும், இறைவி சுந்தராம்பிகையும், கண்ணாடி பல்லக்கில் வந்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர் கொண்டு அழைக்கின்றனர்.
☘️
அன்று மாலை நந்தீஸ்வரர் சுயம்பிரகாசை திருமணம் தாலிகட்டும் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியருக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. பின்னர் அங்கு இருக்கும் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் புதுமணத் தம்பதிகளுடன் இறைவன் ஐயாறப்பர், தர்மசம்வர்த்தினி திருவையாறு புறப்பட்டு வருகின்றனர்.
☘️
இந்த திருமண விழாவுக்கு திருவையாறு மற்றும் அதன் அருகில் உள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிக்குடி, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய திருத்தல இறைவன் சார்பில் அவற்றின் சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு அன்பளிப்புகள் வழங்குகின்றனர்.
☘️
“நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்” என்பது சான்றோர் வாக்கு. நந்தி கல்யாணம் பார்த்தோருக்கு முந்தித் திருமணம் ஆகும் என்பது இதன் பொருள். அதன்படி நந்தி கல்யாணத்தை பார்ப்பவர்களுக்கு அடுத்தவருடம் நந்தி கல்யாணம் நடைபெறுவதற்குள் திருமணம் நடைபெற்று விடும் என்கின்றனர். இதனால் ஆண்டு தோறும் திருமழப்பாடியில் நடைபெறும் இந்த தெய்வீக திருமணத்தை பல்லாயிரக்கணக்கானோர் திரளாக கூடிச் சென்று தரிசிக்கின்றனர்.
May be an image of 2 people and text that says 'நந்தி கல்யாணம் பார்த்தா முந்தி கல்யாணம் நடக்கும் நாளை திருமண vsm யோகம் தரும் நந்தி கல்யாணம். இந்த வருடம் கல்யாணம் ஆகாதவர்கள் நந்தி கல்யாணம் பார்த்தால் அடுத்த வருடம் நந்தி கல்யாணம் நடக்கும் முன் கல்யாணம் நடக்கும்'
All reaction

நாமஸ்மரணம்.

 ஒருநாள் காசி விஸ்வநாதர் கோவிலில், திடீரென்று ஏதோ உலோகம் விழும் ஒலி கேட்டது.

பார்த்தால், தரையில் ஒரு தங்கத்தட்டு கிடந்தது. கர்ப்பக்கிரகத்தின் முன்னிருந்த அரங்கத்தின் உச்சியிலிருந்த திறந்தவெளி வழியே அது விழுந்திருக்கவேண்டும்.
எல்லோரும் ஆச்சரியத்துடன், அதைச் சூழ்ந்து நின்றனர்.
அதனருகே தலைமைப் பூஜாரி சென்று கூர்ந்து பார்த்தார்.
"என் பிரியமான பக்தனுக்கு உரியது இது" என்று அதில் எழுதப்பட்டிருந்தது. புரோகிதர் அதை உரக்கப் படித்தார்.
எல்லாப் பூஜாரிகளும் அதைப் பிடுங்கிக்கொள்ளப் போட்டிபோட்டனர், "என்னைவிட யார் பெரிய பக்தன்? எனது நேரம், திறமை, பலம் எல்லாவற்றையும் நான் விஸ்வநாதரைப் பூஜிப்பதிலேயே செலவிடுகிறேன்!" என்றனர்.
ஆனால்,
யார் தொட்டாலும் அந்தத் தட்டு மண்ணால் ஆனதாக மாறிப்போனது.
தங்கத் தட்டைப் பற்றிய தகவல் காட்டுத்தீ போல எங்கும் பரவியது.
பண்டிதர்கள், பாடகர்கள், கவிஞர்கள், உபன்யாசகர்கள் என்று எல்லோரும் அங்கே வந்தனர்.
ஆனால் யாருக்கும் அதிர்ஷ்டம் இருக்கவில்லை.
காலம் உருண்டோடியது.
தங்கத்தட்டு கேட்பாரில்லாமல் இருந்தது.
ஒருநாள் ஓர் வெளியூர்க்காரன் அங்கே வந்தான்.
கோவில் வாசலில் நின்றிருந்த பிச்சைக்காரர்கள், கண்ணிழந்தோர், காது கேளாதோர், அங்கம் குறைந்தோர் போன்றவர்கள் பிச்சை கேட்கும் பரிதாபக்குரலைக் கேட்டு, அவன் கண்களில் நீர் நிரம்பியது.
அவர்களுடைய துன்பத்தையும், பசியையும் தன்னால் நீக்க முடியவில்லையே என்று அவன் வெட்கமடைந்தான்.
அதற்காக தெய்வத்திடம் பிரார்த்திக்கலாம் என்றெண்ணிக் கோவிலுக்குள் நுழைந்தான்.
ஓரிடத்தில் மக்கள் கும்பலாக நின்றுகொண்டு, எதையோ விவாதிப்பதைப் பார்த்தான்.
அவர்களிடையே நுழைந்து பார்த்தான்.
நடுவில் ஒரு தங்கத்தட்டு இருந்தது.
அதன் கதையைக் கேட்டறிந்தான்.
அங்கிருந்தவர்களும் பூஜாரிகளும் பிரபஞ்ச நாயகனான விஸ்வநாதனைப் பெற முயலாமல், தங்கத்தட்டை அடைய முயற்சிப்பதை அறிந்து அவன் வருத்தமுற்றான்.
தங்கத்தட்டை அவன் கண்டுகொள்ளவில்லை என்பதைப் பார்த்து பூஜாரி அவனிடம், அந்தத் தட்டை எடுக்கும்படிக் கூறினார்.
அதற்கு அவன், "மரியாதைக்குரியவரே! எனக்கு வெள்ளியோ, தங்கமோ ஒரு பொருட்டல்ல.
கடவுளின் கருணை ஒன்றுக்காகவே, நான் ஏங்கித் தவிக்கிறேன்" என்றான்.
பூஜாரிக்கு அவன்மீதிருந்த மரியாதை கூடியது.
"எங்களுக்காகவாவது நீ அதை உன் கையில் எடு" என்றார் அவர்.
அதன்மீது சற்றும் பற்றில்லாமல் அதைத் தொட்டான்.
என்ன ஆச்சரியம்!
அந்தத் தட்டு பலமடங்கு ஒளிவீசியது!
எல்லா புரோகிதர்களும், அவனைச் சூழ்ந்துகொண்டு,
"ஐயா,
நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
என்ன படித்திருக்கிறீர்கள்?
எந்தெந்த கல்விப் பிரிவுகளில் நீங்கள் வித்வான்?
எத்தனை ஆண்டுகள் நீங்கள் தவம் செய்திருக்கிறீர்கள்?" என்றெல்லாம் கேட்டனர்.
"நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல.
கடினமாக உழைத்து சம்பாதிக்கிறேன்.
நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன்.
அது என் இதயத்தைத் தூய்மையாக்கி, அன்பாலும் கருணையாலும் நிரப்பியிருக்க வேண்டும்.
என் மனதையும் புலன்களையும் அடக்கும் ஆற்றலை அது எனக்குத் தந்தது.
எந்த சாஸ்திரத்தையோ கல்வியையோ நான் கற்கவில்லை.
தெய்வ நாமத்தைச் சொல்லும் கலை ஒன்றைத்தான் நான் கற்றுள்ளேன்.
நான் செய்யும் ஒரே செயல், ஏழைகளுக்கு கருணை காட்டுவதுதான்" என்றான் அவன்.
தெய்வத்தின் அன்பைப் பெறுவதற்குத் தேவையான தகுதி, கருணையும் புலனடக்கமுமே.
முழுமையான நம்பிக்கையோடு தெய்வத்தின் பெயரை இடையறாமல் ஜபிப்பதன் மூலம் இவற்றைப் பெறமுடியும்..
நற்றுணையாவது நமசிவாயவே
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
May be an image of 1 person and text that says 'நீ தேடும் கடவுள் உனக்குள்ளே தான் இருக்கிறார்! அன்பே சிவம்'
All reactions

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...