Saturday, March 25, 2023

அண்ணாமலையின் புதிய முயற்சி....வரவேற்போம்.

 திமுகவுக்கும், தற்போதுள்ள தமிழக பாஜகவுக்கும் ஒர் ஒற்றுமை உண்டு!!!

என்னது ?....
திமுக இதுவரை தேர்தல்களில் கூட்டணியில்லாமல் போட்டியிட்டதே இல்லை...
அதுபோல், தேர்தல்களில் தமிழக பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதில்லை...
(சென்ற உள்ளாட்சி தேர்தலில், அண்ணாமலையின் துணிச்சலான முடிவால் பாஜக தனித்து போட்டியிட்டு கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது வேற லெவல்).
இதற்கு முன்பிருந்த பாஜக தலைவர்கள், திமுக அல்லது அதிமுக தரும், வெற்றி வாய்ப்பற்ற, சொற்ப இடங்களை பெற்று, ஓரிருமுறை தவிர, பெரும்பாலான சமயங்களில் தோல்வியைத்தான் கண்டிருக்கிறார்கள்.
அண்ணாமலை என்ட்ரிக்கு முன்புவரை தமிழக பாஜக, கிட்டத்தட்ட தமிழக காங்கிரஸ் நிலைமையில் தான் இருந்தது. தலைவர்கள் அதிகம்... தொண்டர்கள் குறைவு...தலைவன், தொண்டன் தொடர்பு மிகக்குறைவு.
காரில் பயணிப்பவர்களாகத்தான் இருந்தார்கள். களத்தில் இறங்கி தொண்டன் கைக்குலுக்கி,அவன் முதுகில் தட்டிக்கொடுத்து, அவனுடன் சரிசமமாக அமர்ந்து உற்சாகப்படுத்தினார்களா ?... இல்லை.
கூட்டணி கட்சிகள், பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முழு ஈடுபாட்டுடனும், அக்கறையுடன் பணியாற்றினார்களா... இல்லை.
சிறுபான்மையினரை திருப்திபடுத்த அவ்வப்போது இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களைக் கொண்டு பிரதமர் உட்பட முண்ணனி தலைவர்களையும், பாஜகவின் கொள்கைகளையும் திராவிட கட்சிகள், பொதுவெளியில் விமரிசித்த போது இவர்களால் தடுக்க முடிந்ததா... இல்லை.
மதச்சார்பின்மை என்பது ஏதோ பெரும்பான்மை இந்துக்கள் மட்டுமே கடைபிடிக்க வேண்டிய ஒன்று என்றும், மற்ற மதத்தினர் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை என்று காலங்காலமாக நம் தேசத்தில், குறிப்பாக தமிழகத்தில், கடைபிடிக்கப்பட்டு வரும் விசித்திரமான கொள்கையை திராவிட கட்சிகள் பின்பற்றி வருவதை தட்டிக்கேட்க முடிந்ததா... இல்லை.
முடியவில்லை...பதவி பெற்ற சுகத்தில் இவற்றையெல்லாம் பழையவாதிகள் சுலபமாக மறந்து விட்டார்கள். போகட்டும்.
இந்திய துணை கண்டமே இதுவரை கண்டிராத வகையில், அப்பட்டமான முறையில், ஜனநாயக படுகொலை, தேர்தல் விதிகள் காலில் போட்டு மிதித்த,வரலாற்றில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய நிகழ்வுகளை, சமீபத்தில் நடந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் கண்டோம். நூற்றுக்கும் மேற்பட்ட பட்டிகளில் வாக்காளர்கள் அடைத்து வைக்கப்பட்ட கொடுமையை நாடே பார்த்து அதிர்ச்சி அடைந்தது. ஜனநாயகத்தை, மக்கள் அதிகாரத்தை, கேவலப்படுத்திய செயலை உலக நாடுகள் கவனத்திற்கு கண்டிப்பாக செல்லாமல் இருந்திருக்காது.
பணத்தை வைத்துக் கொண்டு மக்களின் ஓட்டுரிமையை தட்டி பறித்துக்கொண்டு சென்ற செயல் நம் கண் முன்னே நடந்தது.
தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருந்தும், உயிரற்ற பொம்மையாக ஆக்கப்பட்டது. அதன் கண்கள் கட்டப்பட்டிருந்தன.
திராவிட கட்சிகள், ரூபாய்க்கு மூன்று படி அரிசி தொடங்கி சமீபத்திய இடைத்தேர்தலில் ஓட்டொன்றுக்கு ரூ. 30000 வரை கொடுக்கப்பட்டது வரை அரை நூற்றாண்டுக்கும் மேல் வாக்காளர்களை பிச்சைப்பாத்திரமாக வைத்திருப்பது தான் அவர்கள் ஆற்றிய சாதனை.
தமிழகத்தின் இந்த இழிநிலையை மாற்றி, வாக்காளர்களை கெளரவமான முறையில் நடத்திட , அவர்களின் வாக்கு சக்தியின் மகத்துவத்தை உணர்த்திட, பணநாயகத்தை ஒழித்திட இளைஞர் பட்டாளத்தை அழைத்துக் கொண்டு அண்ணாமலை மாற்றத்தை உண்டாக்க புறப்படுகிறார்.
மறந்து போன மன்னராட்சியை, வேறு ரூபத்தில் குடும்ப ஆட்சியாக மாற்றிக் கொண்டிருக்கும் கூட்
டம் ஒருபக்கம். அதற்கு உறுதுணையாக ஒத்து ஊதிக்கொண்டிருக்கும் அதன் தோழமை அடிமைகள் மறுபக்கம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஓட்டுகள் விற்பனைக்கு என்றிருக்கும் நிலையை மாற்ற புறப்படுகிறார்.இளைய பாரதம் அவருடன் நிற்கிறது.
சீனியர்களே... உங்களால் இது வரை முடியவில்லை. இளைஞர் ஒருவர் புறப்பட்டிருக்கிறார். அவரை வாழ்த்தி வழி விடுங்கள். வென்று வரட்டும். தமிழ்த்தாய் புதிய மணிமகுடம் சூடட்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...