Thursday, March 23, 2023

திருமண அழைப்பிதழில் மஞ்சள் பூசுவது ஏன்?

 மங்கல காரியங்களின் அடையாளமாக மஞ்சள் கருதப் படுகிறது. எந்த ஒரு சுப காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும், அதனை மஞ்சளை உபயோகித்து ஆரம்பிப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கங்களில் ஒன்றாகும். அதனால்தான் சுப காரியத்தின் தொடக்கத்தில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கிறார்கள். மஞ்சள் என்பது வெறும் ஆன்மிகம் மட்டும் இல்லை. அது அறிவியல் ரீதியாக ஒரு கிருமி நாசினியும் ஆகும். மஞ்சள் இருக்கும் இடத்தில் செல்லரிக்கும் பூச்சிகள், விஷ ஜந்துக்கள் அவ்வளவு எளிதாக நெருங்காது. அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்களின் நான்கு முனைகளிலும் மஞ்சளை பூசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்நாளில், அசைபோடக்கூடிய சுகமான நினைவலைகள் என்று இருக்கும். அவற்றில் நம் இல்லத்தில் நடக்கும் சுபகாரியங்கள் முதன்மையானவை. அந்த சுப காரியங்களை நடத்துவதற்கான அழைப்பிதழை, 50 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துப் பார்க்கும்போது, அந்த சுகமான காலங்கள் நம் கண்முன்பாக நிழலாடுவதை எவரும் மறுக்க முடியாது. அந்த இனிமையான நினைவலைகள் நம்மை உற்சாகம் கொள்ள வைக்கும். மஞ்சளில் இருக்கும் கிருமிநாசினி, சுபகாரிய அழைப்பிதழ்களை பூச்சரிக்க விடாது பல வருடங்களுக்கு பாதுகாக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...