பிள்ளையார் வழிபாடு பொதுவாக வெற்றியை தரக்கூடியதாக இருக்கிறது. வெற்றி தரும் இந்த பிள்ளையாரை பல பொருட்களை கொண்டு ஆவாஹனம் செய்து வழிபடப்படுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் உப்பை கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுதல் என்பது எத்தகைய பலன்களை கொடுக்கக் கூடியது? துரோகிகள், எதிரிகள் சூழ்ச்சிகளை எப்படி இந்த பிள்ளையார் வழிபாடு முறிக்கிறது? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு தகவல்களை தான் இந்த பதிவில் இனி தெரிந்து கொள்ள போகிறோம். பொதுவாக ஒவ்வொரு விசேஷங்களிலும் முதன்மையாக மஞ்சளை கொண்ட பிள்ளையார் பிடித்து வைத்து வழிபடுவது வழக்கம். பிள்ளையாரை வழிபட்டு தான் மற்ற பூஜைகளை துவங்க வேண்டும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அப்படி துவங்கினால் தான் அந்த பூஜை முழுமை பெறுவதாக அர்த்தம் ஆகிறது. ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து சங்கடங்களும் தீரும் என்பது ஐதீகம். இதை கோவிலுக்கு சென்று தான் செய்ய வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை, வீட்டிலேயே பிள்ளையாரை பிடித்து வைத்து எளிமையான முறையிலும் நாம் வழிபட்டு அதற்குரிய பலன்களை பெற்று விடலாம்.நம்மை சுற்றி இருக்கும் எதிரிகள், பகைவர்கள், துரோகிகள், நம்முடைய நம்பிக்கையை உடைத்தவர்கள், நமக்கு எதிராக செயல்படுபவர்கள், சூழ்ச்சி புரிபவர்களை எதிர்க்கவும் கண்ணுக்குத் தெரிந்த மற்றும் தெரியாத மறைமுக எதிரிகளை கூட துவம்சம் செய்யவும் உப்பு பிள்ளையார் வழிபாடு எளிய வழிப்பாடாக இருந்தாலும் சக்தி வாய்ந்த வழிபாடாக இருக்கிறது. இந்த உப்பு பிள்ளையார் வழிபாடு தொடர்ந்து 30 நாட்கள் செய்ய வேண்டும். வீட்டில் பிள்ளையார் படத்திற்கு முன்பு ஒரு சிறிய அளவிலான தாம்பூல தட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதில் வாழை இலை விரித்து வைத்து அதன் மீது உப்பை குவியலாக கொட்டி பிள்ளையார் பிடியுங்கள். குவித்து வைத்த இந்த கல் உப்பின் மீது சந்தனம் மற்றும் குங்குமம் தூவுங்கள். அருகம்புல்லை அவரின் பாதத்தில் வையுங்கள். பின்பு பிள்ளையாருக்கு நைவேத்தியம் படைக்க வாழைப்பழம் வைத்தால் போதும். பிள்ளையாருக்கு பிடித்த மற்ற எவ்விதமான நைவேத்தியங்களையும் நீங்கள் முடிந்தால் தயாரித்து படைக்கலாம். 30 நாட்கள் தொடர்ந்து உப்பு பிள்ளையார் முன்பு தியான நிலையில் அமர்ந்து மனதார வழிபட வேண்டும். உங்களுடைய எதிரியின் பெயரை உச்சரித்து, அவர் தரும் தொல்லைகளை பற்றியும் நீங்கள் வேண்டிக் கொள்ளலாம். இவரிடம் இருந்து வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க கூடிய தைரியத்தை கொடுக்க வேண்டியயும், வெற்றி உங்கள் வசமாக வேண்டியும் மனமார வேண்டிக் கொள்ளுங்கள். இவ்வாறு 30 நாட்கள் தொடர்ந்து வழிபட்ட பின்பு தாம்பூல தட்டை நீர் நிலைகளில் கொண்டு சென்று வாழை இலையோடு சேர்த்து பிள்ளையாரை கரைத்து விட வேண்டும். பிள்ளையாரை கடைசி 30 வது நாளில் வழிபடும் பொழுது அவருக்கு மிகவும் பிடித்த மோதகம், சுண்டல் போன்றவற்றை தயாரித்து படைத்து வழிபட வேண்டும். அதன் பிறகு வேண்டுதல்களை வைத்து வழிபட்ட பின்பு ஆறு, குளம் அல்லது கிணறு போன்றவற்றில் உப்பு பிள்ளையாரை கரைத்து விட வேண்டும். இவ்வாறு செய்வதால் 30 நாட்களில் உங்கள் பிரச்சனைகள் தீரும். எதிரிகள் உங்களை விட்டு ஓடி விடுவர். மறைமுக சூழ்ச்சிகள் முறியடிக்கப்படும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment