Sunday, March 26, 2023

மனிதன் ' .......உயர்ந்த மனிதன்.

 ஆங்கிலத்தில PRICE, COST, VALUE ...... முதல் பார்வையில் இந்த மூன்று வார்த்தைகளும் synonyms போல....கிட்டத்தட்ட ஒரே பொருள் கொண்டவையாக தென்படும்.உற்று கவனித்தால்....மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம்.

Price....என்பது ஒரு பொருளை வாங்கும்போது, நமதாக்கிக்கொள்ளும்போது....நாம் கொடுக்கும் விலை. ஒரு கிலோ அரிசி.....55 ரூபாய் என்றால்அது அதன் price. ஒரு வீடு 55 லகரம் என்றால் அது வீட்டின் விலை...price.
Cost எனபது கணக்கில் வராத , காட்ட முடியாத....வேறு வித செலவுகள்.ஒரு பொருளை வாங்கப்போகும்போது ஆகும் petrol , நேரம், அலைச்சல், effort, மன உளைச்சல் ....எல்லாமும் சேர்ந்த ஒரு கலவை COST. IT cost me a full day ! It cost me my job! எத்தனையோ பிரயோகங்கள்.
இது இரண்டுமல்லாதது...மேலானது value. ஒரே பொருள் ஒருவருக்கு zero value வாகவும்.மற்றொருவருக்கு விலை மதிக்க முடியாததாகவும் அமையும்.குப்பையில. எறியப்பட்ட துண்டு காகித்த்தில் கோணா மாணாவென்று கிறுக்கி, I LOVE YOU MUMMY. என்று என் சிறு குழந்தை எழுதியது....என்னைப்பொறுத்தவரை......பல கோடி பெறும். பக்கத்து வீட்டாருக்கு அதன் value பூஜ்யம் .
காலத்தில் செய்த சிறு உதவி, நம் நன்மை கருதி அளிக்கப்படும் advice ....துவண்டபோது சொல்லும் ஆறுதல் வார்த்தைகள், unconditional acceptance....இப்படி பல விஷயங்கள்......விலை நிர்ணயிக்க முடியாதவையாக. விலைக்கு அப்பாற்பட்டவை. Valuable. Value உடையவை்
பொருளின் ( களின்) price தெரிந்தவன்......வியாபாரி.
அதன் ( அவைகளின்) cost தெரிந்தவன் குடும்பஸ்தன் .....prudent & frugal person
ஒவ்வொரு பொருளையும் அதன் value தெரிந்து கொண்டு போற்றுபவன் ,பொக்கிஷமாக காப்பாற்றுபவன் '.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...