Sunday, March 26, 2023

அமைச்சர் உதயநிதி ட்விட்டரில் .

 "தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், அவரை எம்பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது."

என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க?
முகநூல், ட்விட்டர் பதிவுகளில் திமுக அல்லது முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்து பதிவுகள் இடுபவர்கள் மீது திமுக நிர்வாகிகள் புகார் அளித்தால்,
பதிவிட்டவர்களை நள்ளிரவில் கைது செய்கிறது முதல்வரின் தலைமையில் செயல்படும் தமிழக அரசின் காவல்துறை.
அப்படி என்றால் இது தமிழக பாசிஸ்டுகளின் அச்சமா?
கடந்த காலங்களில் வட மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்துள்ள மக்கள் குறித்து பல திமுக தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியுள்ளனர்.
அவ்வாறு திமுகவினர் பேசிய வீடியோக்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணையத்தில் வெளியிட்டார்.
தவறாக பேசிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்காமல், அண்ணாமலை மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவும் தமிழக பாசிஸ்டுகளின் அச்சமா?
ராகுல் காந்திக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது,
'ராகுல் ஒரு குறிப்பிட்ட சமூகத்தையே அவமதிப்பு செய்யும் விதத்தில் பொது வெளியில் பேசியுள்ளதால் தான்.
ராகுலின் பாராளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதும், அதன் அடிப்படையில் தான்".
சரி போகட்டும்.
உங்கள் கட்சியின் கடந்த கால வரலாறு என்ன?
உங்கள் கட்சியின் அரசியலே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறானவர்களாக சித்தரித்து, அவர்களை கேவலமாக பேசி, ஜாதி பிளவினை தூண்டி விட்டு, அந்த தணலில் வளர்ந்தவர்கள் தானே நீங்கள்.
உங்களைப் போன்று தானே உங்கள் கூட்டாளியும் இருக்கிறார்.
இது தானே நீங்கள் இதுகாறும் காத்து வந்த சமூக நீதி.
ராகுல் காந்தியாவது பரவாயில்லை, அவர் தான் என்ன செய்கின்றோம் என்று அறியாத பச்சிளம் பாலகன்.
ஆனால் ராகுலின் தந்தையின் பெயரைக் கொண்ட உங்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் என்ன மாதிரியான கருத்தினை பதிவிட்டிருந்தார் என்பது உங்களுக்கு தெரியும் தானே?
”பெரியார் சொன்னதைப் போலத் தமிழகத்தில் பிராமணர்கள் இனப் படுகொலை செய்ய வேண்டும்."
இது உங்கள் செய்தி தொடர்பாளர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த செய்தியின் ஒரு பகுதி.
இந்த ஒற்றை வரி தான் உங்களது, உங்களது இயக்கத்தின் பாசிஸ மனப்பான்மைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
* ஒரு சமூகத்தின் மீது இனவெறி தாக்குதல் தொடுத்தார் பெரியார் என்பதையும் இந்த வரி உண்மையை பேசுகிறது.
* நாங்கள் இன்னும் அவரையே தொடர்ந்து வருகிறோம், வாழ்கிறோம் என்பதையும் பிரதிபலிக்கிறது.
* அனைத்து சமூக பிரச்சினைகளுக்கும் பிராமணர்கள் என்ற ஒற்றை சமூகமே காரணம் என்று இதுகாறும் வன்மத்தை விதைத்து தான் நீங்கள் ஓட்டுக்களை பெற்று அரசியல் செய்து வருகின்றீர்கள்.
உங்கள் ஆள் உதிர்த்த ஒற்றை வரி உங்களது கடந்த கால, நிகழ்கால பாசிச செயல்பாடுகளை ஆணித்தரமாக அல்லவா சொல்கிறது?
நீதிமன்றமும், பாரளுமன்றமும் தங்களது கடமையை செய்வதை
நீங்கள் பாசிசம் என்கிறீர்களா?
அல்லது
மேலே குறிப்பிட்ட கொடூரமான கருத்தினை பதிவிட்டிருந்த உங்களது கட்சி செய்தி தொடர்பாளர் மீது, உங்கள் இயக்க, கட்சி தலைமையே எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையே,
அதேபோல் நீதிமன்றமும் ராகுல் காந்தியின் அறிவற்ற உளறலை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றிருக்க வேண்டுமா?
வாய்க்கு வந்த படி பேசற நீங்கள் எல்லோரும் நல்லவங்க. ஆனால் அதை சட்டப்படி தட்டி கேட்கும் நீதிமன்றத்தையும், பாராளுமன்றத்தையும் அமைதியாக கவனிக்கும் மத்திய அரசு பாசிஸ்டா?
நல்லா இருக்குய்யா உங்க நியாயம்?
இவர்கள் தான்
"ஒற்றை கண் ஜனநாயகவாதிகள்"
இந்த தேசத்தின் சாபக்கேடுகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...