Friday, March 24, 2023

இது 2021 ஆகஸ்ட் மாதம் வந்த வெள்ளை அறிக்கையின் அடிப்படையில் வந்த கணக்கு...

 தமிழகத்தின் வருமானம் மிகவும் சரிந்து விட்டது. இதன் காரணமாக நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. குறிப்பாக 2016 - 21ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது இந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக வெள்ளை அறிக்கை கூறுகின்றது.

இதற்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல, கொரோனாவுக்கு முன்பு இருந்தே பொருளாதாரம் சரியத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் வருவாய் சரிய ஆரம்பித்து விட்டது.
இதே பஞ்சாப் ஆந்திர மாநிலங்களில் கூட இந்தளவுக்கு இல்லை என்றும் பிடிஆர் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது
வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு
வருவாய் பற்றாக்குறையானது அதிகரித்துள்ள இந்த நிலையில் நிதி பற்றாக்குறையும் மிக மோசமாக அதிகரித்துள்ளது எனலாம். குறிப்பாக அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தினை விட தமிழகத்தில் அதிகம். கடந்த 2017 -18ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 1% ஆக இருந்த நிதி பற்றாக்குறை, 2018 - 19ம் ஆண்டில் 0.9% ஆக குறைந்துள்ளது.
Goodreturns Tamil
முகப்பு செய்திகள்
குஜராத், மகாராஷ்டிராவை விட பின் தங்கிய தமிழ்நாடு.. தொடரும் நிதி பற்றாக்குறை.. வதைக்கும் கடன்..!

தமிழகத்தின் வருமானம் மிகவும் சரிந்து விட்டது. இதன் காரணமாக நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. குறிப்பாக 2016 - 21ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது இந்த 5 ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக வெள்ளை அறிக்கை கூறுகின்றது.
இதற்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல, கொரோனாவுக்கு முன்பு இருந்தே பொருளாதாரம் சரியத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் வருவாய் சரிய ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் மின் கட்டணம், பேருந்து கட்டணம் உயரப் போகிறதா..? பிடிஆர் சொல்வதென்ன..!
இதே பஞ்சாப் ஆந்திர மாநிலங்களில் கூட இந்தளவுக்கு இல்லை என்றும் பிடிஆர் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
வருவாய் பற்றாக்குறை அதிகரிப்பு
வருவாய் பற்றாக்குறையானது அதிகரித்துள்ள இந்த நிலையில் நிதி பற்றாக்குறையும் மிக மோசமாக அதிகரித்துள்ளது எனலாம். குறிப்பாக அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தினை விட தமிழகத்தில் அதிகம். கடந்த 2017 -18ம் ஆண்டில் மகாராஷ்டிராவில் 1% ஆக இருந்த நிதி பற்றாக்குறை, 2018 - 19ம் ஆண்டில் 0.9% ஆக குறைந்துள்ளது.
சிறிய ஒப்பீடு
ஆனால் இதே கர்நாடகாவில் 2017 -18ம் ஆண்டில் 2.3% ஆக இருந்த நிதி பற்றாக்குறை, 2018 - 19ம் ஆண்டில் 2.5% ஆக அதிகரித்துள்ளது.
இதே காலகட்டத்தில் குஜராத்தில் 1.6%ல் இருந்து, 1.8% ஆக அதிகரித்துள்ளது.
ஆனால் தமிழகத்தில் 2017 - 18-லேயே 2.7% ஆக இருந்த நிதி பற்றாக்குறை, 2018 - 19ல் 2.9% ஆக அதிகரித்துள்ளது. இது கொரோனாவின் காரணமாக வருவாய் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையில், செலவுகளும் அதிகரித்துள்ளன. இது இன்னும் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கவே வழிவகுத்துள்ளது.
2006 - 07ம் ஆண்டில் வருவாய் உபரியாக 2,648 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே காலத்தில் நிதி பற்றாக்குறையானது 3,956 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
2010 - 11ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 2,729 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே காலத்தில் நிதி பற்றாக்குறையானது 16,647 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் பிறகு 2014 - 15ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 6,408 கோடி ரூபாயாகவும், நிதி பற்றாக்குறையும் 27,162 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது 2020 - 21ம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 61,320 கோடி ரூபாயாக மிக மோசமான அளவில் அதிகரித்துள்ளது. இதே காலத்தில் நிதி பற்றாக்குறை 92,305 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
"தொடர்ந்து அதிகரித்து வந்த வருவாய் பற்றாக்குறை"
மொத்தத்தில் கடந்த 2012 - 13ம் ஆண்டு வரையில் வருவாய் விகிதம் சற்று உபரியாக இருந்த நிலையில், அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு மோசமாக பற்றாக்குறை என்பது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
இடையில் 2009 - 10, 2010 - 11ம் ஆண்டுகளில் சற்று பற்றாக்குறை இருந்தது. அதன் பிறகு 2 ஆண்டுகளாக சற்று உபரி அதிகரித்தது.
2012 - 13ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளது. அதிலும் கடந்த 2019 - 20ம் ஆண்டில் 35,909 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறையானது, 2020 - 21ல் 61,320 கோடி ரூபாயாக மிக மோசமாக அதிகரித்துள்ளது.
"தொடர்ந்து அதிகரித்து வரும் நிதி பற்றாகுறை"
இதே நிதி பற்றாக்குறை என எடுத்துக் கொண்டால், 2006 - 07ம் ஆண்டில் வெறும் 3,956 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2009 - 10ம் ஆண்டில் ஐந்து இலக்காக அதிகரித்து 11,809 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்துள்ளது. இடையில் சில ஆண்டுகள் குறைவது போல குறைந்திருந்தாலும், 2019 - 20ல் 60,179 கோடி ரூபாயாகவும், 2020 - 21ல் 92,305 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
கடன் அதிகரிப்பு
தொடர்ந்து வருவாய் குறைந்து வந்த நிலையில், கடன் விகிதமும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வந்துள்ளது.
குறிப்பாக கடந்த 2006 - 2007ம் ஆண்டின் இறுதியில் 60,170.01 கோடி ரூபாயாக இருந்த கடன், அதன் பிறகு 2010 - 2011ல் 1,01,349.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது 2015 - 16ல் 2,11,066 கோடி ரூபாயாகவும், 2017 - 2018ல் 3,10,429.19 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது இந்த ஆண்டின் தற்போது வரையில் 5,70,189.29 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது 2006 - 2007க்கு பிறகு ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
மற்ற மாநிலங்களில் கடன் விகிதம் ஒப்பீடு:-
தமிழகத்தினை விட மிகப்பெரிய மாநிலமான மகாராஷ்டிராவின் கடன் மதிப்பு மார்ச் 2019 நிலவரப்படி, 4,38,841.80 கோடி ரூபாயாகும்.
இதே காலகட்டத்தில் கர்நாடகாவின் கடன் மதிப்பு, 2,86,328.70 கோடி ரூபாயாகும்.
குஜராத்தின் கடன் மதிப்பு இதே காலக்கட்டத்தில் 2,98,755.10 கோடி ரூபாயாகும்.
தமிழகத்தின் கடன் தொகையானது இந்த காலகட்டத்தில் 4,01,503.80 கோடி ரூபாயாகும்.....
May be an image of one or more people and text that says 'இதில் என்ன பெருமை இருக்கு முதல்வரே.? 2021 ஆம் ஆண்டு முதல் தி.மு.க. ஆட்சி காலத்தில் அதிகரித்த கடன் தொகை 2021-22 2022-23 கடன் 2023-24 கடன் 5,18,796 கோடி ந.6,30,000 கோடி ந.7,28,000 கோடி கடன் ரூ.3,53,561 கோடி அதிமுக ஆட்சிக்கு வந்து 10 வருட காலத்தில் வாங்கிய கடன் ஆட்சிக்கு வந்த 2 வருட காலத்தில் திமுக வாங்கி இருக்கும் கடன் விலைவாசி உயர்வை மக்கள் மீது சுமத்தாமல் கொரோனா & GST வரி இழப்பை தாண்டி அதிமுக வாங்கிய கடன் சதவீதம் 21.22 % (GDP அளவில்) ஆனால் இன்று விலைவாசியை உயர்த்தி மக்கள் நல திட்டங்களை ரத்து செய்த பின்பும் விடியா ஸ்டாலின் அரசு வாங்க இருக்கும் கடன் சதவீதம் 26 % (GDP அளவில்) ரூ.2,72,000 கோடி'
All reac

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...