Thursday, March 23, 2023

எனக்குப் பிடித்த ரகுவரனின் முகம்.

 ‘முகவரி’ திரைப்படத்தின் மொட்டை மாடி காட்சி இன்றளவும் அனேக சினிமா ரசிகர்களுக்கு விருப்பமான காட்சியாக இருக்கும். குடும்பத்தினர் வானவில்லை ரசித்துக்கொண்டிருப்பார்கள். அனைத்துத் துண்டுச் சீட்டுகளிலும் ஶ்ரீதர் என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் அஜித் ரகுவரனிடம் வருவார். அஜித்திடம் ‘ஶ்ரீதர்.. நீ வானவில் பாக்கல’ என்று ரகுவரன் கேட்க ‘பாத்துட்டண்ணே’ என்று பதிலளிப்பார் அஜித். கையிலிருக்கும் சீட்டுகளை அஜித் காட்ட ரகுவரனின் முகம் புன்னகைப் பூத்திருக்கும். அப்படியே தம்பியின் தோளில் கைப்போட்டு அணைத்து ஆசுவாசமாக அழைத்துச் செல்வார் ரகுவரன். தம்பி மீதான பாசத்தின் வெளிப்பாடாக இந்தக் காட்சி அமைந்திருக்கும். ‘முகவரி’ படத்தில் இருந்த அண்ணன் கதாப்பாத்திரத்திற்கு நேரெதிர் கதாப்பாத்திரமாக ‘உயிரிலே கலந்தது’ திரைப்பட்டத்தில் சூர்யாவுக்கு அண்ணனாக நடித்திருப்பார் ரகுவரன். பொறாமையில் தம்பியையே கொலை செய்யத் துணியும் கொடூரமான அண்ணனாக மி்ரட்டியி்ருப்பார்.

இரண்டுமே அண்ணன் கதாப்பாத்திரம். ‘முகவரி’ படத்தில் ஆசையாக ரசிக்க வைத்த ரகுவரன் ‘உயிரிலே கலந்தது’ படத்தில் எரிச்சலாக வெறுக்கச் செய்திருப்பார். இதுதான் ஒரு நடிகனின் வெற்றி. ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரத்தின் மூலம் அந்தக் கதாப்பாத்திரத்தின் தன்மையை பார்ப்பவர்களுக்கு உணர்த்துவது. ரகுவரன் அதில் திறமையானவர். ரகுவரனை வில்லன் நடிகர் என்ற ஒற்றை அடைமொழியில் சுருக்கிவிடுவது அபத்தம். கடலைக் காட்டி குளம் என்று சொல்வது போல அது. தமிழ் சினிமா கண்டெடுத்த ஆகச்சிறந்த தூய்மையான நடிகர்களில் ரகுவரன் மிகமுக்கியமானவர் அல்லவா அவர்.
இன்று ரகுவரனின் நினைவு தினம்.
ரோகினி தான் பகிர்ந்திருந்த ட்விட்டர் பதிவில் ‘ரகுவரன் இன்று உயிரோடு இருந்திருந்தால் இன்றைய சினிமாவை மிகவும் விரும்பியிருப்பார், ஒரு மகிழ்ச்சியான நடிகராகவும் இருந்திருப்பார் ’ என்று ரகுவரனை நினைவுகூர்ந்திருந்தார். அத்தனையும் சத்தியமான வார்த்தைகள்.
வெகுசில நடிகர்களால்தான் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொண்டு அந்த அந்த காலக்கட்டத்தின் ரசிக எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வார்கள். 80கள், 90கள் தொடங்கி 2000ஆம் ஆண்டுக்குப் பிறகும் ரகுவரன் வேறுபட்டுக்கொண்டே வந்தார். இந்த தசாப்தத்திலும் வில்லனாக குணச்சித்திர நடிகராக சிறந்து விளங்கியிருப்பார்.
‘முதல்வன்’ திரைப்பபடத்தில் பழுத்த அரசியல்வாதி அரங்கநாதனாக நடித்தபோது அவருக்கு வயது வெறும் 40தான். ஆனால், அந்த வயதுக்கான சாயலே இல்லாமல் கதாப்பாத்திற்கேற்ற அனுபவத்தை நடிப்பில் காட்டியிருப்பார். இயற்கையில் கருணையில் இன்று அவர் இருந்திருந்தால் அவருக்கு வயது 65. ஒரு மூத்த நடிகராக இன்றைய இளம் இயக்குநர்கள் நிச்சயம் அவரைக் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள்.
சினிமா காட்டும் முகங்கள் என்றுமே நிஜத்திற்கு அருகில் செல்லாது. சினிமா காட்டும் ரகுவரனின் நிழல் முகத்தைவிட அவரது நிஜ முகம் மிகவும் அழகானது. அதற்கு உதாரணம்தான் அவர் காதலைப் பற்றிச் சொன்னது. ஆனந்த விகடனில் ‘நினைவோ ஒரு பறவை’ என்ற தொடரில் தனது அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்.
அதி்ல் அவர் சொன்னது.
“‘காதல்னா இதுதாம்பா’ன்னு தனியா பிரிச்சு எடுத்து பாக்கெட் போட்டு லேபிள் ஒட்ட எனக்குத் தெரியாது. ஆனா உணர்ந்திருக்கேன்.
மனசுக்குப் பிடிச்ச விஷயத்த ஆராதிக்குறதுதான் லவ். நம்ம மாதிரி பசங்களுக்குத் தேவப்பட்ற ஆறுதல், ஆதரவு, அன்பு எல்லாமே ஒரே பொண்ணுகிட்ட கிடச்சுட்றது அல்லது கிடச்சதா நாம ஃபீல் பண்றது தான் லவ்.
‘காதல் ஒரு அனுபவம் பாஸ். அது வேணும்’!
அதே பகுதயில்
எனக்குப் பிடித்த ரகுவரனின் முகம்.
“திருவிழாவுக்குப் போனா சாமிய கும்பிட்றத விட திருவிழால தொலஞ்ச குழந்தைய கொஞ்சுற ஆள் சார் நான்” என்று சொல்லும் ரகுவரனின் relatable முகம்.
May be an image of 2 people and people standing
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...