Friday, March 24, 2023

Tempo build up ஆகி வேலை சீக்கிரம் முடியும்.

 கல்யாண வீடுகளில் , நண்பர்கள் உறவினர்கள் வட்டமாக அமர்ந்து தாம்பூலப்பைதயார் செய்வார்கள். (நான் சொல்வது Contractors / event managers entry செய்வதற்கு முந்திய கால கட்டம்) .....நடுவில்....ஒவ்வொருவர் எதிரிலும் தேங்காய், வெற்றிலை, பாக்கு, குங்குமம், மஞ்சள் , தட்சணைக்கு நாணயம் எல்லாம் இருக்கும். ஒருவர் தாம்பூல பையை பிரிக்க,அடுத்தவர் வெற்றிலை,அடுத்தவர் பாக்கு அவருக்கு அடுத்தவர்தேங்காய்.......இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு item ஆக போட்டு....கடைசியில் கூடையை சேரும். Production ல். assembly line போல்., relay system.

இவ்வாறு செய்வதால் எந்த item மும் விட்டுப்போகும் chances குறைவு. Tempo build up ஆகி வேலை சீக்கிரம் முடியும்.அலுப்பு தெரியாது. சீர் வரிசை பட்சணங்களும் இதே முறையில்....ஒருவர் முறுக்கு,ஒருவர் பொரி உருண்டை......so on and so forth pack செய்வார்கள்
இப்போது இதே system பெரிய super marketகளில். ஒரு எலுமிச்சை, 50 கிராம் இஞ்சி.....இப்படியெல்லாம் நம் தேவைக்கேற்ப வாங் க முடியாது. Minimum 4 / 6 எலுமிச்சை கொண்ட packs......ஒரு கிலோ உருளை,வெங்காயம் இப்படித்தான் கிடைக்கும். கடையில் திரைக்கு பின் pack செய்யும் இடத்தை எட்டிப்பார்த்தால் கல்யாண வீடு போலவே இருக்கும். வட்டமாக வேலையாட்கள். ஒருவர் நல்ல எலுமிச்சை / உருளை. / வெங்காயம்...இரண்டிரண்டு போடுவார்.அடுத்தவர் அழுகிய இரண்டை போடுவார். மூன்றாமவர்....முள்ளங்கியானால் முற்றியது, சௌ சௌ ஆனால் தாடி முளைத்தது, உருளையானால் கண் முளைத்தது, எலுமிச்சை பச்சையாகவும் காயாகவும் இருப்பது .....இப்படி தேர்ந்தெடுத்து போடுவார்.
ஆனால் இறுதியில் ,ஓட்டை ஓட்டை packet களில் அழகாக அடுக்கி வைக்கப்படும்.
தாம்பூலம் சுப காரியம் முடிந்த மகிழ்ச்சியில் கொடுக்கப்பட்டு, மணமக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற நல்லெண்ணதுடன் பெறப்படுவது.
கடைகளின் assembly line products ஓ நாம் கொடுக்கும் பணத்திற்கு...அவர்கள் கொடுப்பதை வேறு வழியின்றி தூக்கிக்கொண்டு வருவது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...